Saturday, January 31, 2009

ஜோன்...

அவனுக்கு யோகேஸ்வரன் என்று பெயர் அவனுக்கு யோகங்கள் இருக்கிறதாலேயே அவனுக்கு அப்படி பெயர்வைத்தார்களோ அல்லது பெயர் அதுவாயிருந்ததில் அவன் யோகக்ககாரனாய் இருக்கிறானோ எதுவாய் இருந்தாலும் அவன் யோகமுள்ளவனாய் இருக்கிறான்...

ஜோன் என்று நான் அழைக்கிற யோகேஸ்வரனுக்கு மாலினி என்கிறழைக்கப்படுகிற பிரேமமாலினி என்கிற இன்னொரு யோகம் கூடிவருகிற தருணம் நாளைக்கு (01-02-2009)நிகழவிருக்கிறது...

என்ன செய்வது ஜோன் உன்னுடைய கல்யாணத்துக்கு மின்னஞ்சலும் ஆகக்கூடியதாய் ஒரு தொலைபேசி உரையாடல் வழியான வாழ்த்தும் இன்னொருவரால் ஆயத்தம் செய்யப்பட்ட பரிசுப்பொருளையும் தர முடியும் என்னால் வேறென்ன செய்ய? ஊரின்,நண்பர்பகளின் எத்தனையோ கல்யாணங்களில் கூடிச்செய்கிற கும்மாளங்கள், நண்பர்கள் மொத்தமாய் சேர்ந்திருக்கிற சந்தோசங்களின் பொழுதுகளிலெல்லாம் தோன்றுவதே இல்லை நம்முடைய கல்யாணங்களில் சேந்திருப்போமா என்கிற எண்ணம்; இப்பொழுது பார்த்தாயா வாழ்க்கை எப்படி மாறிப்போயிருக்கிறது ...



உண்மைதான் காலம் சில விசயங்களை தீர்மானிக்கிறது.

உனக்கு வாழ்த்தெழுத வந்தவனை நினைவுகளும் நிகழ்காலமும் திசை திருப்பிக்கொண்டிருக்கிறது ஜோன்; ஊரின் கல்யாணக்கதைகளை வேறொரு பதிவில் எழுதலாம் இப்பொழுது.

எப்படி வாழ்த்துவதென்று தெரியவில்லை ஜோன், என்ன சொல்ல? நல்லா இரு மச்சான்!
மிக இனிமையானதொரு வாழக்கை உங்களுக்கு வசமாகட்டும்...
சந்தோசங்கள் சூழ்கிற காதல் நிறைந்ததொரு வாழ்க்கை இரண்டு நெஞ்சங்களின் நெருக்கத்தில் நிகழட்டும்.


ஜோன் நீ புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன் இறுக்கமான சூழலில் நிகழ்கிற உன் திருமணத்துக்கு என்னால் எதையும் செய்ய முடியவில்லை மனம் நிறைவான வாழ்த்துக்களை தவிர.





31/01/2009
11.20pm.
k.S.A.


ஜோனுக்கு தெரியக்கூடாத குறிப்பொன்று:

கடந்த இரண்டு நாட்களாக இணையத்துக்கு வந்தாலும் என்னுடைய வலைப்பக்கமே வராமலிருந்திருக்கிறேன். உள்ளே நிரம்புகிற அதிகரித்த வலிகள் நிரம்பிய சொற்களின குமுறல்கள் அடக்க முடியாமல் இருக்கிறது, அவை என் தேசத்தின் தெருக்களில் கேட்கிற சபிக்கப்பட்டவர்களின் இறுதிக்குரல்களாய் இருக்கலாம்!

குமுறுகிற சொற்களை அமுக்கி வைத்திருக்கிறேன் அவை வெளியெ விழுந்து செத்துவிடக்கூடாதென்பதில்.

அவை இருக்கட்டும் ஜோன்...

13 comments:

தமிழன்-கறுப்பி... said...

மனம் நிறைந்த திருமணவாழ்த்துக்கள் ஜோன்...

Anonymous said...

vallthukal

Anonymous said...

மனம் நிறைந்த திருமணவாழ்த்துக்கள் ஜோன்...

கானா பிரபா said...

ஜோன் தம்பதிக்கு வாழ்த்துக்கள்.

ஏதோ சொல்ல வந்தீங்கள் ஆனா அமுக்கீட்டீங்க ;)

Divyapriya said...

//ஊரின்,நண்பர்பகளின் எத்தனையோ கல்யாணங்களில் கூடிச்செய்கிற கும்மாளங்கள், நண்பர்கள் மொத்தமாய் சேர்ந்திருக்கிற சந்தோசங்களின் பொழுதுகளிலெல்லாம் தோன்றுவதே இல்லை நம்முடைய கல்யாணங்களில் சேந்திருப்போமா என்கிற எண்ணம்; இப்பொழுது பார்த்தாயா வாழ்க்கை எப்படி மாறிப்போயிருக்கிறது ...//

யாதர்த்தம் நிறைந்த வரிகள்! உங்க நண்பருக்கு திருமண வாழ்த்துக்கள்.

Poornima Saravana kumar said...

திருமணவாழ்த்துக்கள் ஜோன்...

புதியவன் said...

திருமணவாழ்த்துக்கள் ஜோன்...

சந்தனமுல்லை said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள் ஜோனுக்கு எங்கள் சார்பாகவும்! :-)

சந்தனமுல்லை said...

//ஜோன் நீ புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன் இறுக்கமான சூழலில் நிகழ்கிற உன் திருமணத்துக்கு என்னால் எதையும் செய்ய முடியவில்லை மனம் நிறைவான வாழ்த்துக்களை தவிர//

இதுதானே தேவை தமிழன் - கறுப்பி! நிச்சயம் புரிந்துக் கொள்வார்..ஜோன்!

சந்தனமுல்லை said...

//உள்ளே நிரம்புகிற அதிகரித்த வலிகள் நிரம்பிய சொற்களின குமுறல்கள் அடக்க முடியாமல் இருக்கிறது, அவை என் தேசத்தின் தெருக்களில் கேட்கிற சபிக்கப்பட்டவர்களின் இறுதிக்குரல்களாய் இருக்கலாம்!
//

மனதைக் கனக்கச் செய்கின்றன் இவ்வரிகள்!! :(

நசரேயன் said...

மனம் நிறைந்த திருமணவாழ்த்துக்கள்

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நண்பர்களே..

ராஜ நடராஜன் said...

திருமண வாழ்த்துக்கள்.