Saturday, November 22, 2008

ஒரு மைதானமும் ஒரு தேவதையும் நானும்...

வியர்வையில் நனைகிறதுன் மேலாடை
மைதானமெங்கும் வழிகிறது அழகு!

எந்தவித தயக்கங்களும் இல்லாமல் யாருமில்லாத சுதந்திரத்தில் வியர்வை நனைக்க, அழகு தெறிக்க மைதானத்தில் பயிற்சி செய்கிற பெண்களை பார்த்திருக்கிறீர்களா அது ஒரு தனி அனுபவம்..அதுவும் அவள் மனதுக்கு நெருக்கமானவள் ஒருத்தியாயிருக்கையில் அற்புதமான அனுபவமாகி விடுகிறது அது!

காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற கடைமையை அறிமுகம் செய்தவள் அவள்! எனக்கும் அதிகாலைத்தூக்கத்துமான நெருக்கத்தை பறித்துவிட்டிருந்தாள் காலையில் அம்மாவோ அக்காவோ தண்ணி தெளிக்கும் வரை படுக்கையிலிருந்து எழுந்திருக்காத என்னை இருள் விலகாத அதிகாலையில் பனி படர்ந்த மைதானதின் புல் வெளியில் நடக்க விட்டிருந்தாள்.

யாரோடும் அதிகம் பேசாத அவள் என்னை மட்டும் சேர்த்துக்கொண்டதில் சந்தோசப்பட்டுக்கொண்டிருந்த மனதை; மிக மென்மையான இயல்பு (அவள் எப்படி அவ்வளவு வேகமும் திடமும் வைத்திருந்தாள் என்பது நான் இன்னமும் அதிசயிக்கிற விசயம்) வெகு நிதானமான பெண்மை, முடிவெடுக்கிற ஆற்றல், நிறைவான தோற்றம் என மொத்தமாய் மிக அதிகமாய் வன் முறைசெய்து கொண்டிருந்தாள் அவள்...


குறுந்தூர,நெடுந்தூர ஓட்டங்கள்,நெட் போல்,கிரிக்கெட்,எல்லே,வொலிபோல் என அவள் கலக்காத விளையாட்டே இல்லை எனலாம்.மாவட்டம், மாகாணம் என பல மட்டப் போட்டிகளில் அவளை சேர்த்துக்கொண்ட பெருமையை பெற்றிருந்தது அவள் பள்ளிக்கூடமும் எங்கள் ஊர் கழகமும்(Sports Club).

வெள்ளை நிற ‘ரீசேட்டும்’ கறுப்பு அல்லது அடர் நீல நிற ‘ரக்சூட்டும்’ வெள்ளை நிற சப்பாத்துகளும் என அவள் பயிற்சி செய்வது அழகின் அதிகாரங்கள் நிரம்பிய பட்டத்து இளவரசி ஒருத்தியின் பயிற்சியை நினைவு படுத்திப்போகிற நிகழ்வு!
அழகு தெறிக்க,வளைவுகள் அதிர,பெண்மையின் இயல்பான வாசனைகளோடு,வியர்வையில் நனைகிற அழகுகளோடு, மிக முக்கியமானதாய் என்னை தவிர்க்கவில்லை என்கிற மிக நெருக்கமானதான சினேகங்களோடும் என் அதிகாலைகளை அற்புதமாக்கிக்கொண்டிருந்தாள்...

நான் மைதானத்துக்கு அவளுக்காகத்தான் வருகிறேன் என்பது தெரிந்திருந்தாலும் என்னை தனக்கு நெருக்கமானவனாய் உணர்கிறதாகிய நம்பிக்கையை எனக்கு அவள் செயல்கள் மற்றும் சினேகமான சிரிப்புகள் மூலம் உணதர்த்திக்கொண்டாள்....இன்னொரு வகையில் நான் வருவது தனக்கு திருப்தியாயிருந்ததாயும் அவளால் என்னை கவனிக்காமல் இருக்க முடியாதிருந்ததையும் பின்னய சம்பாஷணைகளின் பொழுதுகளில் குறிப்பிட்டிருக்கிறாள்...


பள்ளிக்கூட வயதில் அது தருகிற சுகம் வாழ்க்ககையின் பக்கங்களில் எழுதாமல் நிலைக்கிற ரசனைப்பொழுதுகள்,இன்னொரு மொழியில் தேவைதையின் தருணங்கள்!எனக்கும் என் அதிகாலைத்தூக்கத்துமான உறவை தகர்த்த பெருமையும பின்னர் மொத்த தூக்கத்தையும் பறித்த பெருமையும் இன்னமும் அவளுக்கிருக்கிறது!


என்ன ஒரு சோகம் அவள் கழகத்துக்குரிய அல்லது பள்ளிக்கூடத்துக்குரிய சீருடையில் மைதானமொன்றில் போட்டிக்காக ‘நெட்போல்’ விளையாடுவதைப்பார்க்கிற தவம் அல்லது வரம் எனக்கு இதுவரையும் கிடைக்கவில்லை இனிமேலும் கிடைக்கப்போவதில்லை...

//
உன் வியர்வைத்துளிகள்
விழுந்த இடங்களில்
வண்ணத்துப்பூச்சிகள்...!

//
காற்றில் கரைகிறதுன்
வியர்வைத்துளிகள்
மைதானமெங்கும் பூவாசம்...!

//
நீ
காலைப் பயற்சிக்கு வருவாய் என்றே
விடியாமல் காத்திருக்கிறது
மைதான வெளி!

//
அவள்
வந்து போக ஆரம்பித்த பிறகு
வந்து போகின்றன சில பறவைகளும்
எங்களுர் மைதானத்துக்கு...

//
நீ
பயிற்சிக்கு வரும் வரை
காத்திருந்து பூக்கின்றன
ஆங்காங்கே இருக்கிற பெயர்
தெரியாத பூச்செடிகள்...

//
அவள்
ஓடிக்களைத்தில்
மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது
காற்று!

//
பனி-
பூத்திருக்கிறது மைதானம்
அவள்-
பயிற்சிக்கு வருகிற
அதிகாலைக்காக...

//
அதிர்ந்து வளைகிற அழகுகளில்
சிதறுகிறதென் கவனம்...
உன் மேலாடையில் வழிகிற
காற்றில் கரைகிறதென் சுவாசம்...
கன்னங்களில் இழைகிற கூந்தல்கற்றைகளில்
சிக்குகிறதென் கண்கள்...
நீ இழுத்து விடுகிற மூச்சில்
நிறைகிறதென் உயிர்!


பின் குறிப்பு:
//
இத்தனை நெருக்கமாய் இருந்தும் அவள் நெட்போல் விளையாடுகிறதைப்பார்க்கிற சந்தர்ப்பம் எனக்கு அமைந்திருக்கவில்லை அது ஒரு மாதிரியான தவிப்பாகத்தான் இன்றளவும் இருக்கிறது.

//
அவள் இப்பபொழுது எந்த பயிற்சியும் செய்வதில்லை விளையாட்டுகளில் பங்கெடுப்பதும் இல்லை பின்னர் ஒருவேளை நிகழக்கூடும் நிலவொளியில் நிழக்ககூடும் முன்பு நிகழ்திருக்கிறதைப்போலான பயிற்சியும் ஒரே ஒரு பார்வையாளனுக்கும் அவனே போட்டியானளனுமாயிருக்கிற நெட்போல் ஆட்டமும்.

//
காலம் மாற்றங்களை
காவிக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!

45 comments:

Anonymous said...

பெண் விடுதலை பற்றிப் பேசுகின்ற சிநேகிதி அக்கா, சந்திரவதனா அம்மா முதலியோர் கண்டிப்பாக இவரது நிகழ்ச்சியைக் கேட்டு இவருக்கு நல்ல விளக்கம் கொடுக்க வேணும்.!

Thamiz Priyan said...

தல... தலை கிறுகிறுன்னு சுத்திடுச்சு...:))

Thamiz Priyan said...

///அவள் கழகத்துக்குரிய அல்லது பள்ளிக்கூடத்துக்குரிய சீருடையில் மைதானமொன்றில் போட்டிக்காக ‘நெட்போல்’ விளையாடுவதைப்பார்க்கிற தவம் அல்லது வரம் எனக்கு இதுவரையும் கிடைக்கவில்லை இனிமேலும் கிடைக்கப்போவதில்லை...////

அதான் கல்யாணம் முடிஞ்சு பிள்ளை பெத்துட்டாங்களே.. இப்ப விளையாட வந்தா அவங்க புருஷன் பிச்சிப் போட மாட்டாரு...;))

Thamiz Priyan said...

நல்லா தான்ய்யா எழுதி இருக்கிறீரு..:)

ஆயில்யன் said...

// தமிழ் பிரியன் said...
///அவள் கழகத்துக்குரிய அல்லது பள்ளிக்கூடத்துக்குரிய சீருடையில் மைதானமொன்றில் போட்டிக்காக ‘நெட்போல்’ விளையாடுவதைப்பார்க்கிற தவம் அல்லது வரம் எனக்கு இதுவரையும் கிடைக்கவில்லை இனிமேலும் கிடைக்கப்போவதில்லை...////

அதான் கல்யாணம் முடிஞ்சு பிள்ளை பெத்துட்டாங்களே.. இப்ப விளையாட வந்தா அவங்க புருஷன் பிச்சிப் போட மாட்டாரு...;))
///


படுவா ராஸ்கோலுங்களே!

கதை இப்படியா?


அவுரு வந்து பிய்க்கிறது இருக்கட்டும் நாங்க எல்லாம் சேர்த்து பிச்சுடுவோம் பிச்சு

சாக்கிரதை!

ஆயில்யன் said...

ஒ.கே கும்மி ஆடலாமா பாஸ்!

ஆயில்யன் said...

//வியர்வையில் நனைகிறதுன் மேலாடை
மைதானமெங்கும் வழிகிறது அழகு!
//

ஆட்கள் ஓட வேண்டிய மைதானத்தில்

அழகு ஓடுகிறது!

ஓடட்டும்!

ஓடட்டும்!

ஆயில்யன் said...

//எந்தவித தயக்கங்களும் இல்லாமல் யாருமில்லாத சுதந்திரத்தில் வியர்வை நனைக்க, அழகு தெறிக்க மைதானத்தில் பயிற்சி செய்கிற பெண்களை பார்த்திருக்கிறீர்களா அது ஒரு தனி அனுபவம்..///

ஆமாம் ராசா!

அனேகமா உதை படாம நீ மட்டும்தான் பார்த்திருப்பன்னு நாங்க நினைக்கிறோம்!

ஆயில்யன் said...

//அவள் மனதுக்கு நெருக்கமானவள் ஒருத்தியாயிருக்கையில் அற்புதமான அனுபவமாகி விடுகிறது அது///

ம்

ம்

நினைச்சுப்பார்த்த நல்லாத்தான் இருக்கு!

ஆயில்யன் said...

//இருள் விலகாத அதிகாலையில் பனி படாந்த மைதானதின் புல் வெளியில் நடக்க விட்டிருந்தாள்//


பாவம்ய்யா புல்!


பச்சை பசேல் நிறங்களில் நடந்தவன் நீ!


சின்ன சிறு புல்வெளிகள் மரணிக்க அதை கடந்தவன் நீ!

ஆயில்யன் said...

//அவள் எப்படி அவ்வளவு வேகமும் திடமும் வைத்திருந்தாள் என்பது நான் இன்னமும் அதிசயிக்கிற விசயம்///

பொளேரென்று அறைந்த அந்த அறையில்,

உமக்கு அந்த வேகமும் திடமும் நன்கு புரிந்து போயிருக்கின்றது!

ஆயில்யன் said...

//காலம் மாற்றங்களை
காவிக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!//

ஆமாம் பாஸ்! வீட்டுக்குபோக நேரமாயிடுச்சு இப்படியே விட்டுட்டு மீ த எஸ்ஸாகிக்கிறேன்!

(கமெண்ட்களி இத்தனை மாற்றங்கள் போதும்தானே!)

தமிழன்-கறுப்பி... said...

மெல்போர்ன் கமல் said...
\
பெண் விடுதலை பற்றிப் பேசுகின்ற சிநேகிதி அக்கா, சந்திரவதனா அம்மா முதலியோர் கண்டிப்பாக இவரது நிகழ்ச்சியைக் கேட்டு இவருக்கு நல்ல விளக்கம் கொடுக்க வேணும்.!
\\

இது எனக்கு சொன்ன விசயமில்லை எண்டு நினைக்கிறன் கமல் அப்படித்தானே...;)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
தல... தலை கிறுகிறுன்னு சுத்திடுச்சு...:))
\\

ஏன் என்னாயிடுச்சு அந்த நாள் ஞாபகமோ...;)

தமிழன்-கறுப்பி... said...

\\
அதான் கல்யாணம் முடிஞ்சு பிள்ளை பெத்துட்டாங்களே.. இப்ப விளையாட வந்தா அவங்க புருஷன் பிச்சிப் போட மாட்டாரு...;))
\\

அடப்பாவி மனுஷா11 சிவனேன்னு படிச்சுட்டிருக்கிற பொண்ணுக்கு கல்யாணமாகி குழந்தையும் இருக்கின்னுறீரே நியாயமா...;)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
நல்லா தான்ய்யா எழுதி இருக்கிறீரு..:)
\\

நன்றி நன்றி..ஹிஹி...:)

தமிழன்-கறுப்பி... said...

\\
படுவா ராஸ்கோலுங்களே!

கதை இப்படியா?

அவுரு வந்து பிய்க்கிறது இருக்கட்டும் நாங்க எல்லாம் சேர்த்து பிச்சுடுவோம் பிச்சு

சாக்கிரதை!
\\

சரிங்கண்ணே..:)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//எந்தவித தயக்கங்களும் இல்லாமல் யாருமில்லாத சுதந்திரத்தில் வியர்வை நனைக்க, அழகு தெறிக்க மைதானத்தில் பயிற்சி செய்கிற பெண்களை பார்த்திருக்கிறீர்களா அது ஒரு தனி அனுபவம்..///

ஆமாம் ராசா!

அனேகமா உதை படாம நீ மட்டும்தான் பார்த்திருப்பன்னு நாங்க நினைக்கிறோம்!
\\

இதுக்கெல்லாம் குடுத்து வைக்கணும்ணே பொறாமைப்படாதிங்க...

Anonymous said...

காலம் மாற்றங்களை
காவிக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!

மிகவும் யதார்த்த பூர்வமாக உள்ளது!

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//அவள் மனதுக்கு நெருக்கமானவள் ஒருத்தியாயிருக்கையில் அற்புதமான அனுபவமாகி விடுகிறது அது///

ம்

ம்

நினைச்சுப்பார்த்த நல்லாத்தான் இருக்கு!
\\

அதத்தானே சொல்ல வந்திருக்கோம்...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\
//இருள் விலகாத அதிகாலையில் பனி படாந்த மைதானதின் புல் வெளியில் நடக்க விட்டிருந்தாள்//


பாவம்ய்யா புல்!
பச்சை பசேல் நிறங்களில் நடந்தவன் நீ!
சின்ன சிறு புல்வெளிகள் மரணிக்க அதை கடந்தவன் நீ!
\

அண்ணே எதுக்கிந்த பில்டப்பு..?!

பாவம்ணே நான்..;)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//அவள் எப்படி அவ்வளவு வேகமும் திடமும் வைத்திருந்தாள் என்பது நான் இன்னமும் அதிசயிக்கிற விசயம்///

பொளேரென்று அறைந்த அந்த அறையில்,

உமக்கு அந்த வேகமும் திடமும் நன்கு புரிந்து போயிருக்கின்றது!
\\

அவளிடம் அடி வாங்கி இருந்தால் நீங்கள் சொல்றது உண்மையா இருக்கலாம்..ஆனா அது நடக்கலையே..:)
(சைபை நாகரிகம் கருதி உண்மைகள் மறைக்கப்படுகிறது)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//காலம் மாற்றங்களை
காவிக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!//

ஆமாம் பாஸ்! வீட்டுக்குபோக நேரமாயிடுச்சு இப்படியே விட்டுட்டு மீ த எஸ்ஸாகிக்கிறேன்!

(கமெண்ட்களி இத்தனை மாற்றங்கள் போதும்தானே!)
\\

போதும்ணே போதும்...:)

நன்றி...!

தமிழன்-கறுப்பி... said...

மெல்போர்ன் கமல் said...
\
காலம் மாற்றங்களை
காவிக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!

மிகவும் யதார்த்த பூர்வமாக உள்ளது!
\

இது வேறுவிதமாக தோன்றிய வரிகள்தான் பின்குறிப்புக்காக இப்படி எழுதினேன்...
நன்றி கமல்!

ஹேமா said...

தமிழன் இன்னும் எனக்குக் குழப்பம்தான்.ஆர்ப்பாட்டமான பயிற்சி.
அதற்காகவே ஒரு மைதானம்.அதை ரசிக்க நீங்கள்.அருமை.ம்ம்ம்...
உங்கட தேவதையை நீங்க வர்ணணையாலயே நனைச்சிட்டிங்களே.பிறகென்ன!

அதுசரி...அவ ஏன் இப்ப விளையாடுறதில்ல.அதையும் சொல்லிப்போட்டீங்கள் எண்டா இந்தப் பெடியள் எல்லாம் கொஞ்சம் பேசாம இருப்பாங்கள் எல்லோ!

புதியவன் said...

//அவள்
ஓடிக்களைத்தில்
மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது
காற்று! //

ரொம்ப அழகாயிருக்கு தமிழன்.

Unknown said...

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... உங்க தேவதையும், மைதானமும்.. அதைப்பற்றின உங்களின் வர்ணனைகளும், கவிதைகளும்... :))))))))

Divya said...

வர்ணனை அருமை தமிழன்:))

Divya said...

\\காலம் மாற்றங்களை
காவிக்கொண்டு பயணிக்கிறது.\\

'காவிக்கொண்டு'...என்றால் அர்த்தம் என்ன??

Divya said...

உங்களுக்கே உரிய....கவிதிறன், ஒவ்வொரு கவிதையிலும் தெரிகிறது!!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

பிகர் - பியர் ஒரு எழுத்து தான் வித்தியாசம். ஆனா , முன்னதைப் பத்தி கவிதை படிச்சாலே ஒரு கிக் வருதே எப்படீங்க? கவிதைகள் எல்லாம் முத்துக்கள்! வாழ்த்துக்கள்!!

MSK / Saravana said...

படித்த நானே இங்கு நனைந்துவிட்டேன்.. வெகு அருமை..

MSK / Saravana said...

இந்த பதிவுக்கு உங்கள் பதிவை பின்னூட்டமாய் போட வேண்டும் போலிருக்கிறது.. அவ்ளோ அழகு..

கொடுத்து வைத்தவர் நீங்க.. பொறாமையாய் இருக்கு லைட்டா..

MSK / Saravana said...

//
காற்றில் கரைகிறதுன்
வியர்வைத்துளிகள்
மைதானமெங்கும் பூவாசம்...!
//
அவள்
வந்து போக ஆரம்பித்த பிறகு
வந்து போகின்றன சில பறவைகளும்
எங்களுர் மைதானத்துக்கு...
//


அட்டகாசம்..

லிங்காபுரம் சிவா said...

Nice One...

தமிழ் மதுரம் said...

தமிழன்-கறுப்பி... said...
ம்ம்ம்...

கமல் புரிகிறது...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழன்.

காரூரன் said...

வர்ணனை அந்த மாதிரி இருக்குது..... நடக்கட்டும். தேவதை மோகினி மாதிரி கனவில் மட்டும் இல்லாமல் நனவிலும் வர முயல வாழ்த்துக்கள்.

தமிழன்-கறுப்பி... said...

குழம்ப வேண்டாம் ஹேமா..:)

அவக்கிப்ப அதுக்கெல்லாம் நேரமும் இல்ல,அதோட நாட்டு சூழல் அதுக்கெல்லாம் ஆர்வம் தருவதில்லைத்தானே ஹேமா...

தமிழன்-கறுப்பி... said...

நன்றி புதியவன்...

நன்றி ஸ்ரீமதி...

நன்றி மாஸ்டர்...

தமிழன்-கறுப்பி... said...

Divya said...
\\காலம் மாற்றங்களை
காவிக்கொண்டு பயணிக்கிறது.\\

'காவிக்கொண்டு'...என்றால் அர்த்தம் என்ன??
\\

சுமந்து கொண்டு அப்படின்னு அர்த்தம்...

நன்றி திவ்யா மாஸ்டர்...:)

தமிழன்-கறுப்பி... said...

நன்றி தேவன் ...

நன்றி கமல்

நன்றி MSK

நன்றி பழைய பேட்டை சிவா..

வாழ்த்துக்கு நன்றி கரூரன் அண்ணன்...:)

Rajan said...

i hope that you 're not a p.e.t master for that school

Rajan said...

i hope that you 're not a p.e.t master for that school

mannaisekar said...

எப்படி தலைவா இதெல்லாம்.
எனக்கும் கொஞ்சன் சொல்லி கொடுங்க

வி. புருஷோத்மன் said...

//
பனி-
பூத்திருக்கிறது மைதானம்
அவள்-
பயிற்சிக்கு வருகிற
அதிகாலைக்காக...

//
super thala