Friday, September 26, 2008

சோகங்களை கொண்டாடுதல்...

*
நீ அழைக்கவில்லையே ஒழிய- என்னை
நினைக்காமல் இல்லையே...!
உன் பிரியங்கள் நிரம்பிய
மௌனங்கள் போதுமெனக்கு...

*
பிரிந்துவிடக்கூடும் என்று தெரிந்தேதான்
பழகத்தொடங்கி இருந்தோம்...
பரிந்திருக்கிறோம்
இழப்புகளுக்கும் வலிகளுக்கும் தெரிவதில்லை
ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகள்...

*
காதல் இயல்பாக நிகழ்கிறது
சொல்லத்தெரிவதில்லை என் காதலுக்கும்
சொல்லிக்கொண்டு நிகழ்ந்துவிட்ட
பிரிவுக்குமான காரணங்களை எனக்கு
பிரிவுகளும்...

*
உன்னை விடவும்
உன் நினைவுகளிடம் அதிகமாயிருக்கிறது
காதல்
வலிகள் மிகும்(ந்தாலும்)
பிரிவுகள் தகும்...

பின் குறிப்பு:

பல நாட்களாய் அடைந்து கிடந்த மௌனங்களை அவிழ்க்கத்தொடங்கியிருக்கிறது இப்போதைய இரவுகள் இனி அடிக்கடி கொண்டாடலாம் சோகத்தை புலம்பலை சகிக்கிற தோழர்கள் அறைக்கு வரவேற்கப்படுகிறார்கள்...

12 comments:

ஆயில்யன் said...

//தோழர்கள் அறைக்கு வரவேற்கப்படுகிறார்கள்///

வந்தேன்!

ஆயில்யன் said...

/பிரிந்துவிடக்கூடும் என்று தெரிந்தேதான்
பழகத்தொடங்கி இருந்தோம்...
பரிந்திருக்கிறோம்
இழப்புகளுக்கும் வலிகளுக்கும் தெரிவதில்லை
ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகள்...//

ஆஹா!

அருமை!

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\\
//தோழர்கள் அறைக்கு வரவேற்கப்படுகிறார்கள்///

வந்தேன்!
\\

வாங்க ஆயில்யன் ஆமா தண்ணி அடிப்பிங்கதானே ...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
/பிரிந்துவிடக்கூடும் என்று தெரிந்தேதான்
பழகத்தொடங்கி இருந்தோம்...
பரிந்திருக்கிறோம்
இழப்புகளுக்கும் வலிகளுக்கும் தெரிவதில்லை
ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகள்...//

ஆஹா!

அருமை
\\

அவனவன் அழுவுறது உங்களுக்கு அருமையா...? :)

நன்றி...:)

Thamira said...

'சோகங்கள்மா.. கோகங்கள் இல்லை..', ஆமா உங்களை பத்தி கதகதயா சொல்றாய்ங்க.. நெசமா? ரமாவை ஊருக்கு அனுப்புற முயற்சில இருக்கேன், போனவுடன் நா .:பிரீதான் ஒண்ணா ஒக்காந்து பொலம்பலாம்..என்னா..

ஹேமா said...

காதல் பிரிவின் வலியைச் சில வரிகளுக்குள் அடக்கியிருக்கிறீர்கள் தமிழன்.ஆனால் வலி வரிகளின் கட்டுக்குள் அடங்காது(தானே?)

Kavinaya said...

வலியாயிருந்தாலும் உங்கள் வரிகளில் சுகம்தான்.

MSK / Saravana said...

//நீ அழைக்கவில்லையே ஒழிய- என்னை
நினைக்காமல் இல்லையே...!
உன் பிரியங்கள் நிரம்பிய
மௌனங்கள் போதுமெனக்கு...//

அருமை.. கடைசி இரண்டு வரிகள்.. சான்ஸ் இல்ல..

MSK / Saravana said...

//இழப்புகளுக்கும் வலிகளுக்கும் தெரிவதில்லை
ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகள்...//

உண்மைதான்.

MSK / Saravana said...

//பல நாட்களாய் அடைந்து கிடந்த மௌனங்களை அவிழ்க்கத்தொடங்கியிருக்கிறது இப்போதைய இரவுகள் இனி அடிக்கடி கொண்டாடலாம் சோகத்தை புலம்பலை சகிக்கிற தோழர்கள் அறைக்கு வரவேற்கப்படுகிறார்கள்...//

இனி அடிக்கடி உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்..

சோகத்தை கொண்டாடலாம்..

சீயர்ஸ்.. :))

Anonymous said...

தமிழன்,
இந்த லிங்கை பாருங்கள்
http://aniththa.blogspot.com/

//பிரம்மனுடன் வழக்கு!
உன்னைச்சொல்லி குற்றமில்லை
உன்னை அழகாய் அனுப்பி,
என்னை சாகடிக்கிற...
பிரம்மனுடன் இருக்கிறது வழக்கு! //

இந்த கவிதையை இந்த வலைத்தளத்தில் கண்டேன். இது உங்களுடைய கவிதை தானே?

உங்கள் அனுமதி பெற்று இங்கு போஸ்ட் செய்திருக்கிறார்களா அல்லது பதிந்தவர் உங்களுக்கு தெரிந்தவரா? விசாரியுங்கள்.

Thena said...

Simply superb!!..keep it up:)