Tuesday, September 16, 2008

சில குறிப்புகள்...

*
கடந்த என்னுடைய பதிவுக்கு பிறகு இப்பொழுததான் இணையப்பக்கமே வந்திருக்கிறேன் அப்ப்பா [ஏனிந்த கொலை வெறி நம்ம மக்களுக்கு ...:)] எத்தனை பதிவுகள் எவ்வளவு விடயங்கள் இத்தனையும் பார்த்து முடிக்கவே என்க்கு இன்று கிடைத்திருக்கிற சொற்ப நேர இணைய வசதி போதாது... பதிவுகள் படிக்கவேண்டும்,பின்னூட்டங்கள் எழுத வேண்டும், நான் ஏதாவது எழுத வேண்டும் ஆனால் எதை எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் இப்படி தட்டச்சிக்கொண்டிருக்கிறேன் (யோசிக்காம எழுதுடா மகனே இதுவரையும் ஏதோ யோசிச்சு எழுதினா மாதிரி அலட்டிக்கிற; நம்ம மக்கள் ரொம்ப நல்லவய்ங்க படிச்சோ, படிக்காமலோ கட்டாயமா கமன்ட் எழுதுவாய்ங்க! - என் நம்பிக்கை வீண்போகாதே மக்கள்ஸ்!!!) நான் வழமையாக பயன்படுத்துகிற கணினி செயலிழந்து இருக்கிறது,இணைய வசதி கிடைப்பது பெரும் கஷ்டமாக இருக்கிறது அதனால புரிதல்கள் நிரம்பிய நண்பர்கள் குறைகொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன் பின்னூட்ம் எழுதுகிறேனோ இல்லையோ உங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உண்மை சொந்தங்களே எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க!!! [ஒரு கும்மி வீரனின் பின்னூட்டங்களை இழந்திருக்கிறது தமிழ் வலையுலகம் என்ன கொடுமை இது கூகுளாண்டவரே:( ]

*
புதுமணத்தம்பதிகள் மங்களூர் சிவா மற்றும் பூங்கொடி இருவருக்கும் மறுபடியும் ஒரு முறை இங்கே வாழ்த்துக்ளை சொல்லிக்கொள்கிறேன்.

நல்ல புரிதலும் முழுத்திருப்தியும் நிறைந்த அழகான வாழ்வுக்கு வாழ்த்துக்கள் நண்பர்களே...


*
கடந்த பன்னிரண்டாம் திகதி திலீபன் என்கிற மாவீரனின் நினைவுநாட்கள் ஆரம்பமாகியிருந்தது.தன்னினத்தின் கண்ணீரை துடைப்பதற்காக தண்ணீரும் வேண்டாம் என்று சொட்டுச்சொட்டாய் உயிரை விட்ட மாவீரன் தியாக தீபம் திலீபனின் பன்னிருநாட்கள் நினைவு ஆரம்பமாகியிருந்தது ஈழப்போராட்டம் பற்றிய என் பல்வேறுபட்ட கருத்துக்களிலும் மாறாமல் இருக்கிற ஒரே விடயம் என் மனதில் திலீபனுக்கு இருக்கிற இடம்தான் உறுதியானதொரு கொள்கை வீரனவன். பசிக்கெதிராக பேர்தொடுத்தல் என்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல என்பது சிறுவயதில் நாள் முழுக்க பசியோடு இருந்திருக்கிற எனக்கு ஓரளவேனும் தெரியும்.அப்படி இருந்த போரட்டம் இன்று...

*
கத்லின் மேகர் ( america's got talent- 2008)என்கிற சின்னப் பாடகியின் சில கண்ணொளிக்காட்சிகளை பார்க்கிற சந்தர்ப்பம் கிடைத்தது.அவள் குழந்தைத்தனமும் திறமையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது, சின்னதேவதையாய் மனதை கொள்ளை அடித்திருந்தாள். அவள் எனக்கு ஏற்படுத்திய இன்னுமொரு விடயம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் பிரிந்திருக்கிற என் மருமக்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை எனக்குள் ஏற்படுத்தி இருப்பது.குட்டிகளின் நினைவுகளை எனக்கு நிறையவே கொடுத்திருந்தாள் அவள்; ஆறு மருமக்கள் இருக்கிறார்கள் எனக்கு இரண்டு சிங்கங்க்ள,நான்கு தங்கங்கள் என வீடு முழுக்க நிறைகிற அவர்களையும் அவர்களின் குறும்பகளையும் மீட்டுப் பார்க்கச்செய்திருந்தாள் கத்லின்...

*
சாண்டில்யனின் கடல்புறா பாகம் ஒன்றை வாசித்து முடித்திருக்கிறேன் நண்பர் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழைமை அதனை கொடுத்தனுப்புவதாக சொல்லி இருந்தேன் முடியாமல் போனதால் கொடுக்கவில்லை. வருகிற வியாழக்கிழமை கொடுத்தனுப்பலாம் என்றும் கொடுத்தனுப்பிய பின்னர் அழைத்துப்பேசலாம் என்றும் இருந்தேன் இன்று அவரே அழைத்துப்பேசினார், எப்படியாவது கொடுத்தனுப்பிவிட வேண்டும்.( அது வேறுயாருமல்ல அவரை இன்னும் நேரில் சந்திக்கவில்லை)


*
அந்த சினேகா உண்மையில் அழகுதான் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்க..." படம் மறுபடி பார்ததேன் சினேகாஅழகாய் தெரிந்த படங்களில் இதுவும் ஒன்று ஆனால் படம் எனக்கு பிடித்துப்போனதற்கும் மறுமுறை பார்த்ததற்கும் இது காரணமல்ல! பல நினைவுகளை கிறளறியிருக்கிறது படம்...(அவளும் அவள் சார்ந்த நினைவுகளும்...)


*
கடதந்த நாட்கள் எதுவும் வாசிக்ககிடைக்காமலும் எழுதக்கிடைக்காமலும் மனம் முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது பல விடயங்கள். எதையும் செய்யமுடியாமல் ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல பிரச்சினைகள் சூழ்ந்து கொண்டு இருக்கிறது என்னை! அவற்றையெல்லாம் வெளித்தள்ளிவிட கிடைக்கிற ஒரே விசயம் வாசிப்பதுதான் அதற்கும் சந்தர்ப்பம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்னுடைய நாட்கள்...கொஞ்சம் கடுமையாத்தான் இருக்கிறது அவை! பார்க்கலாம் நிகழ்வுகள் மாறத்தானே வேண்டும்.

*
பலதையும் மீட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறது மனது...


குறிப்புகளின் குறிப்புகள்:

1)
இணைய வசதி கிடைக்காமல் இருக்கிறது, எப்பொழுதாவதுதான் வர முடிகிறது இணையத்திற்கு,அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரஅளவு மட்டும் என் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கான பதில்களைக்கூட சரிவர தரமுடிவதில்லை என்கிற வருத்தம் எனக்கு பல நாட்களாக இருக்கிறது உங்கள் அன்புக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பர்களே...

2)
இந்த மாதம் முடிவதற்கிடையில் இணையவசதி கிடைக்கலாம் என்ற நினைக்கிறேன்- கிடைக்வேண்டும்! முக்கிய பதிவொன்று எழுதியே ஆக வேண்டும் இந்த மாதம் முடிவதற்கிடையில்...

3)
வாசிக்காமல் இருப்பது மிக கடினமான காரியமாக இருக்கிறது...

22 comments:

Divya said...

விரைவில் இணைய வசதி கிடைத்து, வலையுலகிற்கு அடிக்கடி வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!!

Divya said...

\\என்க்கு இன்று கிடைத்திருக்கிற சொற்ப நேர இணைய வசதி போதாது... \\


கிடைத்த சொற்ப நேரத்திலும் ஒரு பதிவு போட்டிருக்கிற உங்க கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது:)))

துளசி கோபால் said...

மீண்டு(ம்)வந்தமைக்கு நல்வரவு.

Thamiz Priyan said...

///ஒரு கும்மி வீரனின் பின்னூட்டங்களை இழந்திருக்கிறது தமிழ் வலையுலகம் ///

என்ன கொடுமை இது கூகுளாண்டவரே

Thamiz Priyan said...

///நல்ல புரிதலும் முழுத்திருப்தியும் நிறைந்த அழகான வாழ்வுக்கு வாழ்த்துக்கள் ////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

Thamiz Priyan said...

சினேகா ரசிகராயா நீ?.... அவங்க தான் மார்க்கெட்டை விட்டு போயாச்சே?...:))

Thamiz Priyan said...

///விரைவில் இணைய வசதி கிடைத்து, வலையுலகிற்கு அடிக்கடி வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!!///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

Thamiz Priyan said...

///Divya said...

\\என்க்கு இன்று கிடைத்திருக்கிற சொற்ப நேர இணைய வசதி போதாது... \\


கிடைத்த சொற்ப நேரத்திலும் ஒரு பதிவு போட்டிருக்கிற உங்க கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது:)))///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

Thamiz Priyan said...

///துளசி கோபால் said...

மீண்டு(ம்)வந்தமைக்கு நல்வரவு.///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

Thamiz Priyan said...

கும்மி வீரனுக்கு மரியாதை...:)

MSK / Saravana said...

//Divya said...

\\என்க்கு இன்று கிடைத்திருக்கிற சொற்ப நேர இணைய வசதி போதாது... \\


கிடைத்த சொற்ப நேரத்திலும் ஒரு பதிவு போட்டிருக்கிற உங்க கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது:)))//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே..
:))

தமிழன்-கறுப்பி... said...

Divya said...
\
விரைவில் இணைய வசதி கிடைத்து, வலையுலகிற்கு அடிக்கடி வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!!
\
கிடைக்க வேண்டும் இணையத்துக்கு வராமல் இருக்க முடியாது என்னால்..

நன்றி மாஸ்டர்...:)

தமிழன்-கறுப்பி... said...

Divya said...
\\
\\என்க்கு இன்று கிடைத்திருக்கிற சொற்ப நேர இணைய வசதி போதாது... \\

கிடைத்த சொற்ப நேரத்திலும் ஒரு பதிவு போட்டிருக்கிற உங்க கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது:)))
\\

:)
நன்றி...நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

துளசி கோபால் said...
\\
மீண்டு(ம்)வந்தமைக்கு நல்வரவு.
\\

ரொம்ப நன்றி டீச்சர்...:)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
///ஒரு கும்மி வீரனின் பின்னூட்டங்களை இழந்திருக்கிறது தமிழ் வலையுலகம் ///

என்ன கொடுமை இது கூகுளாண்டவரே
\\

வாங்க தல என் பிட்டெடுத்து எனக்கேவா...??

நல்லாருங்கண்ணே...:)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\
///நல்ல புரிதலும் முழுத்திருப்தியும் நிறைந்த அழகான வாழ்வுக்கு வாழ்த்துக்கள் ////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
\\

நானும்...:)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
சினேகா ரசிகராயா நீ?.... அவங்க தான் மார்க்கெட்டை விட்டு போயாச்சே?...:))
\\

யார் சொன்னது!!!!
இருந்தாலும் நம்ம மனசை விட்டுப் போயிடலையே ;))

நான் சினேகாவுக்கு மட்டும் ரசிகனல்ல
(நாம எல்லா பிகருங்களையும் ரசிப்போம்...;)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
///விரைவில் இணைய வசதி கிடைத்து, வலையுலகிற்கு அடிக்கடி வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!!///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
\\

நன்றி தல...:)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
///Divya said...

\\என்க்கு இன்று கிடைத்திருக்கிற சொற்ப நேர இணைய வசதி போதாது... \\


கிடைத்த சொற்ப நேரத்திலும் ஒரு பதிவு போட்டிருக்கிற உங்க கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது:)))///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
\\

:))

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
///துளசி கோபால் said...

மீண்டு(ம்)வந்தமைக்கு நல்வரவு.///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
\\

நன்றி...தல..:)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\
கும்மி வீரனுக்கு மரியாதை...:)
\

நன்றி...தல...நன்றி...:)

தமிழன்-கறுப்பி... said...

Saravana Kumar MSK said...
//Divya said...

\\என்க்கு இன்று கிடைத்திருக்கிற சொற்ப நேர இணைய வசதி போதாது... \\

கிடைத்த சொற்ப நேரத்திலும் ஒரு பதிவு போட்டிருக்கிற உங்க கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது:)))//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே..
:))
\\

வாங்க (MSK) சரவணகுமார் நன்றி...:)