Friday, June 27, 2008

பிரிவும் சந்திப்பும்...

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு ஐந்து நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன் நான்.

நானும் நீயும் தொலைபேசியில் கூட சரிவரப் பேசிக்கொள்ள முடியாத நிலைமையில் இருந்தது உன் வீட்டு நிலவரம், இந்த நிலமையில் மூன்று நாட்கள் பகல் பொழுதுகடந்தும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் போனது இருவருக்கும். மூன்றாம் நாள் இரவில் எப்படியும் உன்னை பார்த்துவிடுவது என்ற முடிவில் பத்து மணி இருக்கையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு உன் வீடுவரை வந்தேன். முதல் முறை உன் வீட்டைக் கடக்கையில் உன்னுடைய அறையின் ஜன்னல்கள் மூடியிருந்தது தெரு முனைவரை சென்று திரும்புகையில் ஜன்னலை திறந்து வைத்திருந்தாய் நீ, எப்படித்தெரிந்து கொண்டாயோ என் வருகையை இன்றுவரையம் இருவருக்கும் தெரியவில்லை ஒருவேளை காதலுக்கு தெரிந்திருக்கலாம்!. மறுபடி திரும்பவும் சைக்கிள் "கரியரில்" சத்தம் செய்து கொண்டே தெருமுனைவரை சென்று திரும்புகையில் ஜன்னலோரம் நின்று அந்த இரவின் வெளிச்சத்தில் காதலை கண்களில் சொன்னாய் நீ...!

நான் வந்ததை நீ தெரிந்து கொண்டாய் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு உன் வீட்டுக்கு அடுத்திருந்த கலட்டி அம்மன் கோவில் கிணற்றடியில் சைக்கிளை விட்டு விட்டு நடந்து கடந்தேன் உன்னுடைய ஜன்னலை, நேர இடை வெளி விட்டடு மூன்றாம் முறை கடக்கையில் மறுபடியும் ஜன்னலில் தோன்றி மறைந்தாய் நீ, நேரம்... பதினொரு மணியை கடந்திருக்க ஊர் மொத்தமும் உறங்கியிருந்தது உன் வீட்டை தவிர! நடந்து களைத்துப்போனேன் நான்; கலட்டி அம்மன் கோவிலுக்கும் தெரு முனைக்குமாக, நீயோ சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஜன்னலில் வந்து என்னை திரும்பி போகும் படி உன் அசைவுகளிலேயெ சொல்லிக்கொண்டிருந்தாய்...

நேரம் பதினொன்றரையை நெருங்கியிருந்தது உன் வீட்டின் மற்றய விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட உன்னுடைய அறை விளக்கு மட்டும் உயிரோடிருந்தது. இன்னமும் சில நிமிடங்களில் உன் அம்மாவின் குரல் கேட்க அதனைத்தொடர்ந்து உன் அறை வெளிச்சமும் இல்லாமல் போயிற்று விளக்கை அணைத்து சில வினாடிகளில் மறுபடியும் ஒரு முறை விளக்கை போட்டு அணைத்தாய் நீ...!

இரவின் நிமிடங்கள் யுகமாய் நகர்ந்து கொண்டிருந்தது நம் இருவருக்கும்.
ஊர் முழுதும் அடங்கி விட்ட அந்த வளர் பிறைக்ககாலத்து நிலவின் வெளிச்சத்தில் கலட்டி அம்மன் கோவிலுக்காக உன் வீட்டு மதிலோரம் குவித்திருந்த குரு மணலில் கைகளை தலைக்கு கொடுத்தவாறு படுத்திருந்தேன் நான் இருபது நிமிடங்கள் யுகங்களாய் கழிகையில் உறக்கம் தழுவிக்கொண்டிருந்த என்னை எழுப்பியது உன் கொலுசுச்சத்தம்.

எதுவும் பேசாமல் வந்த நீ நெருங்கி அமர்ந்து மதிலோடு சாய்ந்து கொண்டாய் நீளமாக மூச்சு விட்ட நீ-

ஏனப்பா... என்றாய் உனக்கு மட்டும் கேட்கிற குரலில்

நான் - ம்ம்ம்...

நீ- ஏனப்பா இவ்வளவு நேரம் நித்திரையை குழப்பி கொண்டு...

நான் - நீ ஏன் என்னை பாக்க வரல்லை....

நீ- வர ஏலும் எண்டால் வந்திருப்பன் தானே....

நீ - நாளைக்கும் வேலை இருக்கல்லோ வீட்டில...

நான் - ம்ம்ம்...

நீ - அப்ப எத்தனை மணிக்கு வவுனியா போறியள்...

இந்த கேள்வியியின் முடிவில் நீ, நீளமாய் வெளிவிட்ட மூச்சு என் நெற்றியில் சுட்டது.

நான் - ம்ம்ம்..

எனக்கு நான்கு நாட்கள் அலுப்பிலும் பகல் முழுவதுமான அலைச்சலிலும் என்னை மறந்த நித்திரை கண்களை சொருகியது.

எதுவும் பேசாமல் இன்னும் நெருங்கி என் தலையை எடுத்து மடியில் வைத்து நெற்றி முடியில் விரல் நுளைத்தாய் நீ,

உந்தன் மடி மீதான நிம்மதியில் எப்பொழுது உறங்கினேன் எனத்தெரியவில்லை சட்டென்று விழிப்பு வருகையில் உன்னைப்பார்த்தேன் கண்கள் மூடிய உறக்கத்திலும் உன் விரல்கள் என் நெற்றி வருடிக்கொண்டிருந்தது இந்த கரிசனத்துக்காகதானேடி! நான் உன்னை தேவதை என்பதும் இவ்வளவு நேரம் காத்துக்கிடந்ததும்.
உன் தூக்கம் கலைக்க விரும்பாத நான் அப்படியே உன்னை பார்த்துக்கொண்டிருந்தேன் நான் விழித்துக்கொண்டதை அறிந்து கொண்ட நீ...

என்னப்பா நேரம் போகுது வீட்டுக்கு போங்கோ

நான் - ம்ம்ம்...போகலாம்

குனிந்து என் நெற்றியில முத்தமிட்டு என்ன... என்றாய்

ம்ம்ம் என்ன...

உன்கைளை எடுத்து மார்போடு வைத்துக்கொண்டேன் நான்
மறுகையை எடுத்து என் கையோடு சேர்த்து மூடிக்கொண்டாய் நீ அங்கே ஒரு கவிதை அரங்கேறியது...

நான் - ம்ம்ம்...

நீ - ம்ம்ம்...

எழுந்து மதிலுக்கு சாய்ந்து அமர்நது கொண்டேன் நானும்...

நான்- சொல்லு...

நீ - ம்...

அதுவரையும் அசைக்காமல் நீட்டியருந்ததில விறைத்து போன கால்களின் வலியை எனக்கு தெரியாமல் மறைக்க முயன்ற நீ உன்னையறியாமல் என் கைகளை இறுகப்பற்றினாய்...

ஏனடா சொல்லியிருக்கலாம் தானே என்று உன்னை அணைத்துமார்போடு சாய்த்துக்கொண்டேன் நான்

நீ- ம்ம்ம்...

ஒரு குழந்தையைப்போல ஒட்டிக்கொண்டு சாய்ந்தாய் நீ என் மார்போடு; அந்த தருணத்தில் மீண்டும் ஒரு முறை என் பிறவிப்பெருமையை உணர்த்தினாய் நீ எனக்கு...

என் கைகளை எடுத்து ஆதரவாய் பின்னிக்கொண்டேன் உன்னைச் சுற்றி...

அப்படியே எவ்வளவும் இருந்தோம் என்று தெரியவில்லை உலகத்தில் வேறெந்த நிகழ்வும் இல்லாததைப்போல எம்மை மறந்திருந்தோம். மதில் மூலையில் இருந்த பூவரச மரத்து சேவல் தொடர்ச்சியாக கூவியதில் நிகழ்காலத்துக்கு வந்தோம் இருவரும். நேரம் பார்த்தேன் மணி நாலு பத்து
கண்களை திறக்காமலே என் மார்புக்குள் நீ கேட்டாய்

நேரமென்னப்பா...

நான் - நாலு பத்து...

நான் - தமிழ்...

நீ - ம்...

நான் - தமிழ்...

நீ - ம்ம்ம்...

நான் - எழும்படா...

நீ - ம்...

நான் - விடியப்போகுது...

நீ - ம்ம்ம்...

நீ - அப்பா...

நான் - ம்...

நீ -அப்பா...

நான் - ம்ம்ம்...

என் மார்பில் முத்தமிட்டு இருவருக்குமான விடியலை ஆரம்பித்து வைத்தாய் நீ...!

அதுவரை உன்னை சுற்றியிருந்த கைகளை எடுத்து உன் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டேன் நான்...

கண்கள் மூடி என் மார்பில் மீண்டும் ஒரு முறை சாய்ந்த உன் கன்னங்களில் இதழ் ஒற்றி எடுத்தேன்...

உன் கண்கள் மூடியிருக்க ஒரு கை என்னை சுற்றியிருக்க மறுகைவிரல்கள் என் மார்பில் என் பெயரை எழுதிக்கொண்டிருந்தது... நான் கண்கள் மூடி சாய்ந்திருக்க என் காதல் அதனை உன் பெயராக வாசித்துக் கொண்டிருந்தது என் உயிரில்...

மறுபடி ஒரு முறை சேவல் கூவ நிலமை உணர்ந்து கண்களைத்திறந்தோம் இருவரும்.

மணலை விட்டு எழுந்து கொண்டோம் இருவரும் மணல் முழுவதும் காதல் குவிந்திருந்துது...

நீ கிணற்றடி வரைக்கும் வந்தாய் என் தோள்களில் சாய்ந்தவாறே...
சைக்கிளை எடுத்துக்கொண்டு விடைபெறும் வேளைவரை நம் வலது கைகைளில் பத்து விரல்களாய் இருந்தது.

விடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...

அந்த இரவில் கிடைத்திருந்தது அந்த விடுமுறைக்கான திருப்தியம் அடுத்த நான்கு மாதங்கள் பிரிவுக்கான பிரியாவிடையும்.

நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!

105 comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்... :)))))

தமிழன்-கறுப்பி... said...

//மீ த பர்ஸ்ட்... :)))))//

வாங்க தல...

Thamiz Priyan said...

அண்ணே உண்மையிலேயே சூப்பரா இருக்கு..... :)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் சொன்னது..

//அண்ணே உண்மையிலேயே சூப்பரா இருக்கு..... :)//

நன்றி தல எழுதியிருக்கிற விதம் புரியுமோன்னு யோசிச்சுட்டிருந்தேன் ஏதாவது மாத்தணும்னா சொல்லுங்க...

சென்ஷி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க கதை...

//விடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...
//

பயங்கரமா உழைச்சிருக்கீங்க போல... :))

//நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!//

அழகான வரிகள்..

சென்ஷி said...

//உன்கைளை எடுத்துமார்போடு வைத்துக்கொண்டேன் நான்
மறுகையை எடுத்து என் கையோடு சேர்த்து மூடிக்கொண்டாய் நீ அங்கே ஒரு கவிதை அரங்கேறியது...
//

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க ராசா :))
நடாத்துங்க.. நடாத்துங்க

Selva Kumar said...

//நீ, எப்படித்தெரிந்து கொண்டாயோ என் வருகையை இன்றுவரையம் இருவருக்கும் தெரியவில்லை ஒருவேளை காதலுக்கு தெரிந்திருக்கலாம்!. //

ஆமாம்..:-))

Selva Kumar said...

//அப்படியே எவ்வளவும் இருந்தோம் என்று தெரியவில்லை உலகத்தில் வேறெந்த நிகழ்வும் இல்லாததைப்போல எம்மை மறந்திருந்தோம். //

:-))

Selva Kumar said...

//என் மார்பில் முத்தமிட்டு இருவருக்குமான விடியலை ஆரம்பித்து வைத்தாய் நீ...!
//

இனிய விடியல் :-))

Selva Kumar said...

//விடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...
//

finishing touch le பின்னிடீங்க போங்க!!!

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி சொன்னது...

///ரொம்ப நல்லாயிருக்குங்க கதை...

//விடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...
//

பயங்கரமா உழைச்சிருக்கீங்க போல... :))//

நன்றி அண்ணே:)
கன்னங்கள் நனைந்திருந்தது கண்ணீரால தப்பா புரிஞ்சுக்காதிங்க:)

//நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!//

அழகான வரிகள்..///

தேவதையின் தருணங்கள் அழகாகத்தானே இருக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி சொன்னது...

\\\//உன்கைளை எடுத்துமார்போடு வைத்துக்கொண்டேன் நான்
மறுகையை எடுத்து என் கையோடு சேர்த்து மூடிக்கொண்டாய் நீ அங்கே ஒரு கவிதை அரங்கேறியது...
//

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க ராசா :))
நடாத்துங்க.. நடாத்துங்க///

நன்றி அண்ணே கவிதைக்கெல்லாம் கற்பனை கிடைச்சிருது ஆனா அனுபவந்தான் கிடைக்க மாட்டேங்குது...

நன்றி சென்ஷி அண்ணே :))வருகைக்கும் கருத்துக்கும்...

Divya said...

அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்:))

எழுத்தின் நடையோடு ஒன்றிபோக வைத்தது குறிப்பிடத்தக்கது தமிழன்!!

வாழ்த்துக்கள்!!

Divya said...

\\நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!\\

அசத்தல்!!!

Divya said...

சிங்கள தமிழில் காதல் உரையாடல்....அழகு:))

Divya said...

\\மறுபடி திரும்பவும் சைக்கிள் "கரியரில்" சத்தம் செய்து கொண்டே தெருமுனைவரை சென்று திரும்புகையில்\\

சைக்கிள் 'பெல்' லில் தானே சத்தம் வரும், 'காரியரிலு'மா சத்தம் வரும்????

கிரி said...

தமிழன் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் ..யார் அந்த பொண்ணு

அப்புறம் உங்கள் வரிகளை போட்டு தான் விமர்சனம் செய்ய நினைத்தேன்....அது உங்க முழு கவிதையும் வருவதால்....

ஒட்டு மொத்தமாக ஒரு "ஓ" போட்டு விடுகிறேன்....கலக்கல் போங்க

கானா பிரபா said...

;-)

இதை வச்சே ஆட்டோகிராப் பார்ட் 2 எடுக்கலாமே அப்பு, நலலாயிருக்கு

தமிழன்-கறுப்பி... said...

ஒரு வழிப்போக்கன் சொன்னது

\\\//அப்படியே எவ்வளவும் இருந்தோம் என்று தெரியவில்லை உலகத்தில் வேறெந்த நிகழ்வும் இல்லாததைப்போல எம்மை மறந்திருந்தோம். //

:-))///

?:)

தமிழன்-கறுப்பி... said...

ஒரு வழிப்போக்கன் @

\\\//என் மார்பில் முத்தமிட்டு இருவருக்குமான விடியலை ஆரம்பித்து வைத்தாய் நீ...!
//
இனிய விடியல் :-))\\\

ஆமால்ல...

\\/விடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...
//
finishing touch le பின்னிடீங்க போங்க!!!////

நன்றி நன்றி :) வழிப்போக்கன்! சென்ஷி அண்ணனுக்கு சொன்ன பதிலை படிச்சு பாருங்க...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா சொன்னது...

///அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்:))

எழுத்தின் நடையோடு ஒன்றிபோக வைத்தது குறிப்பிடத்தக்கது தமிழன்!!

வாழ்த்துக்கள்!!////

வாங்க மேடம் நன்றி நன்றி...:))

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா சொன்னது...

\\\\நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!\\

அசத்தல்!!!///

நிஜமாவா?? எல்லாம் உங்க ஆசீர்வாதம் மாஸ்டர்...:))

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா சொன்னது...

///சிங்கள தமிழில் காதல் உரையாடல்....அழகு:))///

சிங்கள தமிழா,மாஸ்டர் இது எங்கடை ஊர் தமிழ் மாஸ்டர் நீங்க சொல்ல வந்தது இதுதான்னு நினைக்கிறேன்...

நன்றி ஆமா அவங்க என்ன பேசியிருக்காங்க...:

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா சொன்னது...

///\\மறுபடி திரும்பவும் சைக்கிள் "கரியரில்" சத்தம் செய்து கொண்டே தெருமுனைவரை சென்று திரும்புகையில்\\

சைக்கிள் 'பெல்' லில் தானே சத்தம் வரும், 'காரியரிலு'மா சத்தம் வரும்????///

மாஸ்டர் அது சாதாரணமா எல்லோருக்கும் தெரியும் "பெல்" சத்தம்னா எல்லோரும் முழிச்சுக்குவாங்க "கரியர்ல" ஏற்படுத்துற சத்தம் கவனிக்கப்படறதில்லை, யாரும் வெளிய வந்தும் பாக்கமாட்டாங்க... இது நம்மளோட "டெக்னிக்" அவவுக்கு மட்டும் புரியும்...:)

Shwetha Robert said...

Very romantic & luvly:)))

Thamiz Priyan said...

///தமிழன்... said...
நன்றி அண்ணே கவிதைக்கெல்லாம் கற்பனை கிடைச்சிருது ஆனா அனுபவந்தான் கிடைக்க மாட்டேங்குது...////
சீக்கிரமே கேர்ள் பிரண்ட் பிராப்திரஸ்து... ;))

Thamiz Priyan said...

///மாஸ்டர் அது சாதாரணமா எல்லோருக்கும் தெரியும் "பெல்" சத்தம்னா எல்லோரும் முழிச்சுக்குவாங்க "கரியர்ல" ஏற்படுத்துற சத்தம் கவனிக்கப்படறதில்லை, யாரும் வெளிய வந்தும் பாக்கமாட்டாங்க... இது நம்மளோட "டெக்னிக்" அவவுக்கு மட்டும் புரியும்...:)///
அண்ணே உங்க போட்டோ இருந்த கொடுங்க... சங்கத்து முகப்புல மாட்டி வைக்கனும்... ;))

J J Reegan said...

ரொம்ப நல்லாயிருக்குங்க கதை...

//விடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...
//

பயங்கரமா உழைச்சிருக்கீங்க போல... :))

//நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!//

அழகான வரிகள்..

தமிழன்-கறுப்பி... said...

கிரி சொன்னது...

///தமிழன் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் ..யார் அந்த பொண்ணு///

அப்பிடில்லாம் யாரும் இல்லைங்க இது ஒரு தேவதையின் தருணம் மட்டுமே...:)

///அப்புறம் உங்கள் வரிகளை போட்டு தான் விமர்சனம் செய்ய நினைத்தேன்....அது உங்க முழு கவிதையும் வருவதால்....

ஒட்டு மொத்தமாக ஒரு "ஓ" போட்டு விடுகிறேன்....கலக்கல் போங்க///

நன்றி உங்கள் வருகைக்கும் உற்சாகமான கருத்துக்களுக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

வலையுலக மார்க்கண்டேயன்
கானா பிரபா சொன்னது...
///;-)

இதை வச்சே ஆட்டோகிராப் பார்ட் 2 எடுக்கலாமே அப்பு, நலலாயிருக்கு///

அண்ணன் அப்பிடி ஒரு பழைய கதையும் இல்லையெண்டு சொன்னா நம்பவோ போறியள் ஆசைப்படுறியள் சொல்லிக்கொள்ளுங்கோ:)
நிறைய சந்தோசம் அண்ணன் நீங்கள் வந்ததில அடிக்கடி வாங்கோ.

நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

ஷ்வேதா சொன்னது...
///Very romantic & luvly:)))///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷ்வேதா...

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் சொன்னது...

///தமிழன்... said...
நன்றி அண்ணே கவிதைக்கெல்லாம் கற்பனை கிடைச்சிருது ஆனா அனுபவந்தான் கிடைக்க மாட்டேங்குது...////
சீக்கிரமே கேர்ள் பிரண்ட் பிராப்திரஸ்து... ;))///

:)
நன்றி,நன்றி,நன்றி...

உங்களோட வாழ்த்து பலிக்கட்டும் அண்ணே...:)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் சொன்னது...

///மாஸ்டர் அது சாதாரணமா எல்லோருக்கும் தெரியும் "பெல்" சத்தம்னா எல்லோரும் முழிச்சுக்குவாங்க "கரியர்ல" ஏற்படுத்துற சத்தம் கவனிக்கப்படறதில்லை, யாரும் வெளிய வந்தும் பாக்கமாட்டாங்க... இது நம்மளோட "டெக்னிக்" அவவுக்கு மட்டும் புரியும்...:)///
அண்ணே உங்க போட்டோ இருந்த கொடுங்க... சங்கத்து முகப்புல மாட்டி வைக்கனும்... ;))

அண்ணே உங்க அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேனோ...?
இருந்தாலும் நான் விளம்பரத்தை விரும்புறதில்லைன அண்ணே...:))

நன்றி தல உங்கள மீள் வருகைக்கு:)

தமிழன்-கறுப்பி... said...

றீகன் சொன்னது...

///ரொம்ப நல்லாயிருக்குங்க கதை...

//விடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...
//

பயங்கரமா உழைச்சிருக்கீங்க போல... :))

//நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!//

அழகான வரிகள்..///

குறும்புதான் றீகன் உங்களுக்கு:0
நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாசிப்புக்கும்...

மங்களூர் சிவா said...

அழகான காதல் கதை

மங்களூர் சிவா said...

தமிழன் கலக்குறப்பா!

மங்களூர் சிவா said...

/
உன்கைளை எடுத்து மார்போடு வைத்துக்கொண்டேன் நான்
மறுகையை எடுத்து என் கையோடு சேர்த்து மூடிக்கொண்டாய் நீ அங்கே ஒரு கவிதை அரங்கேறியது...
/

உல்டாவா உங்க கைய மாத்தி வெச்சிருந்தா வேற ஏடாகூடமா எதும் அரங்கேறியிருக்கும்
:))

மங்களூர் சிவா said...

/

//நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!//
/

ஜொல்லு மழைல நனைஞ்சிடுச்சோ!?!?!?

மங்களூர் சிவா said...

//விடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...
//

ச்சீ எச்சில்

:)))))))))))

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

கவிதைக்கெல்லாம் கற்பனை கிடைச்சிருது ஆனா அனுபவந்தான் கிடைக்க மாட்டேங்குது...
/

நம்புறோம் !!
நம்புறோம்!!!

மங்களூர் சிவா said...

தமிழன் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் ..யார் அந்த பொண்ணு

மங்களூர் சிவா said...

/
கானா பிரபா said...

;-)

இதை வச்சே ஆட்டோகிராப் பார்ட் 2 எடுக்கலாமே அப்பு, நலலாயிருக்கு
/

ரிப்ப்ப்ப்ப்ப்ப்பீட்டு

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

மாஸ்டர் அது சாதாரணமா எல்லோருக்கும் தெரியும் "பெல்" சத்தம்னா எல்லோரும் முழிச்சுக்குவாங்க "கரியர்ல" ஏற்படுத்துற சத்தம் கவனிக்கப்படறதில்லை, யாரும் வெளிய வந்தும் பாக்கமாட்டாங்க... இது நம்மளோட "டெக்னிக்" அவவுக்கு மட்டும் புரியும்...:)
/

அதனாலதான் கேக்குறேன்

உண்மை தெரிந்தாகனும் ..யார் அந்த பொண்ணு

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

கிரி சொன்னது...

///தமிழன் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் ..யார் அந்த பொண்ணு///

அப்பிடில்லாம் யாரும் இல்லைங்க இது ஒரு தேவதையின் தருணம் மட்டுமே...
/

இப்பிடியெல்லாம் சமாளிச்சா நம்பிருவோமாக்கும்!!

:)))

மங்களூர் சிவா said...

/
எப்படித்தெரிந்து கொண்டாயோ என் வருகையை இன்றுவரையம் இருவருக்கும் தெரியவில்லை ஒருவேளை காதலுக்கு தெரிந்திருக்கலாம்!.
/

அமானுஷ்ய சக்தி!?!?
இருக்கட்டும் இருக்கட்டும்
:))

மங்களூர் சிவா said...

/
என் மார்பில் முத்தமிட்டு இருவருக்குமான விடியலை ஆரம்பித்து வைத்தாய் நீ...!
/

நல்ல விடியல்தான்!!
:)

மங்களூர் சிவா said...

/

மறுபடி ஒரு முறை சேவல் கூவ நிலமை உணர்ந்து கண்களைத்திறந்தோம் இருவரும்.
/

அந்த சேவலைபிடிச்சி பிரியாணி போடுங்கய்யா!!

:)))))

மங்களூர் சிவா said...

/

மணலை விட்டு எழுந்து கொண்டோம் இருவரும் மணல் முழுவதும் காதல் குவிந்திருந்துது...
/

ஈரமா இருந்திச்சோ!?!?!?

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

மங்களூர் சிவா said...

49

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்களுடன்

50

தமிழன்-கறுப்பி... said...

தல எப்ப வந்திங்க உங்க கேள்விக்கெல்லாம் ஆறுதலாத்தான் பதில் சொல்லணும்,அவசரப்பட்டு சொல்லப்போய் நாம ஏதாவது உளறிக்கொட்டிட்டா...
அப்புறம் யாரது யாரதுன்னு தொல்லையாப்போயிடுது...:)

Kumiththa said...

Nice story..Like the way you wrote it. Especially the SL tamil is super..

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

தல எப்ப வந்திங்க
/

முந்தா நேத்தே வந்தேன்பா மீ தி பஸ்ட்டு போட உன் ப்ளாக் கமெண்ட் பாக்ஸ் ஓப்பன் ஆகலை திரும்ப நேத்து வந்தேன்!!

தமிழ் பிரியன் போட்டுட்டாரு!!

:)

Ramya Ramani said...

எப்படி பாராட்டுவதுன்னே தெரியல தமிழன் :) மிகவும் ரசித்து எழுதிருக்கீங்க,நானும் மிகவும் ரசித்து படித்தேன் :)

\\மணலை விட்டு எழுந்து கொண்டோம் இருவரும் மணல் முழுவதும் காதல் குவிந்திருந்துது...\\

:))

ஹேமா said...

வணக்கம் தமிழ் அண்ணா.அழகான ஒரு காதல் கதை மாதிரி....ஆனால் உண்மை.சும்மா சொல்லேல்ல. காதலின் பிரிவையும் அதன் பின் சேர்தலின் சந்தோஷத்தையும் உணர்வோடு கொடுத்திருக்கிங்க.இது வந்து... உங்கட அனுபவமோ!!!!!

அது சரி என் மனசில கன நாளா ஒரு கேள்வி தமிழ் அண்ணா.அது என்ன சிங்களத் தமிழ்?கோவம் கோவமா வருது.சில இந்தியத் தமிழர் இப்படிச் சொல்கிறார்கள்.உங்கள்
பின்னோட்டத்தில் *திவ்யா* என்பவரும் சிங்களத் தமிழ் என்று
பாவித்திருக்கிறார்.ஐயோ...அது எங்கட யாழ்ப்பாணத் தமிழப்பா. சிங்களத் தமிழ் இல்லப்பா!!!தமிழ் அண்ணா கொஞ்சம்
புரிய வையுங்கோ!!!

தமிழன்-கறுப்பி... said...

மங்களுர் சிவா சொன்னது...

//அழகான காதல் கதை//

நன்றிண்ணே நன்றி:)

//தமிழன் கலக்குறப்பா!//

எல்லாம் உங்களோட அன்பும் ஆதரவும்தான் அண்ணே...:)

///உல்டாவா உங்க கைய மாத்தி வெச்சிருந்தா வேற ஏடாகூடமா எதும் அரங்கேறியிருக்கும்
:)) //

:) ஆனா நடக்கலையே...

//நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!//
/

ஜொல்லு மழைல நனைஞ்சிடுச்சோ!?!?!?///

காதல் மழை...

தமிழன்-கறுப்பி... said...

மங்களுர் சிவா சொன்னது...

\\\//விடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...
//
ச்சீ எச்சில்
:)))))))))))\\\

கன்னங்கள் நனைந்தது கண்ணீராலன்னு முன்னாடியே சொல்லியிருக்கேன்...

தமிழன்-கறுப்பி... said...

மங்களுர் சிவா சொன்னது...
///தமிழன்... said...

கவிதைக்கெல்லாம் கற்பனை கிடைச்சிருது ஆனா அனுபவந்தான் கிடைக்க மாட்டேங்குது...
/

நம்புறோம் !!
நம்புறோம்!!!////

நம்பித்தான ஆகணும்...

தமிழன்-கறுப்பி... said...

///தமிழன் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் ..யார் அந்த பொண்ணு///

அது ஒரு தேவதை அண்ணன்...

தமிழன்-கறுப்பி... said...

மங்களுர் சிவா சொன்னது...

\\\கானா பிரபா said...
;-)

இதை வச்சே ஆட்டோகிராப் பார்ட் 2 எடுக்கலாமே அப்பு, நலலாயிருக்கு
/

ரிப்ப்ப்ப்ப்ப்ப்பீட்டு\\\

நீங்க புரொடியுஸ் பண்றிங்களா தல...

கயல்விழி said...

இதை முன்பே படிக்காமல் மிஸ் பண்ணிவிட்டேன். 'காதல் சொட்ட சொட்ட' என்பார்களே, அப்படி ஒரு அற்புதமான கதை இது.

தமிழன்-கறுப்பி... said...

மங்களுர் சிவா சொன்னது...

///தமிழன்... said...

மாஸ்டர் அது சாதாரணமா எல்லோருக்கும் தெரியும் "பெல்" சத்தம்னா எல்லோரும் முழிச்சுக்குவாங்க "கரியர்ல" ஏற்படுத்துற சத்தம் கவனிக்கப்படறதில்லை, யாரும் வெளிய வந்தும் பாக்கமாட்டாங்க... இது நம்மளோட "டெக்னிக்" அவவுக்கு மட்டும் புரியும்...:)
/

அதனாலதான் கேக்குறேன்

உண்மை தெரிந்தாகனும் ..யார் அந்த பொண்ணு///

அண்ணே...நிஜமாலுமே அவள் ஒரு தேவதை...

தமிழன்-கறுப்பி... said...

மங்களுர் சிவா சொன்னது...

///எப்படித்தெரிந்து கொண்டாயோ என் வருகையை இன்றுவரையம் இருவருக்கும் தெரியவில்லை ஒருவேளை காதலுக்கு தெரிந்திருக்கலாம்!.
/

அமானுஷ்ய சக்தி!?!?
இருக்கட்டும் இருக்கட்டும்
:))////

இப்படியான சில விசயங்களும் தான் காதலின் அற்புதங்கள், அவை உயிரில் உணரப்படுகிற உணர்வுகள்... அண்ணன்...:)

தமிழன்-கறுப்பி... said...

///தமிழன்... said...

கிரி சொன்னது...

///தமிழன் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் ..யார் அந்த பொண்ணு///

அப்பிடில்லாம் யாரும் இல்லைங்க இது ஒரு தேவதையின் தருணம் மட்டுமே...
/

இப்பிடியெல்லாம் சமாளிச்சா நம்பிருவோமாக்கும்!!

:)))///

அண்ணே...
நிஜமாலுமே அவள் ஒரு தேவதை...

நம்புங்கப்பா...:)

தமிழன்-கறுப்பி... said...

///மறுபடி ஒரு முறை சேவல் கூவ நிலமை உணர்ந்து கண்களைத்திறந்தோம் இருவரும்.
/
அந்த சேவலைபிடிச்சி பிரியாணி போடுங்கய்யா!!

:)))))///

பாவம்ணே...
அது அவ வீட்டு சேவல்:)

தமிழன்-கறுப்பி... said...

மங்களுர் சிவா சொன்னது...
///வாழ்த்துக்களுடன்

50///

நன்றிகளுடன்,
காதல் கறுப்பியின் தமிழன்...

தமிழன்-கறுப்பி... said...

///Nice story..Like the way you wrote it. Especially the SL tamil is super..///

நன்றி குமித்தா வருகைக்கும் கருத்துக்கும் ஆமா நீங்க எந்த ஊரு...

தமிழன்-கறுப்பி... said...

மங்களுர் சிவா சொன்னது...

///தமிழன்... said...

தல எப்ப வந்திங்க
/

முந்தா நேத்தே வந்தேன்பா மீ தி பஸ்ட்டு போட உன் ப்ளாக் கமெண்ட் பாக்ஸ் ஓப்பன் ஆகலை திரும்ப நேத்து வந்தேன்!!

தமிழ் பிரியன் போட்டுட்டாரு!!

:)///

அப்படியா தல...
நன்றி நன்றி உங்கள் அன்புக்கு, இந்த அன்புதான் அண்ணே நம்மள வாழவைக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

@ ரம்யா

///எப்படி பாராட்டுவதுன்னே தெரியல தமிழன் :) மிகவும் ரசித்து எழுதிருக்கீங்க,நானும் மிகவும் ரசித்து படித்தேன் :)

\\மணலை விட்டு எழுந்து கொண்டோம் இருவரும் மணல் முழுவதும் காதல் குவிந்திருந்துது...\\

:))///

வாங்க ரம்யா...ரசித்து படித்தீர்களா!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

கயல்விழி சொன்னது...

///இதை முன்பே படிக்காமல் மிஸ் பண்ணிவிட்டேன். 'காதல் சொட்ட சொட்ட' என்பார்களே, அப்படி ஒரு அற்புதமான கதை இது///

வாங்க கயல்விழி (நல்ல பெயருங்க)
வருண் எப்படி இருக்கிறார்...?
'காதல் சொட்ட சொட்ட' அதனால்தானே அதனை தேவதையின் தருணம் என்றிருக்கிறேன்...

நன்றி...:)

இவன் said...

//நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!//

ஆழ்ந்து ரசித்த வசனங்கள் நண்பரே...
முழுவதையும் சொன்ன விதம் அழகான கவிதை

கயல்விழி said...

//வாங்க கயல்விழி (நல்ல பெயருங்க)//

நன்றி தமிழன்.

வருண் நலம்.

Kavinaya said...

//மறுகைவிரல்கள் என் மார்பில் என் பெயரை எழுதிக்கொண்டிருந்தது... நான் கண்கள் மூடி சாய்ந்திருக்க என் காதல் அதனை உன் பெயராக வாசித்துக் கொண்டிருந்தது என் உயிரில்...//

ஆஹா! ரொம்ப ரசிச்சு அனுபவிச்சு எழுதியிருக்ககீங்க :)

//கவிதைக்கெல்லாம் கற்பனை கிடைச்சிருது ஆனா அனுபவந்தான் கிடைக்க மாட்டேங்குது...//

நம்ப முடியலயே :) உண்மையா இருந்தா, சீக்கிரமே அனுபவம் கிடைக்க வாழ்த்துக்கள் :)

ரசிகன் said...

//கண்கள் மூடிய உறக்கத்திலும் உன் விரல்கள் என் நெற்றி வருடிக்கொண்டிருந்தது இந்த கரிசனத்துக்காகதானேடி! நான் உன்னை தேவதை என்பதும் இவ்வளவு நேரம் காத்துக்கிடந்ததும்.//

நெகிழ வைத்தது:) அருமை.

ரசிகன் said...

கற்பனையா இருந்தா, சூப்பர்:)

உண்மையா இருந்தா, நீங்க குடுத்து வைச்ச ஆளுதான்,இப்படிப்பட்ட அன்பிற்க்கு. வாழ்த்துக்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போட,

ரசிகன் said...

//அதுவரையும் அசைக்காமல் நீட்டியருந்ததில விறைத்து போன கால்களின் வலியை எனக்கு தெரியாமல் மறைக்க முயன்ற நீ உன்னையறியாமல் என் கைகளை இறுகப்பற்றினாய்...//

துணையின் வேதனைகளை சொல்லாமலே உணர முடிவது அன்பின் சிறப்பு எனத் தோன்றுகிறது.நான் தான் நீ,நீ தான் நான் என்பது போல,

ரசிகன் said...

//அந்த இரவில் கிடைத்திருந்தது அந்த விடுமுறைக்கான திருப்தியம் அடுத்த நான்கு மாதங்கள் பிரிவுக்கான பிரியாவிடையும்.

நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!//

இம்புட்டு ஃபீலிங்குன்னா, மேட்டர் நெசம்தான். கன்ஃப்ஃஃர்முடு, அப்படின்னா நேரடியா வாழ்த்துக்களே சொல்லிடலாம்ல்ல..:)
அடுத்த லீவுன்னு விட்டு வைக்காம ,கல்யாண பத்திரிக்கைக்கு ஏற்பாடு பண்ணுங்க மாம்ஸ்:)

தமிழன்-கறுப்பி... said...

@ இவன்

\//நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!//

ஆழ்ந்து ரசித்த வசனங்கள் நண்பரே...
முழுவதையும் சொன்ன விதம் அழகான கவிதை///

நன்றி நண்பரே வருகைக்கும் ரசனைக்கும் ..

தமிழன்-கறுப்பி... said...

@ கவிநயா...

//மறுகைவிரல்கள் என் மார்பில் என் பெயரை எழுதிக்கொண்டிருந்தது... நான் கண்கள் மூடி சாய்ந்திருக்க என் காதல் அதனை உன் பெயராக வாசித்துக் கொண்டிருந்தது என் உயிரில்...//

ஆஹா! ரொம்ப ரசிச்சு அனுபவிச்சு எழுதியிருக்ககீங்க :)

//கவிதைக்கெல்லாம் கற்பனை கிடைச்சிருது ஆனா அனுபவந்தான் கிடைக்க மாட்டேங்குது...//

நம்ப முடியலயே :) உண்மையா இருந்தா, சீக்கிரமே அனுபவம் கிடைக்க வாழ்த்துக்கள் :)///

நம்புங்க கவிநயா:) உங்க வாழத்துக்கள் சீக்கிரம் பலிக்கட்டும்.;)
நன்றி உங்கள் வருகைக்கும் ரசனைக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

@ ரசிகன்

//கண்கள் மூடிய உறக்கத்திலும் உன் விரல்கள் என் நெற்றி வருடிக்கொண்டிருந்தது இந்த கரிசனத்துக்காகதானேடி! நான் உன்னை தேவதை என்பதும் இவ்வளவு நேரம் காத்துக்கிடந்ததும்.//

நெகிழ வைத்தது:) அருமை///

வாங்கண்ணே வாங்க...
எப்படி இருக்கிறிங்க, ஊர் எப்படி இருக்கிறது...?

தேவதைகளின் அன்பு நெகிழ வைப்பவை தானே ரசிகன் மாம்ஸ்...

தமிழன்-கறுப்பி... said...

@ ரசிகன்...

//கற்பனையா இருந்தா, சூப்பர்:)//

நன்றி..! நன்றி...!

//
உண்மையா இருந்தா, நீங்க குடுத்து வைச்ச ஆளுதான்,இப்படிப்பட்ட அன்பிற்க்கு. வாழ்த்துக்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போட,//

அதுலயென்ன தேவதை ரெடின்னா உடனே கல்யாண சாப்பாடு போட்டுவோம்... :)

தமிழன்-கறுப்பி... said...

@ ரசிகன்...

//அதுவரையும் அசைக்காமல் நீட்டியருந்ததில விறைத்து போன கால்களின் வலியை எனக்கு தெரியாமல் மறைக்க முயன்ற நீ உன்னையறியாமல் என் கைகளை இறுகப்பற்றினாய்...//

துணையின் வேதனைகளை சொல்லாமலே உணர முடிவது அன்பின் சிறப்பு எனத் தோன்றுகிறது.நான் தான் நீ,நீ தான் நான் என்பது போல,///

ஆமா தல... அங்கதான இருக்கு காதலின் அர்த்தம்...
சொல்லாமல் உணர்ந்தாலும் அவள் அசையாமல் என்னை உறங்கவைத்திருந்த அன்பை என்வென்று சொல்ல...!

தமிழன்-கறுப்பி... said...

@ ரசிகன்...
//அந்த இரவில் கிடைத்திருந்தது அந்த விடுமுறைக்கான திருப்தியம் அடுத்த நான்கு மாதங்கள் பிரிவுக்கான பிரியாவிடையும்.

நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!//

இம்புட்டு ஃபீலிங்குன்னா, மேட்டர் நெசம்தான். கன்ஃப்ஃஃர்முடு, அப்படின்னா நேரடியா வாழ்த்துக்களே சொல்லிடலாம்ல்ல..:)
அடுத்த லீவுன்னு விட்டு வைக்காம ,கல்யாண பத்திரிக்கைக்கு ஏற்பாடு பண்ணுங்க மாம்ஸ்///

ஆமால்ல, உண்மையாத்தான் இருக்கும் போல அப்ப சீக்கிரமே சட்டு புட்டுனு வீட்டுல சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவோம்... :)
நன்றி ரசிகன் மாம்ஸ் பலநாட்களுக்கு பிநகான உங்கள் வருகைக்கும் வாழத்துக்களுக்கும், அர்த்தமுள்ள கருத்துக்களுக்கும்...

Mathu said...

ஹாய் தமிழன்
உங்கள் Blog மிகவும் நன்றாக உள்ளது.
You are a good creative person.வாழ்த்துக்கள்!

புகழன் said...

இதுபோன்ற பதிவுகளைத் தருவதற்கே நீங்கள் அடிக்கடி விடுப்பில் செல்லலாம் என்று தோன்றுகிறது.
அருமையான பதிவு.
தபு சங்கரின் உரைநடைக் கவிதைகளைப் போல
ஆனால் அதையும் விட மிக யதார்த்தமாய்.

இந்தப் பதிவைப் படித்த பின்தான் தெரியும் நீங்கள் ஒரு இலங்கைத் தமிழர் என்று.

தொடர்ந்து எழுதுங்கள்.

பரிசல்காரன் said...

ச்ச்ச்சே! என்னா எழுத்துங்க உங்களுது! ச்ச்சான்ஸெ இல்லை!

ரொம்ப ஒன்றிப்போய்ட்டேன்!

இவ்வளவு நாள் எப்படி விட்டேன்!

அருமை தமிழன்!

Selva Kumar said...

நூறு போட்டாத்தான் அடுத்த பதிவா ??

சொல்லுங்க போட்றலாம்...:-))

ஜி said...

//தமிழ் பிரியன் said...
அண்ணே உண்மையிலேயே சூப்பரா இருக்கு..... :)
//

அப்போ.. இதுக்கு முன்னாலயெல்லாம் பொய்யா சூப்பரா இருந்ததா?? ;)))

அருமையா இருந்ததுங்க உங்க கதை... :))

நவீன் ப்ரகாஷ் said...

தமிழன்... என்ன சொல்ல..?? உணர்வுகளின் படிமங்கள் என்னுள் இன்னமும்... மிக மிக அழகான உணர்வுகளை மிக மிக அழகான வார்த்தைகளால் அருமையாக வடித்திருக்கிறீர்கள்.... மிகவும் ரசித்துப் படித்தேன் தமிழ்... :))

நவீன் ப்ரகாஷ் said...

//உன்கைளை எடுத்து மார்போடு வைத்துக்கொண்டேன் நான்
மறுகையை எடுத்து என் கையோடு சேர்த்து மூடிக்கொண்டாய் நீ அங்கே ஒரு கவிதை அரங்கேறியது...//

:))) அழகான அரங்கேற்றம்....

நவீன் ப்ரகாஷ் said...

//ஒரு குழந்தையைப்போல ஒட்டிக்கொண்டு சாய்ந்தாய் நீ என் மார்போடு; அந்த தருணத்தில் மீண்டும் ஒரு முறை என் பிறவிப்பெருமையை உணர்த்தினாய் நீ எனக்கு... //

இப்படியும் நெய்ய முடியுமா தமிழால் உணர்வுகளை..? !!! பிரம்மித்தேன் தமிழ்... :)

தமிழன்-கறுப்பி... said...

///ஹாய் தமிழன்
உங்கள் Blog மிகவும் நன்றாக உள்ளது.
You are a good creative person.வாழ்த்துக்கள்///

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

@ புகழன்...
\\\
இதுபோன்ற பதிவுகளைத் தருவதற்கே நீங்கள் அடிக்கடி விடுப்பில் செல்லலாம் என்று தோன்றுகிறது.
அருமையான பதிவு.
தபு சங்கரின் உரைநடைக் கவிதைகளைப் போல
ஆனால் அதையும் விட மிக யதார்த்தமாய்.

இந்தப் பதிவைப் படித்த பின்தான் தெரியும் நீங்கள் ஒரு இலங்கைத் தமிழர் என்று.

தொடர்ந்து எழுதுங்கள்.
\\\
வாங்க புகழன்..:)

அவர் பெரிய ஆள் அவரோடு என்னை சேர்க்காதீர்கள் அவருடைய புத்தகங்கள் எதுவும் இதுவரை எனக்கு வாசிக்கக்கிடைக்கவில்லை என்பது என் வருத்தம் ஓரிரு ஆக்கங்கள் மட்டுமே படித்திருக்கிறேன் ஆனந்த விடனில் வநதது என்று நினைவு...

நான் யாழப்பாணம் புகழன்...

நன்றி..!

தமிழன்-கறுப்பி... said...

@ பரிசல்காரன்...
\\\
ச்ச்ச்சே! என்னா எழுத்துங்க உங்களுது! ச்ச்சான்ஸெ இல்லை!

ரொம்ப ஒன்றிப்போய்ட்டேன்!

இவ்வளவு நாள் எப்படி விட்டேன்!

அருமை தமிழன்!
\\\

நன்றி பரிசல்காரரே...!

உங்க எழுத்துக்கு கிட்டவும் வர முடியாது நாமெல்லாம்..:)

தமிழன்-கறுப்பி... said...

///
நூறு போட்டாத்தான் அடுத்த பதிவா ??

சொல்லுங்க போட்றலாம்...:-))
///

இன்னமும் நூறு ஆகலையே..;)
நேரம் கிடைக்கல அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

@ ஜி...

//தமிழ் பிரியன் said...
அண்ணே உண்மையிலேயே சூப்பரா இருக்கு..... :)
//

அப்போ.. இதுக்கு முன்னாலயெல்லாம் பொய்யா சூப்பரா இருந்ததா?? ;)))

அருமையா இருந்ததுங்க உங்க கதை... :))
\\\

நன்றி ஜி வருகைக்கும் கருத்துக்கும்..!

அது என்னோட கதை இல்லைங்க..;)

தமிழன்-கறுப்பி... said...

@ நவீன் ப்ரகாஷ்...
\\\
தமிழன்... என்ன சொல்ல..?? உணர்வுகளின் படிமங்கள் என்னுள் இன்னமும்... மிக மிக அழகான உணர்வுகளை மிக மிக அழகான வார்த்தைகளால் அருமையாக வடித்திருக்கிறீர்கள்.... மிகவும் ரசித்துப் படித்தேன் தமிழ்... :))
\\\

ரசித்துப்படிக்கும்படி இருந்ததா அது போதும்,சந்தோசம் நவீன் அண்ணன்..!

தமிழன்-கறுப்பி... said...

@ நவீன் ப்ரகாஷ்...
\\\
//உன்கைளை எடுத்து மார்போடு வைத்துக்கொண்டேன் நான்
மறுகையை எடுத்து என் கையோடு சேர்த்து மூடிக்கொண்டாய் நீ அங்கே ஒரு கவிதை அரங்கேறியது...//

:))) அழகான அரங்கேற்றம்
\\\

அந்த தருணங்கள் தானே பெண்மை தன்னை உணர்த்துகிற தருணங்கள்...

தமிழன்-கறுப்பி... said...

@ நவீன் ப்ரகாஷ்...
\\\

//ஒரு குழந்தையைப்போல ஒட்டிக்கொண்டு சாய்ந்தாய் நீ என் மார்போடு; அந்த தருணத்தில் மீண்டும் ஒரு முறை என் பிறவிப்பெருமையை உணர்த்தினாய் நீ எனக்கு... //

இப்படியும் நெய்ய முடியுமா தமிழால் உணர்வுகளை..? !!! பிரம்மித்தேன் தமிழ்... :)
\\\
அந்த சந்தர்ப்பம் ஒரு ஆணுக்கு கிடைப்பது பெருமையான விடயம்...

ஏதோ என்னால முடிஞ்சது அண்ணன்..!

Selva Kumar said...

ஆஹா..ஆஹா..

100...100..

Divya said...

101 ...... மொய் வைச்சாச்சு தமிழன்!!

Divya said...

century comments க்கு என் வாழ்த்துக்கள் தமிழன்!!

தமிழன்-கறுப்பி... said...

வழிப்போக்கன் said...
\
ஆஹா..ஆஹா..

100...100..
\
நூறாவது பின்னூட்டம் போட்ட வழிப்போக்கனுக்கு நன்றிகள்...

தமிழன்-கறுப்பி... said...

Divya said...
\
101 ...... மொய் வைச்சாச்சு தமிழன்!!
\
/
century comments க்கு என் வாழ்த்துக்கள் தமிழன்!!
/

அதனை கொண்டாடி சந்தோசப்பட்ட திவ்யா மாஸ்டருக்கு ரொம்ப நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

நன்றி அன்பு நெஞ்சங்களே உங்கள் நட்புக்கும் அங்கீகாரத்துக்கும்...:)