Thursday, May 13, 2010

உண்மைகளை எழுதிப்பார்த்தல்...

எல்லாவற்றையும் எழுதிப்பாத்துவிட வேண்டும் என்றிருக்கிறது என்னுடைய உண்மையான குணம், எழுத முடியாமல் தடுத்து வைத்திருக்கிறது நிர்ப்பந்தங்களோடு வருகிற காலம். உண்மைகளை எழுதிப்பார்ப்பதில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது அது எனக்கும் உங்களுக்கும் இடையில் விருப்பமில்லாத மாற்றங்களை ஏற்படுத்துவதாய் இருக்கக்கூடும் என்கிற உண்மை இருப்பினும்.


ஓடிக்கொண்டிருப்பவர்களே,

என் பலவீனங்களோடு எனக்கென்று ஒரு இயல்பு இருக்கிறது
அதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்
அல்லது புரிந்து கொள்ள நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்

என்னிடமான உங்கள் எதிர்பார்ப்புகள்
எப்பொழுதும் தோற்றுப்போவனவாகவே இருக்கக்கூடும்
உங்களோடு ஓடிவர என்னால் இயலவில்லைஎன்பதை
நான் ஒரு போதும் மறுப்பதில்லை

இல்லையெனில்
என்னிடமிருந்து தாரளமாக விலகிக்கொள்ளுங்கள்
இந்த ஒரு காரணம் போதும் உங்களுக்கு
என் புத்தியின் சுவாதீனம் குறித்த கேள்விகளை எழுப்புவதற்கு,


ஒரேயொரு விசயம்
என்னிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்கிற
குறைந்த பட்ச புரிதலையேனும் கொண்டு வாருங்கள்
உங்களின் அதிக பட்ச உண்மையாக அவை இருக்கலாம்

____________________________________________________________

மற்றொரு கோணம்,

என் இயலாமையை மறைக்கும் வழிகள்
இல்லாமல் போகும் தருணங்களில் எல்லாம்
உங்களை போலிகள் என்றுவிடுகிற தப்பித்தல்கள்
என்னிடம் இருக்கிறது
புரிதல்களற்ற வாழ்வுமுறையென
எப்பொழுதும் சொல்லிக்கொண்டாலும்
குற்றம் சுமத்துவதற்கு
காரணங்கள் கிடைத்தாலும்
உறங்கி எழுகிற நேரங்களில்
கலைந்து விடுகிறது வேசம்
முகம்பார்க்கும் கண்ணாடியில்
எத்தனை முறைதான் உமிழ்வது அல்லது
அதை எப்படித்தான் தவிர்ப்பது.

13.04.2010

14 comments:

தமிழ் மதுரம் said...

எப்பொழுதும் தோற்றுப்போவனவாகவே இருக்கக்கூடும்
உங்களோடு ஓடிவர என்னால் இயலவில்லைஎன்பதை//


என்னால் இந்த வரிகளோடு உடன் பட முடியவில்லை. உங்களை நீங்களே தாழ்த்திக் கவிதையில் வர்ணிப்பதனை நிராகரிக்கிறேன். இன்னொன்று அறிவில் சிறந்தவர்களும் தங்களைப் பெரியவர்கள் போலக் காட்டிக் கொள்ள மாட்டார்களாம்.

தமிழ் மதுரம் said...

முகம்பார்க்கும் கண்ணாடியில்
எத்தனை முறைதான் உமிழ்வது அல்லது
அதை எப்படித்தான் தவிர்ப்பது.//


கொளுத்தும் வெய்யிலின் தனிமையும், பாலைவனத்தில் இருந்தும் நீர்த்து விடாத தங்களின் கவி ஆளுமையும் இங்கே ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்கின்றன.


எதிர்பார்ப்பதற்கு இன்னும் நிறையவே இருக்கிறது.
தேவதைகள் பற்றிய கவிச்சாரல்கள், ஊர் நினைவுகள், அழகிய சொல்லாடல்கள் கொண்ட வசன கவிகள்.. இன்னும் அடுக்கிக் கொண்டு போகலாம்.


அரபு தேசத்தில் பதிவுகளும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்குமோ? :))

Thamiz Priyan said...

உண்மை எப்பவுமே முகம் பார்க்கும் கண்ணாடியில் தெளிவாவே தெரியும்.. :-)

மாயத் தோற்றங்கள் எப்பவுமே விசித்திரமானவை... ;-))

ஹேமா said...

நிறைய நாளுக்குப் பிறகு...!சுகம்தானே.எல்லாருமே காத்திருக்கிறோம் கறுப்பியைச்
சுகம் கேக்க.

சந்தனமுல்லை said...

முதல் கோணமே புரிஞ்சமாதிரி இருக்கு....:-) நாங்களும் மெதுவா எல்லாரையும் துரத்திக்கிட்டு ஓடற ஆள்தான்!

சந்தனமுல்லை said...

/உறங்கி எழுகிற நேரங்களில்
கலைந்து விடுகிறது வேசம் /

உங்களை யாரு மேக்கப் போட்டுகிட்டு தூங்க சொன்னா? ஹிஹி

ஆயில்யன் said...

நிறைய நாளுக்குப் பிறகு...!

தம்பி நலமா ?

சுகமா?

சந்தனமுல்லை said...

/ஓடிக்கொண்டிருப்பவர்களே,/
ஹப்பாடா...நல்லவேளை..நானில்லை! ;-))

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...

/உறங்கி எழுகிற நேரங்களில்
கலைந்து விடுகிறது வேசம் /

உங்களை யாரு மேக்கப் போட்டுகிட்டு தூங்க சொன்னா? ஹிஹி//

திஸ் இஸ்

1 மச்
2 மச்
3 மச்

பிச்சுப்புடுவோம் பிச்!

ஆச்சி

தம்பி ஆர்வத்தோட அரைவ்டு வித் சம் புனைவு டோண்ட் ப்ளே

சந்தனமுல்லை said...

/உங்களோடு ஓடிவர என்னால் இயலவில்லைஎன்பதை /

எங்களாலேயும்தான் முடியலை..கீழே இருக்கிற கவிதைய படிச்சு...அதெல்லாம் நாங்க சொல்லிக்கிட்டா இருக்கோம்..!! :))

ஆயில்யன் said...

//இல்லையெனில்
என்னிடமிருந்து தாரளமாக விலகிக்கொள்ளுங்கள்/

தம்பி அதெல்லாம் 1ம் இல்ல டோண்ட் ஓர்ரியா! நாங்க ஆல்வேஸ் வித் யூ !

நசரேயன் said...

//
இல்லையெனில்
என்னிடமிருந்து தாரளமாக விலகிக்கொள்ளுங்கள்
//

கடைப் பக்கம் வர வேண்டாமுன்னு சொன்னா நாங்களே ஒதுங்கிறோம்

நசரேயன் said...

//உங்களோடு ஓடிவர என்னால் இயலவில்லைஎன்பதை
நான் ஒரு போதும் மறுப்பதில்லை//

கல்லை கொண்டு எரிஞ்சா ஓடுவது கஷ்டம் தான்

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.