Monday, September 7, 2009

பயம்...!




சமநிலை இல்லாத உடம்பு
பெரும்பாரமெனவிருக்க விடிந்த பிறகே
உறங்கப்பழகியிருக்கிற இந்த நாட்களை
கெட்டுப்போன கண்களோடு
பார்த்துக்கொண்டிருக்கிறது இரவு

குறையாமல் இருக்கிற குளிருக்குத் தெரிவதில்லை
இன்னும் நான் இப்படியே இருக்க வேண்டிய
நாட்களின் எண்ணிக்கை மீதமிருப்பது,

என்னோடு ஒத்துழைக்க மறுக்கிற நாட்கள்
என்னை அவளுக்கு அறிமுகப்படுத்த
வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறது,

யாரையும் குறைசொல்ல முடியாதபடிக்கு இருக்கிறது
என்னை பரிசோதிக்கிற நிகழ்வில்
குற்றவுணர்வின் நியாயம்,

எல்லோரும் உறங்கிய பின்னிரவுகளில்
அந்தரங்கம் திறந்து கிடக்க
பயமுறுத்திக்கொண்டிருக்கிறது சுயம்!



picture: flickr

குறிப்புகள்:

\\
எதையோ எழுதத்தொடங்கிய சொற்கள் இப்படி முடிந்திருக்கிறது. எண்பத்தொரு வெள்ளைநிறத்தாள்களை கறுப்பு மற்றும் நீல நிறச் சொற்கள் கொண்டு நிரப்பியிருந்த அந்தக்கதையிலிருந்து சில சொற்களை மட்டும் எடுத்து கோர்திருக்கிறேன்.

\\
எழுதியவனும் இல்லாத முடிவும் இல்லாத இந்தக்கதைக்கு நான் வைத்திருக்கிற தலைப்பு- ஆயிரத்து இரு நூற்று இருபத்தேழு நாட்கள் திறக்கப்படாத ஜன்னல்.

\\
இந்தக்கதைக்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.எனக்கு தெரிந்த வகையில் குளிர் என்பதொரு குறியீடாக இருக்கலாம்.

10 comments:

ஆயில்யன் said...

நட்பின் கடமை!

மாதவராஜ் said...

தவிக்க வைக்கிற வரிகள்.
//விடிந்த பிறகே
உறங்கப்பழகியிருக்கிற இந்த நாட்களை
கெட்டுப்போன கண்களோடு
பார்த்துக்கொண்டிருக்கிறது இரவு//
நிறைய சொல்கிறது.
பாராட்டுக்கள்.

தமிழன்-கறுப்பி... said...

\\
ஆயில்யன் said...
நட்பின் கடமை!
\\

:)

நன்றி அண்ணன் சின்னப்பாண்டி.

தமிழன்-கறுப்பி... said...

மாதவராஜ் said...
தவிக்க வைக்கிற வரிகள்.
//விடிந்த பிறகே
உறங்கப்பழகியிருக்கிற இந்த நாட்களை
கெட்டுப்போன கண்களோடு
பார்த்துக்கொண்டிருக்கிறது இரவு//
நிறைய சொல்கிறது.
பாராட்டுக்கள்.
\\

நன்றி அண்ணன்.

கவிக்கிழவன் said...

அழகாய்... வித விதமாய் தனிப்பட்ட குணமுள்ளதாய்.

ஹேமா said...

தமிழன்,குளிர் இப்போதான் மெல்ல மெல்லத் தொடங்குகிறது.கறுப்பி என்னவாம்.உங்கள் உணர்வுகள் சொல்ல எப்போதும் ஒரு தவிப்போடு. ஆனால் அழகாய் இருக்கும்.

என் பக்கங்கள் வருவதையே மறந்துவிட்டீர்கள்.எங்கள் தேசத்தவர் என்கிற ஆவல் எனக்குள்.

நாணல் said...

நல்லா இருக்குங்க... அழகான வார்தைகள்... உணர்வுகளை அழகா கவிதையா சொல்லி இருக்கீங்க...

யாழினி said...

"சமநிலை இல்லாத உடம்பு
பெரும்பாரமெனவிருக்க விடிந்த பிறகே
உறங்கப்பழகியிருக்கிற இந்த நாட்களை
கெட்டுப்போன கண்களோடு
பார்த்துக்கொண்டிருக்கிறது இரவு.".

அழகான வரிகள்...

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு நண்பரே!

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு...
நன்றி நண்பர்களே.