Friday, August 14, 2009

பல்லிகள் உலாவுகிற அறை...




பூச்சி...

மல்லாந்து கிடக்கிற கரப்பான் பூச்சியின்
காற்றில் அலைகிற கால்களைப்போல
நூலிழைப்பிரியத்திற்காய் காத்திருக்கிறதெனது காலம்,

பழக்கமில்லாத தெருவில் உறுமுகிற நாயொன்றின்-
சாயலோடு என்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
சுவர் மீது விழித்திருக்கிற பல்லி,

அது அசையாமல் வைத்திருக்கிற வாலின் இலக்கு
எதிரேயிருக்கிற பூச்சியை குறி வைத்திருக்கிறது
விலகுதலுக்கு காத்திருக்கிறது பூச்சி,

வினாடிகளை சப்திக்கிற கடிகாரம்
பரலோகத்திலிருக்கிற பிதாக்களை எழுப்பிக்கொண்டிருக்கிறது
பல்லி பூச்சியை கவ்வுகிற வினாடியில்...

என்னை கடந்து போகிறது காலம்!



பின் குறிப்புகள்:

பல்லியும், பூச்சியும், கரப்பான்களும் பலவகைப் படிமங்களுக்கு அடிகோல்கிற விசயங்கள். மீதமிருக்கிற போதையோடு உறங்கப்போகையில் பல்லிகள் பற்றி எழுகிற சொற்களை எழுதி வைக்கத்தவறிவிடுகிறது எனது சோம்பல் அல்லது அலட்சியம்.

பல்லி முட்டைகள், கறுப்பு எச்சங்கள், அடிக்கடி பேசிச்செல்கிற பல்லிச்சத்தங்கள் என இருக்கும் என்னுடைய அறை. அப்பொழுதெல்லாம் பல்லிகளை கவனிப்பதற்கே நேரம் இருப்பதில்லை இப்பொழுது பல்லிகள் கனவில் வேறு வருகிறது ஆனால் பல்லிகளை காண்பதுதான் அரிதாயிருக்கிறது.மேசையிலிருக்கிற கொப்பிகளின் மேல் புணர்கிற பல்லிகளைக்கூட கவனித்ததில்லை என்னுடைய இரவுகள்.அந்த அளவுக்கு இரவுகளை களவாடியிருந்ததவள் நினைவுகள்.

கடந்த இரவில் குடித்துவைத்த தேத்தண்ணிக்கிளாசை சரிக்கிற சாம்பல் நிறப்பல்லி ஒவ்வொரு காலையிலும் என் கண்களில் படும். பல நாட்களை நான் கொஞ்சம் பெரிய அளவில் பயமுறுத்துவது போல் பார்க்கிற அந்த பல்லிக்கான புன்முறுவல் அல்லது வசையோடு தொடங்கியிருக்கிறேன்.ஆனால் ஒரு போதும் அதனை தாக்க முயன்றதில்லை.

இந்த சொற்களை எழுதிக்கொண்டிருக்கையில் கூட காதல், பெண்மை, காமம், குற்றவுணர்வு பயம், என நிறைய விசயங்கள் வந்து போயிற்று. இந்தசொற்களுனுக்கான புரிதல்களை உங்களிடமே விட்டுவிடுகிறேன்!

பல்லிகள் எப்பொழுதும் பேசுவவதில்லை.எப்பொழுதாவது பேசுகின்றன அப்பொழுது அவை பயமுறுத்தவும் செய்கின்றன.

தொடர்ந்து பல்லிகள் பேசுவதை கேட்கலாம்.


picture: http://www.redbubble.com/

32 comments:

ஆயில்யன் said...

தொடருங்கள் நண்பரே....!!!!

வாழ்த்துக்கள் !

நிஜமா நல்லவன் said...

தொடருங்கள் நண்பரே....!!!!

வாழ்த்துக்கள் !

நிஜமா நல்லவன் said...

பல்லின்னு சொல்லிட்டு வேற ஏதோ படம் போட்டு இருக்கிறாயே கறுப்பி:)

நிஜமா நல்லவன் said...

அந்த பல்லி எப்படி வாலை சுருட்டி வைத்திருக்கிறதோ அது மாதிரி கறுப்பட்டியும் வாலை சுருட்டி வச்சிருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்:)))

argentinito said...

muy bueno!

argentinito said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

// argentinito said...

muy bueno!//

அந்த ஊரு பாஷையில வெரி குட்ன்னு சொல்லிட்டு போயிருக்காரு

நன்றி கூகுள் மொழிமாற்ற சேவை !!!

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
// argentinito said...

muy bueno!//

அந்த ஊரு பாஷையில வெரி குட்ன்னு சொல்லிட்டு போயிருக்காரு

நன்றி கூகுள் மொழிமாற்ற சேவை !!!
\\\

:))

அண்ணே உண்மையாவா...?!

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு எனக்குப் பிடிச்சிருக்கு சார்

Thamiz Priyan said...

தொடருங்கள் நண்பரே....!!!!

வாழ்த்துக்கள் !

Thamiz Priyan said...

ஆயில்யன் said...
// argentinito said...

muy bueno!//

அந்த ஊரு பாஷையில வெரி குட்ன்னு சொல்லிட்டு போயிருக்காரு

நன்றி கூகுள் மொழிமாற்ற சேவை !!!
\\\

:))

அண்ணே உண்மையாவா...?!

கானா பிரபா said...

தொடருங்கள் நண்பரே....!!!!

வாழ்த்துக்கள் !

கானா பிரபா said...

ஆயில்யன் said...
// argentinito said...

muy bueno!//

அந்த ஊரு பாஷையில வெரி குட்ன்னு சொல்லிட்டு போயிருக்காரு

நன்றி கூகுள் மொழிமாற்ற சேவை !!!
\\\

:))

அண்ணே உண்மையாவா...?!

கானா பிரபா said...

யோ கறுப்பி

பல்லிக்கு பதில் ஸ்பைடர் மேன் படம் போட்டிருக்கிறீர்

பீர் | Peer said...

நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

நான் யாருக்கும் பயப்படுறது இல்லீங்க ஆனா இந்த பல்லிக்கு மட்டும் ரொம்ப பயம் அதுவும் உச்சுன்னு கொட்டுற சத்தம் ரொம்ப பயம்,

உங்க கூட டூ விட்டுக்கிறேன்

ஹேமா said...

தமிழன் பல்லியை பலியா வச்சு எதையோ பூடகமா சொல்லியிருக்கீங்க.ஆனா அந்தப் பல்லிதான் பாவம்.உங்கட கதையைக் கேக்க நேரமில்லாமல் திரியுது.என்றாலும் அருமை.
ஒருவேளை பல்லிதான் கறுப்பியோ !

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு தமிழ், என் உலகத்திலும் பல்லிகளுக்கு பெரும்பங்கு உண்டு.

மங்களூர் சிவா said...

/
தொடாந்து பல்லிகள் பேசுவதை கேட்கலாம்.
/

மனுசங்க பேசறதை கேக்கமாட்டியா??

மங்களூர் சிவா said...

/
நிஜமா நல்லவன் said...

அந்த பல்லி எப்படி வாலை சுருட்டி வைத்திருக்கிறதோ அது மாதிரி கறுப்பட்டியும் வாலை சுருட்டி வச்சிருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்:)))
/

ஹா ஹா
:))

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு நன்னிற சொந்தங்களே,

தனித்தனியா பதில் சொல்லலாம்னா பல்லி இன்னும் பேசக்காணோம்..

:))

நாணல் said...

என்னமோ சொல்ல வரீங்க... இப்ப புரியைலைன்னாலும்... பல்லி பேசினதுக்கப்புறம் புரியும்னு நினைக்கிறேன்... ;)

Thamira said...

என்ன சொல்றது தெரியலை. விளக்கவொண்ணாத உணர்வுகள் எழுகின்றன.

ஆயில்யன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன சொல்றது தெரியலை. விளக்கவொண்ணாத உணர்வுகள் எழுகின்றன.///


அப்பிடியெல்லாம் சொல்ல்ப்பிடாது பாஸ்!

அடுத்த வாட்டி தம்பி பூரான் தேளு கூட பேசும்போது உங்களுக்கு கிளியராகிடும் ! :))))

ஆயில்யன் said...

//மல்லாந்து கிடக்கிற கரப்பான் பூச்சியின்
காற்றில் அலைகிற கால்களைப்போல
நூலிழைப்பிரியத்திற்காய் காத்திருக்கிறதெனது காலம்,/


அடப்பாவி அது சாவறதுலேர்ந்து எஸ்கேப் ஆகவேண்டி துடுப்பு போட்டுக்கிட்டிருக்கீய்யா!

ஆயில்யன் said...

//என்னை கடந்து போகிறது காலம்!//

போகிறது இல்ல ராசா போச்சு எல்லாமே போச்சு! :)

ஆயில்யன் said...

//பின் குறிப்புகள்:/

ஒ டெபனெஷன் வேற சொல்லுறீங்களா ரைட்டு!

ஆயில்யன் said...

//பல்லியும், பூச்சியும், கரப்பான்களும் பலவகைப் படிமங்களுக்கு அடிகோல்கிற விசயங்கள்//


ஆமாம் எங்கயாச்சும் கதவிடுக்கில் அடிப்பட்டு செத்துப்போச்சுன்னா பல வருசங்களுக்கு அது அப்படியே அங்கேயே கிடந்து ஒரு படிமமா மாறிடும் - ரூமை ஒழுங்க கிளீன் பண்ணுங்கப்பா சாமியோவ்வ்வ்!

ஆயில்யன் said...

//மீதமிருக்கிற போதையோடு உறங்கப்போகையில் பல்லிகள் பற்றி எழுகிற சொற்களை எழுதி வைக்கத்தவறிவிடுகிறது எனது சோம்பல் அல்லது அலட்சியம்.//


அட! ஓர் இனமே உம்மால் தனது ஹிஸ்டரியை ஞாபகப்படுத்திக்கொள்ள இயலாமல் போகப்போகிறதா????

வேண்டாமய்யா அலட்சியம் உடன் பதிவு செய்துவிடுங்கள்!

Sanjai Gandhi said...

//பழக்கமில்லாத தெருவில் உறுமுகிற நாயொன்றின்-
சாயலோடு என்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
சுவர் மீது விழித்திருக்கிற பல்லி//

அட!

யாழினி said...

palli vayithla therigira muttai paarka paridhaba pattadhundupa...
aana unnmaya...adha paatha kai kaalellam nadungum...

azagana unga padaipu ...pallikita iruka aruvarupa kurachiduchi....

nan karupi...

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.