Monday, August 24, 2009

And, Now...






எப்பொழுதும் தீராத சொற்களோடு
எழுதுபவனொருவன் இருந்தான் என்னிடம்
ஏகாந்தம் மிகுகிற நேரங்களிலெல்லாம்
என்னுள் நிரம்புகிற சொற்களை வரைந்து கொண்டிருப்பான்,

எழுதி எழுதி எழுதித்தீராமல்
இருந்தது அவளுக்கான சொற்கள்.

எதிர்பாராததொரு மத்தியானத்தில்
என்னை மறந்து விடென்று விலகிப்போனாள்.

சொற்கள் நிரம்பித்திணற,
இப்பொழுது...
காணாமல் போனான் எழுதுபவன்!


பின்குறிப்புகள்:

ஆயில்யன்

தல

ரொம்ப நல்லவரு

ஜமால்

சென்னை ஆச்சி.



எப்பூடி..

32 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டு :)

ஆயில்யன் said...

அய்யய்யோ பயபுள்ளை பி.ந போட்டு எங்க மொக்கை கான்செப்ட்ட காலி பண்ணிடுச்சே :((((

ஆயில்யன் said...

//எப்பொழுதும் தீராத சொற்களோடு
எழுதுபவனொருவன் இருந்தான் என்னிடம்//


பேப்பர் தீருமா இல்ல எழுதுன பேப்பர்லயே எழுதிக்கிட்டிருப்பீங்களா தம்பி....???

ஆயில்யன் said...

//ஏகாந்தம் மிகுகிற நேரங்களிலெல்லாம்
என்னுள் நிரம்புகிற சொற்களை வரைந்து கொண்டிருப்பான்,//


ம்ம்!

ஆயில்யன் said...

//எழுதி எழுதி எழுதித்தீராமல்
இருந்தது அவளுக்கான சொற்கள்.//


எல்லாருக்குமே அப்படித்தான் எழுத ஆரம்பிச்சா தீராது ! :))

ஆயில்யன் said...

//எதிர்பாராததொரு மத்தியானத்தில்
என்னை மறந்து விடென்று விலகிப்போனாள்.///

ஆமாம் காலையில வந்த புள்ளைக்கு டிபன் தான் கொடுக்கல அட்லீஸ் மதியம் சோறாச்சும் கொடுத்திருக்கலாம்ல பாவிப்பயலே...! :(

ஆயில்யன் said...

//சொற்கள் நிரம்பித்திணற,
இப்பொழுது...
காணாமல் போனான் எழுதுபவன்!//

அந்த பயபுள்ளைய முதல்ல கண்டுபுடிச்சு கூப்பிட்டு வாய்யா ரொம்ப திணறிட்டா மூச்சு வுடறது கஷ்டமாகிடும்!

ஆயில்யன் said...

//பின்குறிப்புகள்:

ஆயில்யன்

தல

ரொம்ப நல்லவரு

ஜமால்

சென்னை ஆச்சி.
///


ஒ....!

இவுங்களெல்லாம் பின் குறிப்புகளா வராங்களா ரைட்டு! :)

தமிழன்-கறுப்பி... said...

தனியாளாக ஆடும் ஆயில்யனுக்கு கம்பனி கொடுக்க யாராவது வரும்படி கேட்டுக்கொள்கிறேன்..

:)

gulf-tamilan said...

mm :)))

Thamiz Priyan said...

அசத்திப்புட்ட தம்பி!

Thamiz Priyan said...

எல்லாருக்கும் பிகர் காணாமப் போனது தான் மேட்டரா? என்ன கருமம்ய்யா.. ஒருத்தருக்கு கூட ஃபிகரை கரெக்ட் பண்ணத் தெரியலியா? நாமெல்லாம் பதிவெழுதி..ம்ம்ம்ம்ம்ம்ம்

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

அய்யய்யோ பயபுள்ளை பி.ந போட்டு எங்க மொக்கை கான்செப்ட்ட காலி பண்ணிடுச்சே :((((///
விடுங்க சகோதரா.. விடுங்க தம்பி பிழைச்சு போகட்டும்..;-))))

ஹேமா said...

தமிழன்,கறுப்பி உங்களை வர வரச் சோம்பேறி ஆக்குறா.என்ர பக்கமெல்லாம் வந்து எந்தக் காலமாச்சு நீங்க.

Anonymous said...

//ஆயில்யன் said...

அய்யய்யோ பயபுள்ளை பி.ந போட்டு எங்க மொக்கை கான்செப்ட்ட காலி பண்ணிடுச்சே :((((//

எல்லாம் ஒரு முடிவோடத்தான் அலையறாங்கே :)

நட்புடன் ஜமால் said...

ஆயில்யன் on August 24, 2009 8:15 PM said...

அய்யய்யோ பயபுள்ளை பி.ந போட்டு எங்க மொக்கை கான்செப்ட்ட காலி பண்ணிடுச்சே :((((
]]

கண்ணா பின்னாவென்று ...

நட்புடன் ஜமால் said...

ஒருத்தருக்கு கூட ஃபிகரை கரெக்ட் பண்ணத் தெரியலியா? நாமெல்லாம் பதிவெழுதி..ம்ம்ம்ம்ம்ம்ம்]]


நான் - நான் - நான் இருக்கேன் ...

thamizhparavai said...

:-))
//அய்யய்யோ பயபுள்ளை பி.ந போட்டு எங்க மொக்கை கான்செப்ட்ட காலி பண்ணிடுச்சே :((((//
ரிப்பீட்டேய்ய்ய்

Thamira said...

எழுதி எழுதி எழுதித்தீராமல்
இருந்தது அவளுக்கான சொற்கள்.//

நான் எப்போதும் ரசிக்கும் அதே உணர்வு.!

நாணல் said...

நல்லா இருக்கே...

Unknown said...

//ஆயில்யன் on August 24, 2009 8:15 PM said...
அய்யய்யோ பயபுள்ளை பி.ந போட்டு எங்க மொக்கை கான்செப்ட்ட காலி பண்ணிடுச்சே :((((//

ஹா ஹா ஹா :)))))))))))

ரொம்ப நல்லா இருக்கு பதிவு :)))

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...விளக்கம் ப்ளீஸ்!!

Thamiz Priyan said...

///சந்தனமுல்லை on August 25, 2009 9:12 AM said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...விளக்கம் ப்ளீஸ்!!///
/

யோவ் ஒழுங்கா வந்து ஆச்சிக்கு தமிழில் விளக்கம் கொடு.. இல்லைன்னா பிச்சிப் போடுவோம் பிச்சு

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...

//சொற்கள் நிரம்பித்திணற,
இப்பொழுது...
காணாமல் போனான் எழுதுபவன்!//

அந்த பயபுள்ளைய முதல்ல கண்டுபுடிச்சு கூப்பிட்டு வாய்யா ரொம்ப திணறிட்டா மூச்சு வுடறது கஷ்டமாகிடும்!//

:)))))))))

சந்தனமுல்லை said...

/இப்பொழுது...
காணாமல் போனான் எழுதுபவன்!/

என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தார் பாஸ்!! பாக்க ஆயில்ஸ் மாதிரி இருப்பாரா?!! :))

யாழினி said...

yennachi...!!!

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு கறுப்பி.நிறைய வாசிக்க விட்டு போயிருக்கு.வந்து வாசிக்க வேணும்...

Radhakrishnan said...

ம்ம்... தேடிக் கண்டுபிடிக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை?

மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.

kanagu said...

/*எப்பொழுதும் தீராத சொற்களோடு
எழுதுபவனொருவன் இருந்தான் என்னிடம்
ஏகாந்தம் மிகுகிற நேரங்களிலெல்லாம்
என்னுள் நிரம்புகிற சொற்களை வரைந்து கொண்டிருப்பான்,

எழுதி எழுதி எழுதித்தீராமல்
இருந்தது அவளுக்கான சொற்கள்.

எதிர்பாராததொரு மத்தியானத்தில்
என்னை மறந்து விடென்று விலகிப்போனாள்.

சொற்கள் நிரம்பித்திணற,
இப்பொழுது...
காணாமல் போனான் எழுதுபவன்!*/

kavidhai superu thalaiva :)))

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

:)

பனையூரான் said...

வலைப்பதிவுக்கு வந்த கதை விளையாட்டுக்கு உங்களையும் அழைத்துள்ளேன்.

Sakthi said...

எதிர்பாராததொரு மத்தியானத்தில்
என்னை மறந்து விடென்று விலகிப்போனாள்.//


ungalukku mathityam,

enakku maalaineram,

innpruvanukku kaalai neram..


aanal paengalin vaarthaigal iruthil ithuvaagathan irukkum.....