Friday, August 7, 2009
பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகள் - 01
தேகம் திமிர் பிடித்தலைந்து கொண்டிருக்கிற காலமிது
பிடிமானமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது மனது
கட்டிப்போடுகிற பிரியங்கள் கொண்டென்னை இறுகப்பற்றிக்கொள்
உனக்கான யதார்த்தங்களை சுமந்தலைகிறதெனது உயிர்
என்னை கையாள்கிற நிதானங்கள் உனக்கிருக்கிறதாய்
உனது பற்றுதலுக்கு காத்திருக்கிறதெனது கணங்கள்
காலம் இனிய பதிலொன்றை சொல்லக்கூடும்
நீ என்னை காதலிக்காமல் இருந்து விடாதே.
____________________________________________________
பார்க்கிற பெண்களோடெல்லாம் தனகிக்கொண்டு திரிந்த என்னோடு தனகுகிறவளாக வந்த ராட்சஸி, மயக்கம் தருகிற கறுப்பு நிறமென காலத்தை கடத்திக்கொண்டு போகிற அழகுகளோடு எனக்குள் வரையப்பட்டிருந்த பெண்மைய உருவெடுத்து நடமாடினாள்.
காலம் நானறிய என் வாழ்வை கொண்டாடத்தொடங்கிய நாட்களின் தொடக்கமிது பரவசங்களை புதிது புதிதாய் அறிமுகம் செய்து கொண்டே இருந்தாள் அவள். இது வரை எழுதப்பட்ட என் வாழ்வின் வாசனை மிகுந்த நாட்குறிப்புகளுக்கு சொந்தக்காரியாய் அவளிருக்கிறாள்.
ஞாபகங்கள் தின்று கொண்டிருக்கிற எனக்குள் இருந்து பெருகிக்கொண்டிருக்கிற சொற்களை எழுதத் தொடங்கியிருக்கிறேன் இது இத்தோடு முடிந்து விடுகிற விசயம் போல் தெரியவில்லை இதன் முடிவில் அல்லது ஏதோவொரு பகுதியல் உங்களுக்கு கறுப்பியை அறிமுகப்படுத்துவேன்.
picture:photographersdirect.com
Labels:
தேவதையின் தருணங்கள்...,
புனைவு...
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
மீண்டும் கறுப்பியைப் பற்றியதொரு பதிவு
நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் உங்கள் கறுப்பிக்காக!
அருமை. காத்திருக்கிறோம்.
அற்புதமான உவமைகளை மிகத் தெள்ளிய தமிழில் தருவதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்
/
தேகம் திமிர் பிடித்தலைந்து கொண்டிருக்கிற காலமிது
பிடிமானமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது மனது
/
எய்ட்ஸ் உயிர்கொல்லி நோய் ஞாபகம் இருக்கட்டும்.
நல்ல பதிவு, கறுப்பியை அறிமுகப்டுத்துங்கள் தமிழ்.
கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நெருக்கமாக உணர்ந்தேன்.
நன்றி யாழினி
நன்றி வானம்பாடிகள்
நன்றி நேசமித்திரன்
நன்றி அனானி ஏனிப்படி? :)
நன்றி யாத்ரா
பார்க்கலாம் கறுப்பி என்ன சொல்கிறாள் என்பதை. ;)
நன்றி தாமிரா அண்ணே..
திகட்டாமல் ருசித்தது...
நன்றி தமிழரசி..
:)
நல்லாருக்கு மாப்பி!
நல்ல நடை தமிழன் - கறுப்பி....
ரசித்து ரசித்து வார்க்க வைக்கின்றீர்கள்... இது தான் உங்கள் பேரின்ப நாயகியின் தொடர்ச்சியா???
இதை வாசிக்கும் போது உருகி உருகி காதலித்த பெண்கள் எல்லாம் நினைவுக்கு வந்து விடுகிறார்கள்.....
Post a Comment