Tuesday, June 10, 2008

சிவாஜி வாயிலே ஜிலேபியும் நானும்...

"சிவாஜி வாயிலே ஜிலேபி..."

இந்த தொடர் விளையாட்டுல என்னையும் சேர்த்துக்கிட்ட நண்பருக்கு எம்மேல அப்படி என்ன கொலைவெறின்னு தெரியலை சின்னப்பையனான என்னைப்போய் இந்தமாதிரி பெரிய விளையாட்டுக்கெல்லாம கோர்த்துவிட்டு வேடிக்கைபாக்கிறாரு நல்லாயிருங்கண்ணே! நல்லாயிருங்க!

இருந்தாலும் என்னையும் பதிவெழுதுறவனா மதிச்சு! முதன் முதலா ஒரு விளையாட்டுக்கு அழைச்சிருக்கிறதால கட்டாயமா ஏதாவது எழுதியே ஆக வேண்டுமென்கிற நிலமை எனக்கு ஆனா இத படிக்கிற உங்க நிலமைதான் என்னாகுமோ தெரியல...

ஏதாவது எழுதறதுன்னு முடிவபண்ணியாச்சு ஆனா என்ன எழுதுறதன்னுதான் தெரியலை ஏன்னா நான் இது வரைக்கும் இந்த மாதிரி மொக்கைப்பதிவுகள் எல்லாம் எழுதினது கிடையாது (நம்புங்கப்பா! அப்ப இதுவரைக்கும் எழுதினது என்னான்னெல்லாம் கேக்கப்படாது...) அந்த அளவுக்கு அனுபவமும் கிடையாது அதனால...

சமாதானம் பகைத்துக்கொண்ட
தேசத்தோடு பகைத்துக்கொண்டு
கடல் கடந்து வந்து சேர்ந்த
அரபு தேசத்தில்
கிடைக்காமல் போனது
புத்தகவாசம்
அந்த நேரத்தில் கிடைத்தது
வலை சகவாசம்
எனக்கோ
வாசிக்கத்தொடங்கிய நாட்களில் இருந்து
எதையாவது
வாசிக்காமல் வந்ததில்லை உறக்கம்...
வேறெந்த திருப்தியும் இல்லாத
நாடகளுக்கு
விமோசனம் தந்தது
தமிழ் பதிவுகள்..
வாசிக்க கிடைத்ததில்
உறக்கமும் கிடைத்தது
நேசிக்கத் தெரிந்த
உறவுகளும் கிடைத்தது
எழுதப்படாத நாட்குறிப்புகளுக்காய்
எழுதப்பட்டது என் வலைப்பூவும்...
பிரிவின் வலிகளுக்கும்
தனிமையின் வெறுமைக்கும்
மனதிற்கு தேனாய் கிடைத்தது
தமிழ் மணம் என்கிற ஜிலேபி
அதனால் எழுத வேண்டிப்போனது
"சிவாஜி வாயில் ஜிலேபி"...

இனி ...
வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...
தமிழ் பதிவுகளுக்கு
நானொரு எல்கேஜி...
உங்களுக்கு நடுவில
நானொரு ஜீஜீபி...
நானெப்படி எழுத
'சிவாஜி வாயிலே ஜிலேபி'...

இது போதும்னு நினைக்கிறேன் இதுக்கு மேல யோசிச்சா எனக்கே அது நியாயமா தோணலை அதனால உங்களை எல்லாம் பிளைச்சுப்போகும்படி விட்டுடறேன் இது நான் பங்கு கொண்ட முதல் விளையாட்டுங்கறதால நான் யாரையுமே கோத்து விடாம விட்டுடறேன்...

எனக்கே, நான் இதை ஒப்பேத்தறதுக்குள்ள மூச்சு வாங்கி, முழி பிதுங்கி, நாக்கு தள்ளிடுச்சு... என்ன ஒரு வில்லத்தனம் இந்த தமிழ் பிரியனுக்கு (நன்றிண்ணே மனசார சொல்லிக்கறேன் )அண்ணே நேற்று கொஞ்சம் பிஸியாயிட்டேன் அதோட எல்லோரும் இந்த தலைப்புல பதிவுபோட்டுகிட்டிருந்தாங்களா அதுகளை படிச்சுப்பாக்கவே நேரம் போதலை அனேகமா எல்லோருக்கும் பின்னூட்டம் போட்டிருகன்னு நினைக்கிறேன்..

அதனால இன்னைக்கு வேலைக்கு வந்து சேர்ந்ததும் என்ன எழுதலாம்னு யோசிச்சு ஒரு மாதிரி ஒப்பேத்திட்டேன்...ஸ்ஸ்ஸ்ஷ்ஷ்ஸப்பாடா...

இதை இவ்வளவு நேரம் பொறுமையா படிச்ச உங்களுக்கு நன்றிங்கோ, என்னைய இந்த விளையாட்டுல சேர்த்த தமிழ் பிரியன் அண்ணனுக்கு மறுபடியும் நன்றிங்கோ....

79 comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட் தல

Thamiz Priyan said...

///சின்னப்பையனான என்னைப்போய் இந்தமாதிரி பெரிய விளையாட்டுக்கெல்லாம கோர்த்துவிட்டு வேடிக்கைபாக்கிறாரு நல்லாயிருங்கண்ணே!////
யாரு சின்ன பையன்... ஆகா.. கலக்கலா கவுஜயெல்லாம் எழுதிறீங்களே...

Thamiz Priyan said...

///சமாதானம் பகைத்துக்கொண்ட
தேசத்தோடு பகைத்துக்கொண்டு
கடல் கடந்து வந்து சேர்ந்த
அரபு தேசத்தில்
கிடைக்காமல் போனது
புத்தகவாசம்
அந்த நேரத்தில் கிடைத்தது
வலை சகவாசம்
எனக்கோ
வாசிக்கத்தொடங்கிய நாட்களில் இருந்து
எதையாவது
வாசிக்காமல் வந்ததில்லை உறக்கம்...
வேறெந்த திருப்தியும் இல்லாத
நாடகளுக்கு
விமோசனம் தந்தது
தமிழ் பதிவுகள்..
வாசிக்க கிடைத்ததில்
உறக்கமும் கிடைத்தது
நேசிக்கத் தெரிந்த
உறவுகளும் கிடைத்தது
எழுதப்படாத நாட்குறிப்புகளுக்காய்
எழுதப்பட்டது என் வலைப்பூவும்...
பிரிவின் வலிகளுக்கும்
தனிமையின் வெறுமைக்கும்
மனதிற்கு தேனாய் கிடைத்தது
தமிழ் மணம் என்கிற ஜிலேபி
அதனால் எழுத வேண்டிப்போனது
"சிவாஜி வாயில் ஜிலேபி"...///

கவிஞரே கவிதை நல்லா இருக்கு... :)

Thamiz Priyan said...

////வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...
தமிழ் பதிவுகளுக்கு
நானொரு எல்கேஜி...
உங்களுக்கு நடுவில
நானொரு ஜீஜீபி...
நானெப்படி எழுத
'சிவாஜி வாயிலே ஜிலேபி'...////
இதை படிக்கும் நாங்களெல்லாம்.... பிரி கேஜியா?

நிஜமா நல்லவன் said...

கவிஞரே கலக்கல்!!!

நிஜமா நல்லவன் said...

பின்னி பெடல் எடுத்து இருக்கீங்களே!!!

நிஜமா நல்லவன் said...

நீங்க பெரிய ஆளு அண்ணே!!!!

நிஜமா நல்லவன் said...

என்னமா எழுதி இருக்கீங்க!!!!

நிஜமா நல்லவன் said...

நானும் உங்களை மாதிரி எழுதனும்னு தான் நினைச்சேன். ஆனா எழுதியது என்னமோ........என்னத்த சொல்லுறது:(

நிஜமா நல்லவன் said...

ஆனாலும் சின்னப்பையன் ன்னு சொல்லுறதெல்லாம் ரொம்ப ஓவரு!!!

நிஜமா நல்லவன் said...

நான் ஒரு சின்னப்பையன்னு சொன்னா ஒத்துக்கலாம். உங்களை எப்படி????

தமிழன்-கறுப்பி... said...

ஆஹா வந்துட்டாய்ங்கப்பா....
வாங்க வாங்க...

நிஜமா நல்லவன் said...

//தமிழ் பிரியன் said...
மீ த பர்ஸ்ட் தல///



அட ஆமாம்ப்பா!!!!உங்களுக்கு மொத்தம் எத்தனை தலைங்க!!!!!

தமிழன்-கறுப்பி... said...

///மீ த பர்ஸ்ட் தல////

யு ஆர் வெல்கம் தமிழ் பிரியன்...

நிஜமா நல்லவன் said...

//தமிழன்... said...
ஆஹா வந்துட்டாய்ங்கப்பா....
வாங்க வாங்க...//



எங்கங்கன்னா வரணும்?

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன்...சொன்னது...

///சின்னப்பையனான என்னைப்போய் இந்தமாதிரி பெரிய விளையாட்டுக்கெல்லாம கோர்த்துவிட்டு வேடிக்கைபாக்கிறாரு நல்லாயிருங்கண்ணே!////
யாரு சின்ன பையன்... ஆகா.. கலக்கலா கவுஜயெல்லாம் எழுதிறீங்களே////

நன்றி நன்றி...:)

நிஜமா நல்லவன் said...

மீ த பைவ் தல!!!அங்க போட மறந்துட்டேன்.

நிஜமா நல்லவன் said...

///தமிழ் பிரியன்...சொன்னது...
சின்னப்பையனான என்னைப்போய் இந்தமாதிரி பெரிய விளையாட்டுக்கெல்லாம கோர்த்துவிட்டு வேடிக்கைபாக்கிறாரு நல்லாயிருங்கண்ணே!////
யாரு சின்ன பையன்... ஆகா.. கலக்கலா கவுஜயெல்லாம் எழுதிறீங்களே////


என்ன இது? தமிழன் எப்பவுமே கலக்கலா தான் எழுதுறாரு! உங்களுக்கு இப்ப தான் தெரியுமா?

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

/////தமிழன்... said...
ஆஹா வந்துட்டாய்ங்கப்பா....
வாங்க வாங்க...//


எங்கங்கன்னா வரணும்?///

அதான் வந்துட்டிங்கல்ல அப்பறமென்ன கேள்வி...

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

\\\//தமிழ் பிரியன் said...
மீ த பர்ஸ்ட் தல///

அட ஆமாம்ப்பா!!!!உங்களுக்கு மொத்தம் எத்தனை தலைங்க!!!!!///

தாங்கல...:(

நிஜமா நல்லவன் said...

/////தமிழன்... said...
நிஜமா நல்லவன் சொன்னது...

/////தமிழன்... said...
ஆஹா வந்துட்டாய்ங்கப்பா....
வாங்க வாங்க...//


எங்கங்கன்னா வரணும்?///

அதான் வந்துட்டிங்கல்ல அப்பறமென்ன கேள்வி.../////


அதான் வந்துட்டோம்ல. அப்புறம் என்ன வாங்க!!வாங்க?

நிஜமா நல்லவன் said...

///தமிழன்... said...
நிஜமா நல்லவன் சொன்னது...

\\\//தமிழ் பிரியன் said...
மீ த பர்ஸ்ட் தல///

அட ஆமாம்ப்பா!!!!உங்களுக்கு மொத்தம் எத்தனை தலைங்க!!!!!///

தாங்கல...:(///


அது யாருங்க புதுசா இருக்கிறாரே. தாங்கல நீங்க யாருங்க?

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன்...சொன்னது...

\\\////வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...
தமிழ் பதிவுகளுக்கு
நானொரு எல்கேஜி...
உங்களுக்கு நடுவில
நானொரு ஜீஜீபி...
நானெப்படி எழுத
'சிவாஜி வாயிலே ஜிலேபி'...////

இதை படிக்கும் நாங்களெல்லாம்.... பிரி கேஜியா?///

ஏன் தல உங்க வஆறாவது குழந்தையோட வயச சொல்றிங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

///தமிழன்... said...
நிஜமா நல்லவன் சொன்னது...

\\\//தமிழ் பிரியன் said...
மீ த பர்ஸ்ட் தல///

அட ஆமாம்ப்பா!!!!உங்களுக்கு மொத்தம் எத்தனை தலைங்க!!!!!///

தாங்கல...:(///

அது யாருங்க புதுசா இருக்கிறாரே. தாங்கல நீங்க யாருங்க?///


ஒரு முடிவாத்தான் வந்திருக்காப்புல...நல்லாயிருங்க.....

நிஜமா நல்லவன் said...

///இந்த தொடர் விளையாட்டுல என்னையும் சேர்த்துக்கிட்ட நண்பருக்கு எம்மேல அப்படி என்ன கொலைவெறின்னு தெரியலை///


இது கூடவா தெரியலை? நீங்க அவர் ப்ளாக் ல கும்மி அடிக்கிறது இல்லையாம். என்கிட்டே புலம்புறார்.

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

///நான் ஒரு சின்னப்பையன்னு சொன்னா ஒத்துக்கலாம். உங்களை எப்படி????///

அண்ணே புரொபைல் போட்டோவுல குழைந்தைங்க படத்தப் போட்டா நீங்க சின்னப்பையன்னு அர்த்தமில்லிங்கோ:))

Divya said...

\\இனி ...
வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...
தமிழ் பதிவுகளுக்கு
நானொரு எல்கேஜி...
உங்களுக்கு நடுவில
நானொரு ஜீஜீபி...\\

எப்படிங்க தமிழன் இப்படி எல்லாம் டி.ஆர் ரேஞ்சுக்கு எடுத்து விடுறீங்க, சூப்பரு:))))

நிஜமா நல்லவன் said...

'///சிவாஜி வாயிலே ஜிலேபியும் நானும்..."///


சிவாஜி வாய் என்ன அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெருசா? ஜிலேபியும் நீங்களும் எப்படி சிவாஜி வாய்க்குள்ள?

நிஜமா நல்லவன் said...

ஆஹா திவ்யா அக்கா வந்து இருக்காங்க!!!

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

///கவிஞரே கலக்கல்!!!

பின்னி பெடல் எடுத்து இருக்கீங்களே!!!

நீங்க பெரிய ஆளு அண்ணே!!!!


என்னமா எழுதி இருக்கீங்க!!!!////

என்னப்பா பெரிய மலையைத்தூக்கி தலையில வைக்கிறிங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

\இனி ...
வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...
தமிழ் பதிவுகளுக்கு
நானொரு எல்கேஜி...
உங்களுக்கு நடுவில
நானொரு ஜீஜீபி...\\

எப்படிங்க தமிழன் இப்படி எல்லாம் டி.ஆர் ரேஞ்சுக்கு எடுத்து விடுறீங்க, சூப்பரு:))))///


வாங்க வாங்க திவ்யா மாஸ்டர்
டி ஆரா
அவரு கூட போட்டி
போட நா யாருங்க...

நிஜமா நல்லவன் said...

///இருந்தாலும் என்னையும் பதிவெழுதுறவனா மதிச்சு! முதன் முதலா ஒரு விளையாட்டுக்கு அழைச்சிருக்கிறதால கட்டாயமா ஏதாவது எழுதியே ஆக வேண்டுமென்கிற நிலமை எனக்கு ஆனா இத படிக்கிற உங்க நிலமைதான் என்னாகுமோ தெரியல...////


என்னோட நிலைமை தெரியுது தானே?

தமிழன்-கறுப்பி... said...

'///சிவாஜி வாயிலே ஜிலேபியும் நானும்..."///


சிவாஜி வாய் என்ன அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெருசா? ஜிலேபியும் நீங்களும் எப்படி சிவாஜி வாய்க்குள்ள?///

அதான் சொன்னேனேப்பா அவசரத்தல எழதினேன்னு இப்படியெல்லாம தாக்கினா நான் அழுதிடுவேன்...

தமிழன்-கறுப்பி... said...

///இருந்தாலும் என்னையும் பதிவெழுதுறவனா மதிச்சு! முதன் முதலா ஒரு விளையாட்டுக்கு அழைச்சிருக்கிறதால கட்டாயமா ஏதாவது எழுதியே ஆக வேண்டுமென்கிற நிலமை எனக்கு ஆனா இத படிக்கிற உங்க நிலமைதான் என்னாகுமோ தெரியல...////

என்னோட நிலைமை தெரியுது தானே?

உங்களக்கு என்ன பரிகாரம் பண்ணனும் தல சொல்லுங்க செய்திடுவோம்...

நிஜமா நல்லவன் said...

///தமிழன்... said...
வாங்க வாங்க திவ்யா மாஸ்டர்
டி ஆரா
அவரு கூட போட்டி
போட நா யாருங்க...///



நீங்க யாருன்னு நீங்களே தான் சொல்லணும். எங்களுக்கு என்ன தெரியும்?

நிஜமா நல்லவன் said...

///தமிழன்... said...
உங்களக்கு என்ன பரிகாரம் பண்ணனும் தல சொல்லுங்க செய்திடுவோம்...
////


நீங்க இதோட பதிவு எழுதுறதை விட்டுடனும்:))

நிஜமா நல்லவன் said...

///(நம்புங்கப்பா! அப்ப இதுவரைக்கும் எழுதினது என்னான்னெல்லாம் கேக்கப்படாது...)///


அத கேட்டு வேற தெரிஞ்சிக்கனுமாக்கும்.

நிஜமா நல்லவன் said...

//அந்த நேரத்தில் கிடைத்தது
வலை சகவாசம்///


சகவாச தோஷம் யாரை விட்டுச்சு!!!!

நிஜமா நல்லவன் said...

///வாசிக்கத்தொடங்கிய நாட்களில் இருந்து
எதையாவது
வாசிக்காமல் வந்ததில்லை உறக்கம்...///



எதையாவது எல்லாம் படிக்காதீங்க.

நிஜமா நல்லவன் said...

///வேறெந்த திருப்தியும் இல்லாத
நாடகளுக்கு
விமோசனம் தந்தது
தமிழ் பதிவுகள்..///



தமிழ் பதிவுகள் நிலைமை அவ்ளோ மோசமா? என்ன கொடும இது?

நிஜமா நல்லவன் said...

///நேசிக்கத் தெரிந்த
உறவுகளும் கிடைத்தது///



யாரோ யாருக்குள் யார் யாரோ:)

நிஜமா நல்லவன் said...

///தனிமையின் வெறுமைக்கும்
மனதிற்கு தேனாய் கிடைத்தது
தமிழ் மணம் என்கிற ஜிலேபி///



கிடைத்தது தேனா? இல்லை ஜிலேபியா? தெளிவா சொல்லுங்கப்பா!!!

நிஜமா நல்லவன் said...

///இது போதும்னு நினைக்கிறேன் இதுக்கு மேல யோசிச்சா எனக்கே அது நியாயமா தோணலை ///


எனக்கு நியாயமா தோணுதே. நீங்க ஏன் இன்னும் கொஞ்சம் யோசிக்க கூடாது?

தமிழன்-கறுப்பி... said...

///தமிழன்... said...
உங்களக்கு என்ன பரிகாரம் பண்ணனும் தல சொல்லுங்க செய்திடுவோம்...
////

நீங்க இதோட பதிவு எழுதுறதை விட்டுடனும்:))///

இது ஆகாது நான் ஒப்புக்க மாட்டேன்...எதுவா இருந்தாலும் பேசித்தீர்க்கலாம்..

தமிழன்-கறுப்பி... said...

///(நம்புங்கப்பா! அப்ப இதுவரைக்கும் எழுதினது என்னான்னெல்லாம் கேக்கப்படாது...)///

அத கேட்டு வேற தெரிஞ்சிக்கனுமாக்கும்.///

எப்படிப்பா சொல்லாமலே.. புரிஞ்சுக்கறிங்க நல்ல அறிவுப்பா உங்களுக்கு

நிஜமா நல்லவன் said...

///இது நான் பங்கு கொண்ட முதல் விளையாட்டுங்கறதால நான் யாரையுமே கோத்து விடாம விட்டுடறேன்...///



அடுத்தவங்களுக்கும் கொஞ்சம் பங்கு கொடுங்கப்பா. எல்லா பங்கையும் நீங்களே எடுத்துகிட்டா எப்படி?

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

///நேசிக்கத் தெரிந்த
உறவுகளும் கிடைத்தது///

யாரோ யாருக்குள் யார் யாரோ///

?????:)

ஆதல ஒருத்தரு நீங்க அண்ணே...

நிஜமா நல்லவன் said...

///தமிழன்... said...
///(நம்புங்கப்பா! அப்ப இதுவரைக்கும் எழுதினது என்னான்னெல்லாம் கேக்கப்படாது...)///

அத கேட்டு வேற தெரிஞ்சிக்கனுமாக்கும்.///

எப்படிப்பா சொல்லாமலே.. புரிஞ்சுக்கறிங்க நல்ல அறிவுப்பா உங்களுக்கு///


அப்ப மத்தவங்களுக்கு எல்லாம் என்ன கெட்ட அறிவா?

நிஜமா நல்லவன் said...

///அனேகமா எல்லோருக்கும் பின்னூட்டம் போட்டிருகன்னு நினைக்கிறேன்..///


சமையல் குறிப்புல கூட கும்மி அடிச்சி வச்சி இருக்கீங்க. ஜிலேபி மேட்டர் விட்டு வைப்பீங்களா என்ன?

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

///இது நான் பங்கு கொண்ட முதல் விளையாட்டுங்கறதால நான் யாரையுமே கோத்து விடாம விட்டுடறேன்...///

அடுத்தவங்களுக்கும் கொஞ்சம் பங்கு கொடுங்கப்பா. எல்லா பங்கையும் நீங்களே எடுத்துகிட்டா எப்படி?///

தேவைன்னா நீங்க இன்னொரு பதிவு போடுங்கண்ணே...

நிஜமா நல்லவன் said...

நான் தானே 50?

நிஜமா நல்லவன் said...

போச்சு!போச்சு!! சொந்த பதிவுல கூட அவங்களே 50 அடிச்சுக்குறாங்க? ச்சே என்ன சின்ன புள்ள தனமா இருக்கு?

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

///தமிழன்... said...
///(நம்புங்கப்பா! அப்ப இதுவரைக்கும் எழுதினது என்னான்னெல்லாம் கேக்கப்படாது...)///

அத கேட்டு வேற தெரிஞ்சிக்கனுமாக்கும்.///

எப்படிப்பா சொல்லாமலே.. புரிஞ்சுக்கறிங்க நல்ல அறிவுப்பா உங்களுக்கு///

அப்ப மத்தவங்களுக்கு எல்லாம் என்ன கெட்ட அறிவா?///

உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல அறிவுண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

////போச்சு!போச்சு!! சொந்த பதிவுல கூட அவங்களே 50 அடிச்சுக்குறாங்க? ச்சே என்ன சின்ன புள்ள தனமா இருக்கு?///

அடச்சே! நான் இதை எதிர்பாக்கலைப்பா ஆனா என்ன செய்ய இப்படி அடிச்சாதான் நம்மால 50 அடிக்க முடியுத வேற எங்கயும் விடுறாங்க இல்லைப்பா...:)

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

///அனேகமா எல்லோருக்கும் பின்னூட்டம் போட்டிருகன்னு நினைக்கிறேன்..///

சமையல் குறிப்புல கூட கும்மி அடிச்சி வச்சி இருக்கீங்க. ஜிலேபி மேட்டர் விட்டு வைப்பீங்களா என்ன?//

பதிவு போட தெரியலைன்னா இப்படி ஏதாவது செய்துதானே நம்மள நிலைநிறுத்த வேண்டியிருக்கு...

நிஜமா நல்லவன் said...

சரி நான் கிளம்புறேன். அடுத்த தடவை பதிவு போட்டா மெயில் பண்ணி சொல்லுங்க. அத விட்டுட்டு சமையல் பதிவுல போய் புலம்பி வைக்காதீங்க:))

Anonymous said...

Excellent

/பிரிவின் வலிகளுக்கும்
தனிமையின் வெறுமைக்கும்
மனதிற்கு தேனாய் கிடைத்தது/
I agree with you 100%.

Ravi

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

////சரி நான் கிளம்புறேன். அடுத்த தடவை பதிவு போட்டா மெயில் பண்ணி சொல்லுங்க. அத விட்டுட்டு சமையல் பதிவுல போய் புலம்பி வைக்காதீங்க:))///

நன்றி நன்றி தல ....இந்த அன்பொன்றே போதும் அதைத்தான் பதிவிலும் சொல்லியிருக்கிறேன்...

தமிழ் said...

/இனி ...
வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...
தமிழ் பதிவுகளுக்கு
நானொரு எல்கேஜி...
உங்களுக்கு நடுவில
நானொரு ஜீஜீபி...
நானெப்படி எழுத
'சிவாஜி வாயிலே ஜிலேபி'/

கலக்கல்

Shwetha Robert said...

\\இனி ...
வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...
தமிழ் பதிவுகளுக்கு
நானொரு எல்கேஜி...
உங்களுக்கு நடுவில
நானொரு ஜீஜீபி...
நானெப்படி எழுத
'சிவாஜி வாயிலே ஜிலேபி'...\

very funny:)

you rock in your flow of writing, nice:-)

தமிழன்-கறுப்பி... said...

Ravi...said...

///Excellent

/பிரிவின் வலிகளுக்கும்
தனிமையின் வெறுமைக்கும்
மனதிற்கு தேனாய் கிடைத்தது/
I agree with you 100%.

Ravi///


நன்றி வருகைக்கு நண்பரே...
மத்திய கிழக்கில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது இந்த கவலை என்ன செய்ய...

தமிழன்-கறுப்பி... said...

திகழ்மிளிர்...சொன்னது...

///இனி ...
வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...
தமிழ் பதிவுகளுக்கு
நானொரு எல்கேஜி...
உங்களுக்கு நடுவில
நானொரு ஜீஜீபி...
நானெப்படி எழுத
'சிவாஜி வாயிலே ஜிலேபி'/

கலக்கல்///

நன்றி திகழ்மிளிர்...
என்ன இருந்தாலும் டி.ஆர் ஸ்டைலை எல்லோரும் ரசிக்கத்தான் செய்கிறார்கள்..

தமிழன்-கறுப்பி... said...

ஷ்வேதா சொன்னது...

///\\இனி ...
வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...
தமிழ் பதிவுகளுக்கு
நானொரு எல்கேஜி...
உங்களுக்கு நடுவில
நானொரு ஜீஜீபி...
நானெப்படி எழுத
'சிவாஜி வாயிலே ஜிலேபி'...\

very funny:)

you rock in your flow of writing, nice:-)///

வாங்க ஷ்வேதா...நன்றி வருகைக்கு..நீங்களும் டி ஆர் ரசிகையா சொல்லவே இல்ல..

ஹேமா said...

தேசத்தோடு பகைத்துக் கொண்டாலும் மனம் மட்டும் எங்கள் தேசத்தோடுதான்.எப்போதுமே மறக்க முடியாமல் கவிதையோ கட்டுரையோ ஞாபகமாய் ஒரு வரியாவது எழுத வருகிறதே,அதுதான் தேசத்தைப் பற்றிய எங்கள் வலி. அருமை..தொடருங்கள்.

புகழன் said...

நிஜமா நல்லவன் உடன் முழுக் கும்மியையும் அடித்து விட்டதால் சிம்பிளான வரியில் கமென்ட்.
“நல்லாயிருக்கு வாழ்த்துகள்.“

மங்களூர் சிவா said...

வணக்கம்

மங்களூர் சிவா said...

தமிழன் நலமா?

மங்களூர் சிவா said...

நேத்து ராத்திரி தூங்கினீங்களா??

மங்களூர் சிவா said...

இல்ல இத பத்தியே ரோசிச்சிகிட்டிருந்தீங்களா??

மங்களூர் சிவா said...

எது எப்பிடியோ

மங்களூர் சிவா said...

எழுதீட்டிங்கல்ல பதிவு

மங்களூர் சிவா said...

அதுதான் மேட்டரு!!

மங்களூர் சிவா said...

///சின்னப்பையனான என்னைப்போய் இந்தமாதிரி///

நீ சின்ன பையனா!?!?

வெளங்கீரும்!!

ராமலக்ஷ்மி said...

அரபு தேசத்து தனிமையில் தொடங்கி..
தமிழ் மணம் தந்த இனிமைதான் ஜிலேபி என முடித்து..நல்லா எழுதியிருக்கீங்க.

//வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...//

எட்டு மாதம் முடித்த நீங்களே எப்படிச் சொன்னால் போன மாதம் வந்த நான் நர்ஸரி என வைத்துக் கொள்ளலாமா? அதான், 'அறம் செய்ய விரும்பு' பாணியில் போட்டிருக்கேன் பாருங்க சி.வா.ஜி.

தமிழன்-கறுப்பி... said...

ஹேமா சொன்னது...

///தேசத்தோடு பகைத்துக் கொண்டாலும் மனம் மட்டும் எங்கள் தேசத்தோடுதான்.எப்போதுமே மறக்க முடியாமல் கவிதையோ கட்டுரையோ ஞாபகமாய் ஒரு வரியாவது எழுத வருகிறதே,அதுதான் தேசத்தைப் பற்றிய எங்கள் வலி. அருமை..தொடருங்கள்///

வாங்க ஹேமா நன்றி உங்கள் வருகைக்கும் உணர்வுகளின் பகிர்வுக்கும்...
அந்த வலி எப்பொழுது தீருமோ...

தமிழன்-கறுப்பி... said...

புகழன் சொன்னது...

///நிஜமா நல்லவன் உடன் முழுக் கும்மியையும் அடித்து விட்டதால் சிம்பிளான வரியில் கமென்ட்.
“நல்லாயிருக்கு வாழ்த்துகள்.“///

வாங்க புகழன் என்னது கும்மியா அப்பிடின்னா...:)?
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

//வணக்கம்//
வணக்கம் சிவாண்ணே

//தமிழன் நலமா?//
நலமாக இருக்கிறேன்
(உங்க புண்ணியத்தில...)

//நேத்து ராத்திரி தூங்கினீங்களா??//

ஆமாண்ணே...

//இல்ல இத பத்தியே ரோசிச்சிகிட்டிருந்தீங்களா??//

யோசிச்சிருந்தா இப்படியெல்லாம கொடுமைப்படுத்தி இருப்பனாண்ணே...

//எது எப்பிடியோ எழுதீட்டிங்கல்ல பதிவு அதுதான் மேட்டரு!!//

சூப்பரு...:)

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா சொன்னது...

\\\///சின்னப்பையனான என்னைப்போய் இந்தமாதிரி///

நீ சின்ன பையனா!?!?

வெளங்கீரும்!!///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

அண்ணே நான் சின்னபையன் தாண்ணெ நம்புங்க எழுத்துக்கும் சரி வயதிலையும் சரி ...:)

தமிழன்-கறுப்பி... said...

ராமலஷ்மி சொன்னது...

///அரபு தேசத்து தனிமையில் தொடங்கி..
தமிழ் மணம் தந்த இனிமைதான் ஜிலேபி என முடித்து..நல்லா எழுதியிருக்கீங்க.

//வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...//

எட்டு மாதம் முடித்த நீங்களே எப்படிச் சொன்னால் போன மாதம் வந்த நான் நர்ஸரி என வைத்துக் கொள்ளலாமா? அதான், 'அறம் செய்ய விரும்பு' பாணியில் போட்டிருக்கேன் பாருங்க சி.வா.ஜி.///

வாங்க ராமலஷ்மி நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
அது உங்க எழுத்து திறமையைப்பொறுத்தது....(நானெல்லாம எவ்வளவு தலைகீழா யோசிச்சாலும் எல்கேஜியை தாண்ட முடியாது...)