Tuesday, May 27, 2008

பாணும் யாழ்ப்பாணமும்...


நான் பொதுவாக இலங்கை செய்திகளை படிக்கிறதே கிடையாது வேற என்னத்தை சொல்லுறது எல்லாம் அதே செய்திகள் மனதை ரணமாக்குகிறதும் விரக்தியை அதிகரிப்பதுமான வன்முறை செய்திகள்தான் எந்த பக்கங்களை புரட்டினாலும் அதனாலேயே அதனை தவிர்த்துக்கொண்டிருக்கிறேன் மற்றபடி நானொன்றும் நாட்டுக்கெதிரான அள்கிடையாது சரி அந்த அரசியலை விட்டுட்டு நான் சொல்ல வந்த விசயத்துக்கு வாறன் பல நாட்களுக்கு முன்னர் படித்த செய்தியும் கேள்விப்பட்ட நேரத்தில் என்னை பாதித்ததுமான ஒரு விசயம் பாணின்ரை விலை (price of a bread) உதென்ன பாணின்ரை விலை மட்டும்தான் உம்மை பாதிச்சுதோ என்று வடிவேலுவை பார்த்திபன் கேக்குற மாதிரி குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது அப்புறம் நான் அழுதிடுவேன்...

இருந்தாலும் பாணொன்றும் அவ்வளவு சாதாரணமான விசயமில்லை பாதிக்காமல் விடுகிற அளவுக்கு அது யாழ்பாணத்திலை இருந்த அனேகமான ஆட்களுக்கு நல்லா தெரியும்.பாண் (Bread) என்றாலே யாழ்பபாணத்தில் இருந்தவர்களுக்கும் இருக்கிறவர்களுக்கும் மிக நெருக்கமான விசயம் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு விடயம் அவர்களின் நினைவலைகளில் அது அவர்களுடைய அன்றாட உணவு என்பதை கடந்து பல நினைவுகளை ஏற்படுத்தக்கூடும் அப்படித்தான் எனக்கும் அந்த நேரத்தில் பல ஞாபகங்கள் என்நினைவின் வெளியில் ஒன்றுக்கொன்று கோர்வையில்லாமல் வந்து பல நிமிடங்களை விழுங்கிப்போயிருந்தது நான் அடுத்த வேலைக்கு தயாராகும் நிமிடம் வரையில்...

நானறிய பாண் பத்து ரூபாவுக்கும் வாங்கியிருக்கிறேன் அதற்கு குறைவாகவும் வாங்கியிருக்கலாம் ஆனால் அது நினைவில் இல்லை இப்ப நான் இதுக்காக வீட்டுக்கு Call பண்ணி கேட்டால் அதுக்கொரு தனி மங்களம் விழும் எண்ட படியாலை (நான் இப்படி எல்லாம் எழுதி உங்களை கொடுமைப்படுத்துறது அவையளுக்கு தெரியாது) அது வேண்டாம் பத்து ரூபாவிலிருந்து நான் கடைசியா யாழ்ப்பாணத்தில பாண் வாங்கேக்க ஒரு றாத்தல் பாணின்ரை விலை இருபத்திரண்டு ரூபா ஆனா அது இப்ப விக்கிற விலை வேண்டாம் அதை கேட்டா மனம் தாங்காது ( உங்களுக்கும் தெரியும்தானே)

பள்ளிக்கூடம் போகும் நாட்களில் ஒவ்வொரு நாளும் காலமை கடைக்கு பாண் வாங்கப்போறது எனக்கிருக்கிற முக்கிமான வேலைகளில் ஒன்று எனக்கு மட்டுமில்லை அனேகமான மாணவர்களுக்கு அல்லது அவர்களுடைய வீட்டுக்காரரில் ஒருவருக்கு நாளாந்த கடைமைகளில் ஒன்று இந்த பாண்வாங்குகிற வேலை காலமை மட்டுமில்லை பள்ளிக்கூட மதிய இடைவேளையிலும் பணிஸ்தான் சாப்பாடு பள்ளிக்கூடம் போற ஆக்களுக்க மட்டுமில்லை யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான குடும்பங்களுக்கு பாண்தான் ஒரு நாளின் காலை அல்லது இரவு உணவாக இருந்தது என்றால் அது மிகையல்லவே...

என்ன கொடுமையடா இது ஒவ்வொருநாளும் பாண்தான் சாப்பாடு என்று சலித்தாலும் தப்பித்தவறி இரண்டு மூன்று நாட்களுக்கு பாண் சாப்பிட முடியாமல் போனால் ஒரு மாதிரி சாப்பாட்டில ஏதோ குறையிற போல நான் மட்டுமில்லை பலர் உணர்ந்து கூற கேள்விப்பட்டிருக்கிறன் என்தான் இருந்தாலும் சிற்றி பேக்கரி பாணும் சுட வச்ச பழைய மீன்கறிறும் சாப்பிட்டாலே அது அந்த நாள் முழுக்கப் போதும் போல இருக்கும் அப்பத்தான் ஏதோ சாப்பிட்ட மாதிரி நாக்கு சரியா வந்திருக்கெண்டு சொல்லுகிற நடுத்தர வயது குடும்பஸ்தர்கள் சொல்ல கேட்டும் அதை பல பெரிசுகள் ஆமோதிக்கவும் பார்ததிருக்கிறேன்.
எனக்கும் அப்படித்தான் வேலை நிமித்தம் வெளி ஊருக்கு வந்து விடுமுறையில் ஊருக்கு போகும் பொழுது நாளில் ஒரு முறையேனும் பாண் சாப்பிட வேண்டியிருக்கும் ஆனாலும் அது பிடித்திருக்கும் சுடச்சுட பாணும் பழைய மீன்கறியும் அது ஒரு தனி ருசி.பாண் ஒரு இலகுவான உணவும் கூட காலை நேர பரபரப்புக்கும் நேரமின்மைக்கும் வெகு சுலபமான உணவு அதற்கு முக்கிய காரணம் பாணுக்குரிய பக்க உணவுதான் வாழைப்பழம், முட்டைப்பொரியல், சம்பல், வெந்தயக்குழம்பு, சோயாமீற்கறி, பருப்புக்கறி, சாம்பார், கத்தரிக்காய்+வெங்காயம் கலந்து பொரியல், ஜாம்+பட்டர், பழையகறி ஏன் சொதியோட கூட சாப்பிட்டுட்டு போயிடலாம் அந்தமாதிரி பாணுக்குரிய "கொம்பினேசனுக்கு" கனக்க மினக்கடத்தேவையில்லை, அது மட்டுமில்லை பாணிலையே விதம் விதமா ருசியோட செய்யுற அளவுக்கு எங்கடை ஊர் பொம்பிளைகளுக்கு தெரிஞசிருந்தது வகை வகையான பக்க உணவுகளோட பாண் ஒவ்வொரு வீட்டுக்கு ஒவ்வொருமாதிரரி உறவாடியிருக்கிறது...

இது இப்படி இருக்க முறையான போக்கு வரத்தும் உணவுப்பொருட்களின் வருகையும் இல்லாத நாட்களில் பாணுக்கு பெரும் கிராக்கி வந்திடம் காலமை ஆறரைக்கு முன்னம் போகாவிட்டால் பாண்கிடைக்காது அதுவும் முதல் நாளே சொல்லி வச்சாத்தான் கடைக்காரர் வச்சிருப்பார் அப்படி இல்லையென்றால் அலைஞ்சு திரிய வேணும்அப்படியான நாட்களில் பாண் வாங்கத்தெரிந்தாலே ஒரு கெட்டித்தனமான ஆள்தான் இந்த நிலை கொஞ்சம் சாதாரணமான நாட்களில்தான் இன்னும் கொஞ்சம் இறுக்கமான நாட்களில் பாணுக்கு வரிசையில் நிற்கவேண்டியிருந்திருக்கிறது...

இடப்பெயர்வு காலங்களில் ஒவ்வொரு முகாமுக்கும் பேக்கரிகளிலிருந்து பாண் கொடுப்பார்கள் அது கிராம சேவகர்கள் மமூலமாக நடந்தது. சில கடைக்காரர்கள் தங்கள் செலவில் இன்னநாளைக்கு இன்ன முகாமுக்கு நாங்கள் தருகிறோம் என்றும் பணமும் மனமும் உள்ள நல்லவாகள் நாங்கள் இன்று தருகிறோம் என்று காலை உணவாக பாண் வாங்கி கொடுத்ததையும் நான் அறிவேன் அது மட்டுமில்லை முகாம்களில் இருந்தவர்களுக்கு பாண்தான் பல நாட்கள் கைகொடுத்திருக்கிறது. பாணும் பருப்புக்கறியும் அவர்கள் நிரந்தரமான காலை உணவாக இருந்த முகாம்களும் இருந்திருக்கிறது...

யாழ்ப்பாண இடப்பெயர்வு மற்றும் அதன் பின்னான சாவகச்சேரி இடப்பெயர்வு காலங்களில் இன்னும் ஒரு படிமேல போய் பாணுக்கு மணத்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலமையும் இருந்திருக்கிறது ஆனாலும் பாண் வாங்கக்கூடிய விலையில்தான் இருந்தது இப்ப அதை வாங்குறதிலும் சாப்பிடாம இருக்கலாம் எண்டுற மாதிரி இருக்கு விலை...

அந்த யுத்த காலங்களிலும் இறுக்கமான நாட்களிலும் குறிப்பிட்ட தனியார் பேக்கரிகளிலும் கூட்டுறவுச்சங்க பேக்ரிகளிலும் மாத்திரம் பாண்விற்கப்படும் அதுவும் ஒரு ஆளுக்கு இரண்டு றாத்தல் நிலமையைப்பொறுத்து ஒரு றாத்தல் என்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலதான் கிடைக்கும் அது கிடைக்கிறதுக்கும் விடியக்காலமை நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் போய் வரிசையில நிக்க வேணும் ஒரு வீட்டில இருந்து குறைஞ்சது இரண்டு பேர் இருப்பினை அந்த லைனில அனேகமா எல்லா வயதுக்காறரையும் அந்த வரிசையில் பார்க்கமுடியும் அவையவையின்ர வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு நண்பர்கள் வீட்டுக்கு வரமுடியாதவர்களின் வீட்டுக்கு சில பெடியளின்ரை அவா மாற்றை மச்சாள் மாற்றை வீட்டுக்கு என்று பெரிய லைன்ல நிண்டு பாண் வாங்கிறதுக்கு குடுத்து வைக்க வேணும் சில நேரங்களில் லைன் கிட்ட வாறநேரத்தில பாண் இல்லை எண்டு போடுவினை பேக்கரிக்காரர் ஏனெண்டா அவையளும் தங்களுக்கெண்டு கொஞ்ச கோட்டா ஒதுக்கியிருப்பினை அப்ப சண்டைக்கு போற ஆக்களும் இருக்கு...

அந்த நாட்களில் பள்ளிக்கூடமும் கிடையாது முறையான படிப்பும் கிடையாது அதாலை பாண்வாங்குறதுக்கும் நாங்கள் பெடியள் கூட்டாகித்தன் போறது ஒரு படையே இருப்போம் அந்த நேரத்திலும் அரட்டைக்கும் கூத்துகளுக்கும் குறைவிருக்காது...வலிகளை யதார்த்தத்தில் தொலைத்திருப்போம்.அதுவே ஒரு சந்தோசம்தான் பாணுக்கு வரிசையில நிக்கிறம் எண்டுற வேதனை இருந்தாலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்ததும் அந்த நாட்களில்தான் என்பதாலும் வயது அப்படி என்பதாலும் கஸ்டங்களை கடக்கப்பழகியிருந்ததோ மனது தெரியவில்லை (அப்ப வலிகளுக்கு பழக்கப்பட்டிருந்தது மனது எண்டும் சொல்லலாம்) பெடியள் போய் நிண்டு கதைக்கிறதும் லைனை குழப்புறதும் வாறபோற ஆக்களை வம்புக்கிழுக்கிறதும் தங்களுக்கு பிடிச்ச ஆக்கள் வந்தால் அவைக்காக லைன்ல நிக்கிறதும் (அவை லைன்ல நிக்கிறதிலயும் நித்திரையை குழப்பி எழும்பி வாறதிலயும் எங்கட பெடியள் நொந்து போடுவாங்கள்) எண்டு ஒவ்வொரு நாளும் அந்த லைனுக்கு போய் சில பெரிசுகளுட்டை பேச்சும் கேக்குறது நடக்கும் "உதுகளுக்கு படிப்பும் இல்லை பாணுக்கு வந்து நிக்கிறதிலை பகிடி வேண்டிக்கிடக்கெண்டு" திட்டும் வாங்கியிருக்கிறோம்...
இப்பொழுது நினைக்கையில் கடந்த காலங்கள் மீட்கப்படுகையில் ஒரு கலவையான உணர்வும் லேசான சிரிப்பும் வரத்தான் செய்கிறது கன்னங்களில் இலேசான ஈரத்தோடு அதுவும் பிறந்த ஊரின் நினைவுகள் அவை எப்படி இருந்தாலும் சுகமாகத்தான் இருக்கிறது நிகழ்காலம் திரும்புகிற புள்ளியில்...

இது பல நாட்களாக மனதிலிருக்கிற விசயம் எழுதலாம் எழுதலாம் எண்டால் ஒரு பத்து வரி எழுதுறதுக்கே நேரம் காணாதாம், வார்த்தைகளும் வராதாம் நினைவுப்பதிவு எண்டுற விசயம் எனக்கு எப்படி எழுதுறதெண்டே தெரியது (ஆனா ஆராவது மாட்டினா விடிய விடிய முழிப்புத்தான்) கானாபிரபா அண்ணனிட்டை கொஞ்சம் வகுப்பெடுக்கவேணும் இருந்தாலும் இதை எப்படியாவது எழுதி முடிக்கிறதெண்டுற கொலை வெறியில அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் எண்டு பின் நவீனத்துவ கட்டுரை மாதி எழுதிப்போட்டன் இருந்தாலும் என்னுடைய பதிவுகளின்ரை சராசரி நீளத்தையும் விட இதுவே கூடவா இருக்கிறதால முடிவுரை அடுத்த பகுதியில கிடைக்கும்.
( என்ன அடுத்த பகுதியோ ஆளை விர்றா சாமி எஸ்கேஏஏஏஏஏப்....)

29 comments:

Thamiz Priyan said...

தமிழன் அண்ணே! நல்லா வடிவா எழுதி இருக்கியள். ஆனா அந்த பாண் என்டால் என்னவென்று விளங்க யேயலை. விளக்கினியள் என்டால் நலம்.

Thamiz Priyan said...

கொஞ்சம் சுணங்கி விட்டது யாழ்த் தமிழ் படிப்பதற்கு.

வி. ஜெ. சந்திரன் said...

உங்கள் பதிவுக்கு இரண்டாம் முறையாக வருகிறேன் என நினைக்கிறேன். எங்கள் ஊர் நடையில் பாண் என்று எழுதியுள்ளீர்கள். பாண் என்றால் பலருக்கும் விளங்காது போகலாம். ஏன் என்றால் தமிழகத்தில் யாரும் பாண் என்று பாவிப்பதில்லை

எனவே உங்கள் பதிவில் ஓர் இடத்தில் பாண் = ரொட்டி (தமிழகம்) =Bread என்பதை குறித்துவிடுங்கள்.

உங்கள் நினவுகளை தொடர்ந்து பதியுங்கள்.......

Anonymous said...

PRESS RELEASE. 27.05.2008

TULF CONDEMNS KILLING OF INNOCENT CIVILIANS.

A claymore mine attack at Murugandy in Kilinochchi on Friday afternoon took the lives of 16 innocent men, women and children and also left 3 seriously injured. A bomb blast in a crowded train on Monday left 9 killed, 73 injured and out of the four women killed one was a pregnant mother. I strongly condemn both incidents and grieve with the kith and kin on their losses. This is not a cricket match for anyone to announce the score and celebrate it with a party. How many widows, widowers, orphans and destitute persons, these two horrible incidents had created. One who left home, happily in the morning returns home in a beautiful coffin, some in pieces and some others beyond identification. Thousands of innocent non-combatants had died and also thousands in the war front. Now we have in our country several thousands of widows, widowers, orphans and destitute persons, not to count those who had lost their eyesights, limbs etc. The pain of the loss of a life is felt only by the victim’s dear ones and not by those who promote the war and who gain by the war. Is there no end to this? - is the question every one of us should ask.

As I had been repeatedly pointing out, the Human Rights Violations continue unabated both in the Government controlled areas and in the LTTE controlled areas, the only difference being that there is transparency in the former and complete blackout in the latter where people open their mouths only when asked to do so.

I am misunderstood by some for accusing the LTTE and holding them responsible for the claymore mine attacks taking place in their areas. My reasons for doing so are two fold. One is how is it possible for the armed forces to reach areas so close to their Head Quarters. Even if one assumes that it is the work of the paid agents of the armed forces, the LTTE must seriously consider winding up the fighting and come to terms with the Government, since their days are numbered. Secondly even if one accepts that army can reach these areas through their paid agents, it cannot be true all the time.

My strong suspicion is that the Tamil Media is pressurised by the LTTE to put the blame on the forces soon after some incident takes place, merely to gain sympathy from the International Community after themselves doing it either intentionally or by mistaken identity. I call upon H. E. the President to appoint a presidential Commission to find out who is responsible for such attacks taking place in the LTTE held areas and how within a few hours the Local papers claim that all such attacks are by the deep penetrating unit of the forces. His Excellency can refer a few selected cases for a Presidential Commission to inquire into. As one who had represented the Kilinochchi Electorate for over 14 years, I have an interest in knowing whether what the papers say are voluntary or under compulsion.

Atleast at this stage, if the Government comes out with a reasonable proposal acceptable to the International Community, not out of fear for the LTTE, but only to give confidence to the International Community to take a bold step forward to help to find a solution. Every one who has sympathy for the poor innocent man on the street who falls a victim to the LTTE’s claymore mine, bomb or even their bullets must without any hesitation support my proposal. The TULF condemns all types of violence on the innocent civilians.


V. Anandasangaree,
President – TULF.

தமிழன்-கறுப்பி... said...

///தமிழன் அண்ணே! நல்லா வடிவா எழுதி இருக்கியள். ஆனா அந்த பாண் என்டால் என்னவென்று விளங்க யேயலை. விளக்கினியள் என்டால் நலம்.///

வாங்கோ தமிழ் பிரியன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாண் என்பது ரொட்டின்னு நினைக்கிறேன் தமிழ்நாட்டில, ஆங்கிலத்தில-Bread.

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன்...said...

///கொஞ்சம் சுணங்கி விட்டது யாழ்த் தமிழ் படிப்பதற்கு///

எனக்கும் யாழ் தமிழ் பேச முடிவதில்லை இப்பொழுது அதற்கான சந்தர்ப்பமும் இல்லையண்ணன், ஒரு மாதிரி கலவையான தமிழ்தான் இப்ப பேசிக்கொண்டிருக்கிறேன்...

தமிழன்-கறுப்பி... said...

சந்திரன்...said...

///உங்கள் பதிவுக்கு இரண்டாம் முறையாக வருகிறேன் என நினைக்கிறேன். எங்கள் ஊர் நடையில் பாண் என்று எழுதியுள்ளீர்கள். பாண் என்றால் பலருக்கும் விளங்காது போகலாம். ஏன் என்றால் தமிழகத்தில் யாரும் பாண் என்று பாவிப்பதில்லை

எனவே உங்கள் பதிவில் ஓர் இடத்தில் பாண் = ரொட்டி (தமிழகம்) =Bread என்பதை குறித்துவிடுங்கள்.

உங்கள் நினவுகளை தொடர்ந்து பதியுங்கள்.......///

நன்றி சந்திரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். மாற்றி யிருக்கிறேன்... அடிக்கடி வாருங்கள்

தமிழன்-கறுப்பி... said...

சிங்கராயர் குறை நினைக்காதையுங்கோ இதை இப்ப படிச்சு பதில் எழுத முடியாது இருந்தாலும் தகவலுக்கு நன்றி. என்னுடைய பதிவின் முதல் வரிகளுக்காகவே பகிர்ந்திருக்கிறியள் போல....

Anonymous said...

You are very much right! Paan is a daily adapted kind of food for all tamilians of Yaal. The time when I used to buy Paan, it was 8/=

If you agree or not, Yaal paanuku oru thani suvaithan. you can't get the same feel and taste if you buy Paan from elsewhere even in UK or USA!

Very nice piece of post. Keep up.

Big up to Yaaaal !

89/100

Divya said...

இலங்கை தமிழில் உங்கள் பதிவு படிக்க ரொம்ப நல்லா இருந்தது.

தெனாலி படம் பார்த்தது நினைவிற்கு வந்தது, சில வார்த்தைகள் படிக்கும்போது....

தமிழ்நதி said...

எல்லாவற்றுக்கும் ஒரு கதை இருக்கும்போல... ஆனால், பாணை வைத்து இவ்வளவு நீண்ட பதிவு எழுதலாம் என்பதே யோசிக்க வைக்கிற விசயந்தான். இதில் 'தொடரும்' என்று பயமுறுத்தல் வேறு:) ஊர்ப் பாண் எங்கு தேடினாலும் கிடையாதாம். இங்கு சென்னையில் நாங்கள் பாண் வாங்குவதே இல்லை. சிலோன் பாண் என்று யாரோ கொண்டு வந்து விற்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு ஒருநாள் வாங்கிப் பார்த்தோம். ம்...என்ன சொல்ல... பாண் சாப்பிடுறதுக்காக அங்கை போகேலுமே என்ன?

இறக்குவானை நிர்ஷன் said...

நல்லதொரு நினைவுப்பதிவு!
தலைப்பை பார்த்ததும் என்ன நினைவுக்கு வந்தது தெரியுமா?

ஏ9 வீதியை இலங்கை அரசாங்கம் மூடிய பிறகு பாரியதொரு உணவுத்தட்டுப்பாடு யாழ்ப்பாணத்தில் நிலவியது. அப்போது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார்கள். கல்வித்தேவையை மறந்து பட்டினி போக்க 150 000 சிறுவர்கள் பாணுக்காக அதிகாலையில் கியூ நிற்கும் அவலம் நிலவுவதாக ரவிராஜ் குறிப்பிட்டார். அப்போது பாண் வாங்கும் சிறுவர்களின் நிலை பற்றி குறிப்பிட்ட சிவநேசன் தனது அனுபவத்தையும் சிறுவர்களின் அவலத்தையும் கூறி கண்ணீர்விட்டு அழுதார். அப்படி அவர் அழுததை இன்னும் மறக்க முடியாது.

துரதிர்ஷ்டவசமாக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் எம்மிடையே இல்லை.

தமிழன்-கறுப்பி... said...

anonymous said...

///You are very much right! Paan is a daily adapted kind of food for all tamilians of Yaal. The time when I used to buy Paan, it was 8/=

If you agree or not, Yaal paanuku oru thani suvaithan. you can't get the same feel and taste if you buy Paan from elsewhere even in UK or USA!

Very nice piece of post. Keep up.

Big up to Yaaaal !///

thanks friend...

அது ஒரு தனி சுவைதான் நண்பரே நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா...said...

///இலங்கை தமிழில் உங்கள் பதிவு படிக்க ரொம்ப நல்லா இருந்தது.

தெனாலி படம் பார்த்தது நினைவிற்கு வந்தது, சில வார்த்தைகள் படிக்கும்போது....///

வாங்க திவ்யா உண்மையில் நான் இப்ப பேசுகிற தமிழ் இப்படி இருக்காது யாழ்ப்பாணத்தின் சாயல் அதிலிருந்து அருகி வருகிறது...
இருந்தாலும் நான் எழுதும் பொழுது அது ஓரளவுக்கேனும் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன் நான் ஊரில் இருக்கும் பொழுதே என்னுடைய மொழிநடை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்...

நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

தமிழ்நதி...said..

///எல்லாவற்றுக்கும் ஒரு கதை இருக்கும்போல... ஆனால், பாணை வைத்து இவ்வளவு நீண்ட பதிவு எழுதலாம் என்பதே யோசிக்க வைக்கிற விசயந்தான். இதில் 'தொடரும்' என்று பயமுறுத்தல் வேறு:) ஊர்ப் பாண் எங்கு தேடினாலும் கிடையாதாம். இங்கு சென்னையில் நாங்கள் பாண் வாங்குவதே இல்லை. சிலோன் பாண் என்று யாரோ கொண்டு வந்து விற்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு ஒருநாள் வாங்கிப் பார்த்தோம். ம்...என்ன சொல்ல... பாண் சாப்பிடுறதுக்காக அங்கை போகேலுமே என்ன?///

வாங்க தமிழ்நதி சந்தோசம், எப்படி இருக்கிறீர்கள்...
சும்மா இல்லையே யாழ்ப்பாணத்தாருக்கு பாண்தானே தேசிய உணவு இன்னும் நிறைய இருக்கு பாணோட பட்ட பாடுகள்...அது சரி ஊர் போய் பாக்கிற நிலமையிலையே இருக்கு!?
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

இ...நிர்ஷன் said...

///நல்லதொரு நினைவுப்பதிவு!
தலைப்பை பார்த்ததும் என்ன நினைவுக்கு வந்தது தெரியுமா?
........
........
..............///

ம்ம்ம்... இதில நான் சொல்லியிருக்கிறது சும்மா மேலோட்டம்தான் பாண் பற்றிய என் நினைவுகளை அங்கங்கே தொட்டிருக்கிறேன்...அது ஒரு மாதிரியான் வலி நிர்ஷன் காலம் அப்பொழுதே கற்றுத்தர தொடங்கியிருந்தது வாழ்க்கையை...
உண்மையில் நான் இந்தப்பதிவில சொன்ன மாதிரி எழுதுவதை விட நான் நிறையக்கதைப்பன் இது வேறை ஒரு இடத்தில பதிவதற்காக எழுத நினைத்தேன் ஆனால் நேரமின்மையால் அங்கே பதிய முடியவில்லை.)

நன்றி... வருகைக்கும் கருத்துக்கும்.

Anonymous said...

நல்ல பதிவு - 95 இடப்பெயர்வில கொடிகாமத்தில பின்னேரம் குடுக்கிற பாணுக்கு மத்தியாணம் சாப்பிட்ட பிறகே போய் லைனில நிற்கிறது. அதுவும் ஒரானுக்கு ஒரு றாத்தல் பாண்தானே கொடுக்கிறது. அதனால சின்னன் பெரிசு எண்டு எல்லாரையும் கூட்டிக்கொண்டு போறது. மேலை எங்கையாவது பிளேன் சுத்தினால் போதும். லைன் கலைஞ்சு பிறகு புது லைன் வரும். அத வாய்ப்பா பயன்படுத்தி முன்னேறினால் உண்டு.

றோஸ்பாணுக்கு வாழைப்பழம் - அதுவும் - அதின்ர பெயர் மறந்திட்டுதூ சாதாரண விலைகுறைந்த பழம் அது - அதுதான் எனக்கு பிடித்தது. கடைசி காலங்களில பட்டர் பாண் எண்ட ஒண்டும் வந்தது. அதை சும்மாவே சாப்பிடலாம். பாண் எண்டது எங்கடை ஆத்மாவோடை கரைஞ்சு கலந்து போனதாலதான் எங்களால இதுவரையும் வெதுப்பி என்ற சொல்லை இயல்பாக பயன்படுத்த முடியவில்லை

கானா பிரபா said...

தம்பி

பாண் புராணம் கலக்கல். கதிர் சயந்தன் நீர் நினைக்கிற பழம் கதலி வாழைப்பழம். அதை ஒரு கடி கடிச்சுக் கொண்டு சப்பட்டைப் (றோஸ்பாண்) பாணைச் சாப்பிடுவதே அலாதிப் பிரியம். மா தட்டுப்பாடான காலத்தில் வண்டுகள் மிதக்கும் பாண் தான் அடிக்கடி கிடைக்கும். இங்கையும் சிங்களவன் கடைக்குப் போய் வாங்கிச் சாப்பிட்டேன். கல்லைச் சாப்பிட்ட மாதிரி இருக்கு

ஆ.கோகுலன் said...

ஓ.. பிரமாதமான பதிவு. பாணின் அருமை பெருமைகளை நன்றாகநினைவுபடுத்தி எழுதியுள்ளீர்கள். பாடசாலை நாட்களில் எனக்கும் பாண்தான் காலை உணவு.
மிகுதிப்பதிவையும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி தமிழன்.

தமிழன்-கறுப்பி... said...

கதிர் சயந்தன்...said...

///நல்ல பதிவு - 95 இடப்பெயர்வில கொடிகாமத்தில பின்னேரம் குடுக்கிற பாணுக்கு மத்தியாணம் சாப்பிட்ட பிறகே போய் லைனில நிற்கிறது...............
.....................
பாண் எண்டது எங்கடை ஆத்மாவோடை கரைஞ்சு கலந்து போனதாலதான் எங்களால இதுவரையும் வெதுப்பி என்ற சொல்லை இயல்பாக பயன்படுத்த முடியவில்லை///

உண்மைதான் சயந்தன் பாண் அந்தளவுக்கு நெருக்கமாகத்தான் இருந்தது எங்களோடை ஆனால் இப்ப அதுன்ரை விலைதான் பயப்படுத்துது...
அது கதலி வாழைப்பழம் சயந்தன் அது ஒரு விதமான கொம்பினேசன், சாதாரண பாண் இல்லாட்டால்தான் பட்டர் பாண் வாங்குறது நாங்கள்...
வெதுப்பி என்ற சொல்லு வரவே மாட்டுதாம் சயந்தன் "பாண்" சின்ன வயசில இருந்துமூளையில பதிஞ்ச ஒரு விசயமாகிவிட்டது...

தமிழன்-கறுப்பி... said...

கானா பிரபா அண்ணன்...said...

///தம்பி

பாண் புராணம் கலக்கல். கதிர் சயந்தன் நீர் நினைக்கிற பழம் கதலி வாழைப்பழம். அதை ஒரு கடி கடிச்சுக் கொண்டு சப்பட்டைப் (றோஸ்பாண்) பாணைச் சாப்பிடுவதே அலாதிப் பிரியம். மா தட்டுப்பாடான காலத்தில் வண்டுகள் மிதக்கும் பாண் தான் அடிக்கடி கிடைக்கும். இங்கையும் சிங்களவன் கடைக்குப் போய் வாங்கிச் சாப்பிட்டேன். கல்லைச் சாப்பிட்ட மாதிரி இருக்கு///

வாங்கோ அண்ணன்... எவ்வளவு கஸ்டமாக்கிடக்கு உங்களை எங்கடை பக்கம் பாக்குறது வந்ததில சந்தோசமண்ணன்...
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

கோகுலன்...said...

///ஓ.. பிரமாதமான பதிவு. பாணின் அருமை பெருமைகளை நன்றாகநினைவுபடுத்தி எழுதியுள்ளீர்கள். பாடசாலை நாட்களில் எனக்கும் பாண்தான் காலை உணவு.
மிகுதிப்பதிவையும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி தமிழன்.///


பாண் எனக்கும்தான் அது நாளாந்த உணவு...விரைவில் எழுதுகிறேன் இனித்தானே பாணின்ரை பகிடிகளே இருக்கு...
நன்றி கோகுலன் உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்....

ஹேமா said...

வணக்கம் தமிழன்.உங்கள் சில பதிவுகள் மட்டுமே பார்க்கிறேன்.தொடர்வேன்.
பாணைப் பற்றி இப்படி அலசி இப்பவே"றோஸ்"பாண் சாப்பிட வேணும் போல இருக்கு.எங்கள் யாழ்ப்பாணத்துக்கும் பாணுக்கும் பெரிய பங்கு.பெரிய கதை.எங்கள் ஊர் பாணுக்கும் இடித்த சம்பலுக்கும் இணையான சாப்பாடு எங்கும் இல்லையே!சிறீமா அம்மாவின் காலத்தில் பாணுக்குக் காலை 4- 5 மணியிலேயே கியூவில் நின்ற காலமும் இருக்கே!

தமிழன்-கறுப்பி... said...

ஹேமா...said...

///வணக்கம் தமிழன்.உங்கள் சில பதிவுகள் மட்டுமே பார்க்கிறேன்.தொடர்வேன்.
பாணைப் பற்றி இப்படி அலசி இப்பவே"றோஸ்"பாண் சாப்பிட வேணும் போல இருக்கு.எங்கள் யாழ்ப்பாணத்துக்கும் பாணுக்கும் பெரிய பங்கு.பெரிய கதை.எங்கள் ஊர் பாணுக்கும் இடித்த சம்பலுக்கும் இணையான சாப்பாடு எங்கும் இல்லையே!சிறீமா அம்மாவின் காலத்தில் பாணுக்குக் காலை 4- 5 மணியிலேயே கியூவில் நின்ற காலமும் இருக்கே!///

வாங்கோ ஹேமா நன்றி உங்கள் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும்
அது சரிதான் இடிச்ச சம்பல் என்று தனியாக குறிப்பிட்டு சொல்லியிருக்கிறியள்...
எனக்கும் இடி சம்பல்தான் பிடிக்கும்...

Thamiz Priyan said...

டெஸ்ட் கமெண்ட் 1

Anonymous said...

பாணுக்கு இடிச்சசம்பல் ஆயத்தமாகிவிட்டது ;)
பாணில்..தட்டையா நீளமா இருக்குமே..அது போல எங்குமே நான் பார்த்ததில்லை...

தமிழன்-கறுப்பி... said...

தூயா சொன்னது...

///பாணுக்கு இடிச்சசம்பல் ஆயத்தமாகிவிட்டது ;)
பாணில்..தட்டையா நீளமா இருக்குமே..அது போல எங்குமே நான் பார்த்ததில்லை...///

வாங்கோ chef சந்தோசம் கன நாளைக்குப் பிறகு எங்கடை கடைக்கு வந்ததில அதை றோஸ்ட் பாண் எண்டு சொல்லுறது உண்மைதான் அந்த சாப்பாடுகள் எங்கடை பாரம்பரியம் மாதிரி ஆகிவிட்டது...

Anonymous said...

//வாங்கோ chef சந்தோசம் கன நாளைக்குப் பிறகு எங்கடை கடைக்கு வந்ததில அதை றோஸ்ட் பாண் எண்டு சொல்லுறது உண்மைதான் அந்த சாப்பாடுகள் எங்கடை பாரம்பரியம் மாதிரி ஆகிவிட்டது...

June 5, 2008 8:26 PM//

ரோற்ட் பாண் :) சுவையோ சுவை..
இங்கு கிடைப்பதில்லை..உங்க ஊரில்??

கிரி said...

:-)