Sunday, May 25, 2008

தர மறுத்த முத்தங்கள்...

*
நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்டகலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை...


*
எப்பொழுது அழைத்தாலும்
ஒவ்வொரு முறை
உரையாடி முடிக்கையிலும்
உன்னிடம் முத்தம் கேட்பது
ஏன்தெரியுமா...
முதல் முறை கேட்கையில்
நீ சட்டென்று மௌனமாகி விடுவாய்
திரும்பவும் கேட்கையில்
நீ "ம்ஹீம்ம்" என்று சிணுங்குவாய்
மறு முறை கேட்கையில்
உன் சுவாசம் மட்டுமே கேட்கும் எனக்கு
சற்றுப்பொறுத்து நான் என்னவென்கையில்
"நீங்க வையுங்கோ phoneஐ" என்பாய்
"என்னடி நீ" என்றால்
"நான் வைக்கிறேன்"
என்றென்னை அதட்டுவாயே
அந்த நளினம்
உனக்கு மட்டும் உரியது...
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும்
இன்னொரு முறை கேட்கலாம் போல
அதை கேட்டுக்கொண்டே இருக்லாமடி
எப்படி முடிகிறது உனக்கு
இப்படி இன்பமாய் என்னை...
தவணை முறையில் கொல்வதற்கு!

27 comments:

தமிழ் said...

/நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்டகலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை.../

நல்ல இருக்கிறது

Sen22 said...

//நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்டகலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை...//

நல்லா இருக்குங்க Boss கவிதை...


Senthil,
Bangalore

புகழன் said...

\\
எப்பொழுது அழைத்தாலும்
ஒவ்வொரு முறை
உரையாடி முடிக்கையிலும்
உன்னிடம் முத்தம் கேட்பது
ஏன்தெரியுமா...
முதல் முறை கேட்கையில்
நீ சட்டென்று மௌனமாகி விடுவாய்
திரும்பவும் கேட்கையில்
நீ "ம்ஹீம்ம்" என்று சிணுங்குவாய்
மறு முறை கேட்கையில்
உன் சுவாசம் மட்டுமே கேட்கும் எனக்கு
சற்றுப்பொறுத்து நான் என்னவென்கையில்
"நீங்க வையுங்கோ phoneஐ" என்பாய்
"என்னடி நீ" என்றால்
"நான் வைக்கிறேன்"
என்றென்னை அதட்டுவாயே
அந்த நளினம்
உனக்கு மட்டும் உரியது...
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும்
இன்னொரு முறை கேட்கலாம் போல
அதை கேட்டுக்கொண்டே இருக்லாமடி
எப்படி முடிகிறது உனக்கு
இப்படி இன்பமாய் என்னை...
தவணை முறையில் கொல்வதற்கு!
\\
போன்ல பேசுறதை ஒரு வரிக்கு கீழ் ஒரு வரியாக எழுதிவிட்டு கவிதை போன்ற ஒரு பில்டப்பா?

இருந்தாலும் கவிதை நல்லார்க்கு...

தமிழன்-கறுப்பி... said...

/நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்டகலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை.../

நல்ல இருக்கிறது///

நன்றி திகழ்மிளிர்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

செந்தில்...said...

/////நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்டகலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை...//

நல்லா இருக்குங்க Boss கவிதை...
///

நன்றி செந்தில்...
தொடர் வருகைக்கும் கருத்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

புகழன்...said...

///.......போன்ல பேசுறதை ஒரு வரிக்கு கீழ் ஒரு வரியாக எழுதிவிட்டு கவிதை போன்ற ஒரு பில்டப்பா?

இருந்தாலும் கவிதை நல்லார்க்கு...///

முக்கியமா நான் கவிஞன் கிடையாது புகழன்...உண்மையில் இதை நான் கவிதையென்று எழுதவில்லையே தேவதையின் தருணம் என்றுதானே எழுதியிருக்கிறேன், நேரம் கிடைக்கவில்லை புகழன்; நான் விரும்பிய மாதிரி திருப்தியாக அந்த தருணத்தை எழுதுவதற்கு விரைவில் அதனை முழுமையாக பதிவேன். (கணினிக்கு முன்னால இருந்துதான் எழுதவே ஆரம்பிப்பேன் அதனால
சில நேரங்களில் வார்த்தைகள் வருவதில்லை,எழுத வந்ததையும் மறந்து வேறெங்கோ சென்று விடும் மனது அதுதான் பிரச்சனையே)

நன்றி...

Thamiz Priyan said...

கவிதைகளில் ரொமான்ஸ் மூச்சு முட்டுது தல....

Thamiz Priyan said...

///எப்பொழுது அழைத்தாலும்
ஒவ்வொரு முறை
உரையாடி முடிக்கையிலும்
உன்னிடம் முத்தம் கேட்பது
ஏன்தெரியுமா...
முதல் முறை கேட்கையில்
நீ சட்டென்று மௌனமாகி விடுவாய்
திரும்பவும் கேட்கையில்
நீ "ம்ஹீம்ம்" என்று சிணுங்குவாய்
மறு முறை கேட்கையில்
உன் சுவாசம் மட்டுமே கேட்கும் எனக்கு
சற்றுப்பொறுத்து நான் என்னவென்கையில்
"நீங்க வையுங்கோ phoneஐ" என்பாய்
"என்னடி நீ" என்றால்
"நான் வைக்கிறேன்"
என்றென்னை அதட்டுவாயே
அந்த நளினம்
உனக்கு மட்டும் உரியது...////
பீல் பண்ணி எழுதி இருக்கீங்களே! நல்ல அனுபவமோ...

Thamiz Priyan said...

///தமிழன்... said... முக்கியமா நான் கவிஞன் கிடையாது புகழன்...உண்மையில் இதை நான் கவிதையென்று எழுதவில்லையே தேவதையின் தருணம் என்றுதானே எழுதியிருக்கிறேன், நேரம் கிடைக்கவில்லை புகழன்; நான் விரும்பிய மாதிரி திருப்தியாக அந்த தருணத்தை எழுதுவதற்கு விரைவில் அதனை முழுமையாக பதிவேன். (கணினிக்கு முன்னால இருந்துதான் எழுதவே ஆரம்பிப்பேன் அதனால
சில நேரங்களில் வார்த்தைகள் வருவதில்லை,எழுத வந்ததையும் மறந்து வேறெங்கோ சென்று விடும் மனது அதுதான் பிரச்சனையே)///

அசால்டா எழுதினதே இப்படின்னா ரசிச்சு எழுதினா...... ப்ளீஸ் எழுதுங்க.. ஒரு கவிஞரை நாங்கள் பார்க்கலாமே...:)

Anonymous said...

Nice!

54/100

Divya said...

\\இப்பொழுது நினைக்கையில் கடந்த காலங்கள் மீட்கப்படுகையில் ஒரு கலவையான உணர்வும் லேசான சிரிப்பும் வரத்தான் செய்கிறது கன்னங்களில் இலேசான ஈரத்தோடு அதுவும் பிறந்த ஊரின் நினைவுகள் அவை எப்படி இருந்தாலும் சுகமாகத்தான் இருக்கிறது நிகழ்காலம் திரும்புகிற புள்ளியில்...\\

உங்கள் மலரும் நினைவுகளை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள் தமிழன்!!

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன்...said...

///கவிதைகளில் ரொமான்ஸ் மூச்சு முட்டுது தல....///

///பீல் பண்ணி எழுதி இருக்கீங்களே! நல்ல அனுபவமோ...///

நன்றி, நன்றி
அனுபவம் எல்லாம் கிடையாதுண்ணே :)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன்...said...

///அசால்டா எழுதினதே இப்படின்னா ரசிச்சு எழுதினா...... ப்ளீஸ் எழுதுங்க.. ஒரு கவிஞரை நாங்கள் பார்க்கலாமே...:)///

அட நீங்க வேற நானெல்லாம கவிஞர்ன்னா நாடுதாங்காது தல...
அப்புறம் கூடி குமிறி கும்மியடிச்சுடுவாங்க நம்ம மக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

anonymous...said....

///Nice!

54/100///


நன்றி...
ஆனா இது என்னன்னு புரியலயே...

தமிழன்-கறுப்பி... said...

///\இப்பொழுது நினைக்கையில் கடந்த காலங்கள் மீட்கப்படுகையில் ஒரு கலவையான உணர்வும் லேசான சிரிப்பும் வரத்தான் செய்கிறது கன்னங்களில் இலேசான ஈரத்தோடு அதுவும் பிறந்த ஊரின் நினைவுகள் அவை எப்படி இருந்தாலும் சுகமாகத்தான் இருக்கிறது நிகழ்காலம் திரும்புகிற புள்ளியில்...\\

உங்கள் மலரும் நினைவுகளை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள் தமிழன்!!///

வாங்க திவ்யா...
கமன்ட்ட இடம் மாறி போட்டுட்டிங்க,பரவாயில்லை
நன்றி நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும்.

Kumiththa said...

Is it your own experience tamilan?..lol...
Its very nice. I really enjoyed it!

Kumiththa said...

Is it your own experience tamilan?..lol...
Its very nice. I really enjoyed it!

Shwetha Robert said...

Experiance talks??

Very romantic poem Tamilan.

Came to your page from your comments in Divya's page, you have plenty of love poems here....nice:))

தமிழன்-கறுப்பி... said...

kumiththa...said..

//Is it your own experience tamilan?..lol...
Its very nice. I really enjoyed it!//

நம்மளுக்கு இப்படியெல்லாம் அனுபவத்தை யாருங்க குடுக்கப்போறா :)
அதுக்கெல்லாம் குடுத்துவைக்கலைங்க...:(

நன்றி உங்கள் வருகைக்கு...

தமிழன்-கறுப்பி... said...

shwetha robert...said...

//Experiance talks??

Very romantic poem Tamilan.

Came to your page from your comments in Divya's page, you have plenty of love poems here....nice:))///

வாங்க ஷ்வேதா நம்ப மாட்டிங்களே அது நம்ம அனுபவமில்லைன்னு சொன்னா...:)

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், அடிக்கடி வாங்க...

Thamiz Priyan said...

டெஸ்ட் கமெண்ட் 1க்ஷ்

Shwetha Robert said...

Wah-hoo......such a romantic poem Tamilan:-)))

Shwetha Robert said...

Visited your page again , just to read this luvly poem:)))

தமிழன்-கறுப்பி... said...

ஷ்வேதா...said..

///Wah-hoo......such a romantic poem Tamilan:-)))

Visited your page again , just to read this luvly poem:)))///

நன்றி ஷ்வேதா உங்கள் மீள்வருகைக்கும் மகிழ்ச்சியான கருத்துக்கும்.. அவள் செய்கிற எல்லாமே அழகாகத்தானே இருக்கிறது ஷ்வேதா..:)

Anonymous said...

இரண்டாவது ரொம்பவே பிடித்திருக்கு...:)

தமிழன்-கறுப்பி... said...

///இரண்டாவது ரொம்பவே பிடித்திருக்கு...:)///

நன்றி நன்றி...:)
சந்தர்ப்பத்தை கற்பனை பண்ணி பாத்திங்களோ...?

கிரி said...

எப்படிங்க இப்படி கவிதை எழுதறீங்க.. தனி திறமை தான்..எனக்கு எழுதனும்னு ஆசை..சரி அந்த கொடுமைய ஏன் பண்ணனும் னு விட்டுட்டேன். செய்வன திருந்த செய் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை :-)