Showing posts with label காதல் கொலுசுகள்.... Show all posts
Showing posts with label காதல் கொலுசுகள்.... Show all posts

Tuesday, April 29, 2008

கொலுசுகளின் சில்மிஷம்...

*
நீ இல்லாத நாட்களில்
உன்னைப்பற்றி பேசுகின்றன
நீ இருக்கிற நாட்களில்
உனக்காக பேசுகின்றன
நாம் சேர்ந்திருக்கும் நாட்களில்
நம்மோடு பேசுகின்றன
என் கொலுசுகள்
எப்படி பிரிவேன்
நீ கொடுத்த கொலுசுகளை...

*
நாள் முழுவதும்
என்னோடு இருந்தாலும்
நீ வந்ததும் தான்
சத்தமிட தொடங்குகின்றன
என்கொலுசுகள் நான்
அது வரையும் சேர்த்து வைத்த
எல்லா மௌனங்களையும் சேர்த்து...

*
என் பாதங்களுக்கு என்னாயிற்று
ஒரு நிமிடம் இருப்பதில்லை
நீ கொடுத்த கொலுசுகளை பிரிந்து
கழுவுவதற்காக கழற்றினாலும்
குறு குறுத்துப்போகிறது
நீ என்னருகில் இல்லாத நாடகளில்...


*
எப்படித்தெரியும்
என்னுடைய கொலுசுகளின் சத்தம்
என்று கேட்டால்
உனக்கே உரிய சிரிப்போடு சொல்கிறாய்
"அவை சத்தமிடுவதும் பாடுவதும்
என் பெயர் சொல்லித்தானே"
போடா...
உனக்கும் தெரிந்துவிட்டதா
என்கொலுசுகளின் பாஷை...

Wednesday, March 26, 2008

கொலுசுகளின் சில்மிஷம்...

கழற்றி வைத்த கொலுசுகள்
தலையணைக்கடியில் சப்தமிட...
கொலுசுகளை பிரிந்த கால்கள்
நடு இரவில் தூக்கம் கலைக்க
எப்படித் தூங்குவேன்
நீ கொடுத்த கொலுசுகள் இல்லாமல்

என்ன குறும்பு பார்;
சப்தமிட்ட கொலுகளை எடுத்து
முத்தமிட்டு பார்த்ததும்
சப்தமில்லாமல் நழுவி
மார்பில் விழுந்தது
விழுந்த கொலுசுகளை
எடுக்க மறந்து தூங்கிப்போனேன்
என்னோடு நீயிருக்கிறாய்
என்கிற நினைவில்

தூக்கம் கலைகிற அதிகாலைப்பொழுதில்
கழுத்தோரம் பரவிய மீசை முடியின் குறுகுறுப்பில்
சிலிர்த்துப்போய் விழித்தேன்

அட! கொலுசுகள்தான்

போடா...

உன்னைப்போலவே இருக்கிறது
நீ கொடுத்த கொலுசுகளும்!