Friday, November 30, 2007

கடிதங்களுக்குப்பதிலாக...1


அனுப்பியிருந்தவை 01

வந்திருந்தவை இப்படியிருந்தால் அனுப்பியிருந்தவை அதைவிட மேலே ஒரு படி போயிருந்தது படித்துதான் பாருங்கள் இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் என்னால் தொடர்ச்சியாக அவற்றைப்படிக்க முடியவில்லை என்பதுதான் இருந்தாலும் பரவாயில்லை இனி திருட்டுத்தனமாக கிடைக்கும் சந்தர்ப்பங்களில் முடிந்தவரை படித்துவிடுகிறேன்...*நான் என்ன ஆறுதல் சொல்ல உனக்கு

உன் நினைவுகள்தானே துணை எனக்கு

இப்பொழுது எப்படியிருக்கிறாய் கண்ணம்மா

உன்னை பார்த்துக்கொள்

உடம்பை அலட்டிக்கொள்ளாதே

கொஞ்சம்பொறு வந்துவிடுகிறேன்

அதுவரையும் நான் எப்பொழுதும்

உன்பக்கத்திலேயே இருப்பேன்

நம் நினைவுகளினூடே...


*தீபாவளியா

நீ என்னருகில் இருந்த

நாட்களை விட விசேசமாக

வேறெந்த நாட்கள்

இருக்கமுடியும் எனக்கு...


*சிதைந்துகொண்டிருந்த என்னை

செதுக்கியவள் நீ

என் மரியாதைக்குரிய தேவதையே

நான் உன் நிமித்தம் வாழ்கின்றவன்...*பிரிவின் தூரம்

நாள் ஒரு வாரம்

நீ தரும் நேசம்

உயிரின் சுவாசம்

உன் நினைவுகள் என்னில்

தென்றலாய் வீசும்

அன்பே என்னை உன் எல்லைவரை

அழைத்துப்போகிறாயா...?

*என்னை மன்னித்துவிடு தமிழ்உன்னை கோபப்பட எனக்கு உரிமையில்லையாஇங்கே நான் தனித்திருக்கிறேன்என்னை தவிக்க விட்டுவிடாதே...*நீ என்ன நினைக்கிறாய்

என்பதுஎனக்குத் தெரியாது ஆனால்

நான் உன்னைத்தான்

நினைததுக்கொண்டிருக்கிறேன்

எனக்கான நேரத்தை ஒதுக்குவதில்

உனக்கு சிரமம் இருக்கிறதோ அல்லது

அவசியம் ஏற்படவில்லையோ...

கடிதங்களுக்குப்பதிலாக...1

வந்திருந்தவை...01
நிறைய நாட்களாக கணினியில் இருப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அதுவே எனக்கு ஏதோ தலை முழுக்க பாரமாக இருந்தது ஒரு இயல்பில்லாத தன்மையுடன் உலவிக்கொண்டிருந்தேன் இப்பொழுது எதிர்பாராமல் ஒரு சந்தர்ப்பம் அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரம்தான் வந்து இருந்த உடனேயே எழுதவேண்டும் என்று நினைத்த எல்லாம் ஒரே சமயத்தில் நெற்றிப்பொட்டில் வந்து குவிய நானே குழம்பிப்போனேன் என்ன செய்வதென்று தெரியாமல் மனதில் ஒவ்வொன்றாய் வந்து விழுந்த விடயங்களை எழுதினாலே ஒரு பதிவு நீளத்திற்கு வந்துவிடும்போல இருந்தது சரி அவற்றுள் ஏதாவத ஒன்றைப்பற்றி எழுதலாம் என்றால் முதலில் ஞாபம் வந்தது சமீபத்தில்நான் பார்த்து வியந்த ஒரு கையடக்கத்தொலைபேசியின் குறுந்தகவல் பரிமாறல்தான் அடடா இதில இப்படியெல்லாம்கூட இருக்கா நம்மளுக்கு தெரியாமப்போச்சே என்னுமளவுக்கு தட்டிக்குவித்திருந்தார்கள் எப்படித்தான் இவ்வளவையும் தமிங்கிலீசில் வாசிக்கப்பழகினார்களோ...? அவற்றுள் எனக்கு கிடைத்த அவகாசத்தில் திருட்டுத்தனமாக வாசித்ததில் ஞாபகம் இருப்பவற்றை தமிழில் தர முயன்றிருக்கிறேன் படித்துப்பாருங்கள்
*நாளை விடுமுறை நாளென்பதால்
நான் இன்றய இரவு முழுவதும்
தூங்காமல் உன்னோடு இருக்கிறேன்...
*என் ராஜாவுக்கு
உன் கண்கள் தொடும்
உன் கைகள் தொடும்
உன் சுவாசம் தொடும் தூரத்தில்
காலம் முழுவதும்
கழிக்க வேண்டும்...
*கண்ணா காலைப்பொழுதின் வாழ்த்துக்கள்
என்ன செய்கிறாய்?
நான் குளித்து முடித்து தேநீர் குடிக்கிறேன்
இங்கே நீ இன்னமும் தூங்குகிறாய்
எழுப்பவா? வேண்டாமா...?
*நான் நாளைய பரீட்சை ஒன்றுக்கு
தயாரயகிக்கொண்டிருந்தேன்
கவலைப்படாதே உன்னால் என்னை
காயப்படுத்த முடியாது
அணைப்பதற்கும் அடிப்பதற்கும்
நீதான் வேண்டும்
இனிய இரவுக்கான வாழ்த்துக்களுடன்
விடைபெறுகிறேன்...
(சரி நேரம் முடிந்து விட்டதனால் தற்காலிகமாக பதிவை முடிக்கிறேன் ஆனால் இது இப்பொழுது முடியாது நான் வாசித்ததே ஒரு 15 தகவல் இருக்கும் அதில் நினைவிருப்பவை ஒரு 10 இருக்கும் பார்க்கலாம் திரும்பவும் என் கைக்கு வராமல் போய்விடுமா என்ன...)