Thursday, August 2, 2012

கைவிடப்பட்ட உடல்கள் - ஒரு மாதிரிக்குறிப்பின் திருத்தமற்ற வடிவம்.
இதை வாசிக்கப்போகும் அனேகம்  ஆண்களுக்கான பொதுவான அனுபவங்களில் ஒன்றாக நீலப்படங்கள் இருக்கக்கூடும்.  அந்த நீலப்பட நடிகைள், நடிகர்களைப் பற்றி உரையாடல் ஒன்றுக்கான தொடக்கம் இந்த  மாதிரிக்குறிப்பு.  தனியே நடிகைகளை மட்டும் பேசிவிட்டு கடந்து போய்விட முடியாத நீலப்பட சந்தையும் சூழலுமே இப்பொழுது இருக்கிறது  எனக்குத்தெரிந்த வகையில்  எந்தவித  தேடுதலும்  இல்லாமல்  தொடங்கிய ஒருசிறு குறிப்பு இந்த பகிர்வு.சமீபத்தில்  நீலப்பட நடிகையொருத்திக்கு ரசிகனாய் இருப்பதைக்குறித்த உரையாடல்  ஒன்றை ஆரம்பித்த தோழருக்கு நன்றி.


வயதான நீலப்பட நடிகைகளைசந்திக்க வேண்டும் என்கிற  ஆர்வம் 2009 கடைசிகளில்  எனக்கும் இருந்தது, பின்னர்  மாலனின் "கலாச்சார கண்ணாடியில் கல்லெறியும் நீலப்படங்கள்" கட்டுரையை வாசித்த பிறகு அந்த நடிகைகளின் வாழ்வு குறித்த ஆவணப்படங்களை தேடியிருக்கிறேன். யாராவது சில நடிக நடிகைகளை சந்தித்து உரையாட நினைத்திருக்கிறேன். ஒரு முன்னாள் மல்யுத்த வீரனுக்கே இவ்வளவு கதைகள் இருக்கும் பொழுது ஒரு நீலப்பட நடிகைக்கு காலம் என்ன மாதிரியான அனுபவங்களை தரக்கூடும்?! - சாதாரண தமிழகத்து நடிகைகளுக்கே நமது மனங்கள் மோசமான அனுபவங்களை கொடுத்திருக்கையில் ஒரு தொழில் முறை நீலப்பட நடிகையின் வாய்ப்புகள் அற்றுப்போகையில் என்ன மாதிரியான  சமூக,பொருளாதார,உளவியல் பிரச்சனைகளை மீதமிருக்கிற அவளது காலம் அவளுக்கு தரக்கூடும்?!

பெண்களிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத ஆண் மனங்களின்  பயம், விகாரம், குரூரம் எல்லாவற்றினதும்  திருப்திக்கான சந்தைப்படுத்தல்களாகவே  அனேகமான  நீலப்படங்கள் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் பெண் உடலின் மீதான வன்முறையே பெரும்பாலான மூன்றாந்தர நீலப்படங்களில் இருக்கிறது. ந்திய பாலியல் அடிமையே, வெள்ளை நிற விபச்சாரியே என்றெல்லாம் பேசுப்படுகிற வார்த்தைகளின் அரசியல் வேறொரு வகையானவை.

எனக்கு பிடித்தமான நீலப்பட நடிகைகள் குறித்து பேசுமளவிற்கு அவ்வளவு அதிகம் படங்களை நான் பார்த்ததில்லை தோழர் ஆனாலும் சில படங்களையும் நடிகைகளையும் எனக்கும் நினைவிலிருக்கிறது- அதில் ஒரு  நடிகையின் புதிய படங்கள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை, அவரது தற்போதைய வாழ்வு பற்றிய தகவலை கூகுளில் கூட காணவில்லை .


பகிர்வுக்கு சம்பந்நதப்பட்ட மற்றொன்று:

எனக்குத்தெரிந்த நீல நடிகைகளில் இவரை சொல்லாமல் விட முடியாது துருதுருவென்றிருக்கிற இவருடைய பூர்வீகம் பஞ்சாப்; பஞ்சாபி பெண்களிடம் இருக்கிற இயல்பும் அலட்சியமும் இவரிடமும் அதிரடியாகவே இருக்கிறது. கனேடிய இந்தியரான இவருடைய அழகில் அமெரிக்காவை கலக்கிய பின்லேடனே அசந்து போயிருந்தார் என்று செய்திகளும் இருக்கிறது. அமெரிக்க, கனேடிய ஆண்மனங்களின் தூக்கத்தையும் பெண்மனங்களின் பொறாமையும் சம்பாதித்துக்-கொண்டிருந்த இவர் "பிக்பாஸ்" நிகழ்ச்சி மூலம்  ந்தி திரையுலகுக்குள் நுழைந்திருக்கிறார். இவருடைய முதல்  இந்திப்படம் Jism-2 நாளைக்கு ( 03.08.2012) வெளியாகிறது. இவர் திரையில் காட்டுவதற்கு எதுவுமே இல்லை என்று சொல்பவர்களுக்கு  மறைக்கபட்ட அழகில்தான் அதிகம் கவர்ச்சி இருக்கிறதென்று பதில் சொல்லியிருக்கும் இவருடைய இந்தப்படத்தின் காட்சிகள்  அதனை நிரூபிக்கிறதாய் நான் நம்புகிறேன். நிர்வாணத்தை தாங்க முடியாதவைதானே ஆண்மனங்கள். துருத்தலான விகாரங்களுக்கு பழக்கப்பட்டவைதானே தமிழ் மனங்கள்.. 
இந்தப்படத்தில் கூட நடிக்கிற Randeep Hoda ஒரு நல்ல நடிகர் எந்த  காட்சியையும் இயக்குனருக்கும் காட்சிக்கும்  திருப்பதியாகச்செய்யக்கூடிய கலைஞன், அது  என்ன் காட்சியாயிருந்தாலும்  Once upon time in Mumbai  படம் அதற்கு ஒரு சாட்சி.
உண்மையாகச் சொல்லப்போனால் SunnyLeone நடித்த எந்த நீலப்படத்தையும் நான் இதுவரை பார்த்ததில்லை.