Wednesday, March 26, 2008

கொலுசுகளின் சில்மிஷம்...

கழற்றி வைத்த கொலுசுகள்
தலையணைக்கடியில் சப்தமிட...
கொலுசுகளை பிரிந்த கால்கள்
நடு இரவில் தூக்கம் கலைக்க
எப்படித் தூங்குவேன்
நீ கொடுத்த கொலுசுகள் இல்லாமல்

என்ன குறும்பு பார்;
சப்தமிட்ட கொலுகளை எடுத்து
முத்தமிட்டு பார்த்ததும்
சப்தமில்லாமல் நழுவி
மார்பில் விழுந்தது
விழுந்த கொலுசுகளை
எடுக்க மறந்து தூங்கிப்போனேன்
என்னோடு நீயிருக்கிறாய்
என்கிற நினைவில்

தூக்கம் கலைகிற அதிகாலைப்பொழுதில்
கழுத்தோரம் பரவிய மீசை முடியின் குறுகுறுப்பில்
சிலிர்த்துப்போய் விழித்தேன்

அட! கொலுசுகள்தான்

போடா...

உன்னைப்போலவே இருக்கிறது
நீ கொடுத்த கொலுசுகளும்!

4 comments:

நிவிஷா..... said...

செம ரோமெண்டிக்காக இருக்குதுங்க கொலுசு கவிதை:))

நட்போடு
நிவிஷா.

தமிழன்-கறுப்பி... said...

//செம ரோமெண்டிக்காக இருக்குதுங்க கொலுசு கவிதை:))//


சரிங்க நன்றி நன்றி...

(ஆஹா இதுதான் ரொமான்டிக்கா நம்மளுக்கு தெரியாமப்போச்சே...)

காஞ்சனை said...

காதல் தான் பேசியதோ
மயக்கம் தான் பேசியதோ!!
இரண்டும் இல்லை..
கொலுசோடு கொஞ்சிக் கொஞ்சியே
தீர்ந்து போகின்றன‌
நாட்களும் பொழுதுகளும்..

தமிழன்-கறுப்பி... said...

///காதல் தான் பேசியதோ
மயக்கம் தான் பேசியதோ!!
இரண்டும் இல்லை..
கொலுசோடு கொஞ்சிக் கொஞ்சியே
தீர்ந்து போகின்றன‌
நாட்களும் பொழுதுகளும்..///



நன்றி சகாரா உங்கள் வருகைக்கும அழகான பின்னூட்டத்துக்கும்