அவள் ஒரு தேவதை
ஏவாள் முதல் எல்லாப்பெண்களும் அற்புதம்
எதிர்பார்ப்புகளின் இன்மைதான் சுதந்திரம்
பணம்பெரும் சாத்தான் என்று,
போதைமிகுகிற தருணங்களில் எல்லாம் சொல்கிற அவன்
புணரும் பாம்புகள் பற்றிய கனவுகள் அடிக்கடி வருவதாய் புலம்புவான்...
தோற்றுப்போனதொரு காதலை 'ஒரு
பெண்மையிடம் தோற்றவன்' என புனைபெயராய் எழுதி
தன்னை பறைசாற்றிக்கொள்கிற அவனுக்கு
எண்ணில்லாத தோழிகள் இருந்தும்
யாரோடும் நெருக்கமில்லாமல் இருப்பது
புனிதம்சார்ந்த பெண்களின் மீதான தயக்கமென்கையில்
புனிதங்களில் தனக்கு நம்பிக்கை இல்லையென
பின்நவீனங்களை துணைக்கழைத்து வெறுப்பேற்றுவான்
தன்னை அறிவுஜீயென பிரகடனம் செய்பவன்
போலியென நான் சொன்னதற்காய் என்னை
பொதுப்புத்தியின் கேவலமான கடைசிக்குடிமகனென
குடித்துக்கொண்டிருந்த மதுவை முகத்தில் ஊற்றினான்,
கழுத்துவரைக்கும் குடித்துமுடித்த வெளிச்சமில்லாத அறையில்
கைகளில் முனகுகிற குறியை விடுவிக்கையில் அவன்
தானொரு பெண்ணாகிப்போகக்கடவதென சபித்துக்கொண்டிருந்தான்.
7 comments:
நல்லா இருக்குங்க தம்பி கவிதை - வாழ்த்துக்கள் !
ம்!!! உரையாடல் போட்டிக்கா? வாழ்த்துக்கள்.
//அவனுக்கு
எண்ணில்லாத தோழிகள் இருந்தும்//
:))) நிசமாவா???எங்க இருக்கங்க??? சொல்லவே இல்ல.
நல்லா இருக்குங்க தம்பி கவிதை - வாழ்த்துக்கள் !
nalla irunga kavithaitthambi..vazhthukkal
கவிதை ரொம்ப நல்லா இருக்கு தமிழன்.
பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே.
Post a Comment