Sunday, January 25, 2009

பட்டாம்பூச்சியும் பதிவும்...

சமீபநாட்களாய் ஏனோ தெரியவில்லை பகிர்(எழுது)வதற்கு வரவே இல்லை வலுக்கட்டாயமாக சிலருக்கு பின்னூட்டங்கள் எழுதியிருந்தேன்.யதார்த்தம் கசப்பானதாகத்தான் இருக்ககுமோ என்னவோ இருக்கலாம் புரிதல் இன்னமும் அவசியமாக தேவைப்பபடுகிறது போலும்.

இலங்கையில் நிகழ்கிற கற்பனைக்கப்பால் விரிகிற மனிதமற்ற செயல்களும் புரிதல் என்பதே கிஞ்சித்தும் இல்லாத மனிதர்களும் சே!! விரக்தி என்பதை விட வெறுப்பைத்தான் அதிகமாய் தருகிறார்கள். என்ன செய்கிறது இந்த இளைய சமுதாயம்! யாருமே நாட்டின் வரலாறு தெரியாதவர்களா அல்லது...

அன்பென்கிற ஒன்றையே கடவுளாய் நம்புகிறவன் நான், உலகம் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கிறது கொண்டாடத்தெரிந்தவன் சந்தோசமாய் வாழ்கிறான் இந்த வார்த்தைகள் மட்டுமே போதும் வேறெதுவும் நீட்டி முழக்கத்தேவையில்லை என்பது என் எண்ணம்...

_______________________________________






சில வாரங்களாக பட்டாம்பூச்சி என்கிற ஒரு விருதை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் வலையில் எனக்கும் இரண்டு அன்பு நெஞ்சங்கள் தோழி திவ்யா , 'பப்புபேரவை'சந்தனமுல்லை கொடுத்திருக்கிறார்கள், நன்றி தோழிகளே தாமதத்துக்கு மன்னிக்கவும். பட்டாம்பூச்சிகளை பறக்கவிடுதலே முறை ஆயினும் இந்த விருதை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது விருதின் விதியாக இருப்பதில் ரொம்ப நாளா டிமிக்கி கொடுத்துக்கொண்டிருக்கிற பதிவர்களை அழைக்கலாம் என்று இருக்கிறேன்(நம்மகிட்டயா வந்தே ஆகணும்ல).




குமிழ் : இந்த தோழி ஆங்கிலத்தில் எழுதுகிற தமிழ் பதிவர் பல நாட்களாக காணவில்லை ஏதோ பரீட்சைங்கிற மாதிரி கேள்விப்பட்டேன்..நிறைய வாசியுங்க நிறைய எழுதுங்க குமிழ்..

ரசிகன்: வலைச்சரத்தோட முதல் வாரங்களில் ஆசிரியரா இருந்த இவரை அதுக்கு அப்புறமா வந்த யாருமே கவனிக்கலைங்கறது என்னுடைய மனவருத்தம் கலக்கலான பதிவர் பின்னூட்டங்கள்ளையும் செமையா கலாய்க்கிறவர் அண்ணே எங்க போயிட்டிங்க கட்டார்லருந்து போனதுக்கப்புறம் எழுதறதேல்லைன்னு முடிவா?! நாட்டாமை தீர்ப்பை மாத்து!



மங்களூர்சிவா: சிவா மாம்ஸ் கல்யாணத்துகப்புறம் நம்ம பதிவுப்பக்கம் வாறதையே விட்டுட்டாரு பல நாட்களுக்கு பிறகு இன்னைக்குத்தான் எங்கேயோ பாத்தேன் மாம்ஸ் மரியாதையா வந்து பின்னூட்டம் போடுங்க...:)



நளாயினி : நான் வலைக்கு வாறதுக்கு ஒரு விதத்துல காரணமா இருந்தவங்க இப்பல்லாம் ஆளையே காணோம் பூக்கள் இன்னும் பேசலாமே தோழி...




பின்குறிப்பு:

\\
விருதை சில பேருக்குத்தான் பகிரலாம் என்பதில் இத்தனை பேரை மட்டுமே அழைத்திருக்கிறேன் மற்றபடி வலையில் பறக்கிற எல்லோருமே பட்டாம்பூச்சிகள்தான் என்பதை முக்கிய குறிப்பாக வைக்கிறேன்...

\\
விருதுக்கு அழைத்திருக்கிற நண்பர்கள் கட்டாயமாய் எனக்கு வந்து பின்னூட்டம் எழுத வேண்டும் அதைவிட முக்கியம் அடிக்கடி பதிவு எழுத வேண்டும் இது அன்புக்கட்டளை அல்லது எச்சரிக்கை. :)

\\
எழுதாமல் அல்லது பகிராமல் இருப்பதில்தான் பாரம் அதிகமாகி விடுகிறது என்பதுதான் உண்மை,ஆனால் எதை எழுத எதை எழுதாமல் விட!

8 comments:

ஹேமா said...

தமிழன்,உங்கள் தேவதையைப்பற்றி இன்னும் நிறைய எழுதுங்க.அதற்கே உங்களுக்கு நிறைய விருதுகள் தரலாம்.விருது வாங்கிப்போட்டம் எண்டு பேசாம இருக்காம இன்னும் கனக்க எழுதவேணும்.இனிய மனம் நிறைந்த பட்டாம்பூச்சி வாழ்த்துக்கள்.

தமிழ் said...

/இலங்கையில் நிகழ்கிற கற்பனைக்கப்பால் விரிகிற மனிதமற்ற செயல்களும் புரிதல் என்பதே கிஞ்சித்தும் இல்லாத மனிதர்களும் சே!! விரக்தி என்பதை விட வெறுப்பைத்தான் அதிகமாய் தருகிறார்கள். என்ன செய்கிறது/

மனத்தை கனக்கிறது

/அன்பென்கிற ஒன்றையே கடவுளாய் நம்புகிறவன் நான், உலகம் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கிறது கொண்டாடத்தெரிந்தவன் சந்தோசமாய் வாழ்கிறான்/

அருமையான வரிகள்
/விருதை சில பேருக்குத்தான் பகிரலாம் என்பதில் இத்தனை பேரை மட்டுமே அழைத்திருக்கிறேன் மற்றபடி வலையில் பறக்கிற எல்லோருமே பட்டாம்பூச்சிகள்தான் என்பதை முக்கிய குறிப்பாக வைக்கிறேன்.../

கலக்கல்

/விருதுக்கு அழைத்திருக்கிற நண்பர்கள் கட்டாயமாய் எனக்கு வந்து பின்னூட்டம் எழுத வேண்டும் அதைவிட முக்கியம் அடிக்கடி பதிவு எழுத வேண்டும் இது அன்புக்கட்டளை அல்லது எச்சரிக்கை. :)/

வந்துவிட்டேன் . சும்மா

/எழுதாமல் அல்லது பகிராமல் இருப்பதில்தான் பாரம் அதிகமாகி விடுகிறது என்பதுதான் உண்மை,ஆனால் எதை எழுத எதை எழுதாமல் விட!/

சரியாக சொன்னீர்கள்

வாழ்த்துகள்

அருண்மொழிவர்மன் said...

இலங்கையில் நடைபெறுவதை கேட்க கேட்க எமது இயலாமையும், கையறு நிலையும் மிகுந்த மன உளைச்சலுக்குள் எம்மை தள்ளுகின்றன

Divyapriya said...

வாழ்த்துக்கள்...

மேவி... said...

வாழ்த்துக்கள்... வளர்க மேம் மேலும்.....

புதியவன் said...

வாழ்த்துக்கள் தமிழன்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அன்பென்கிற ஒன்றையே கடவுளாய் நம்புகிறவன் நான், உலகம் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கிறது கொண்டாடத்தெரிந்தவன் சந்தோசமாய் வாழ்கிறான் இந்த வார்த்தைகள் மட்டுமே போதும்//

மிகச் சரி


இலங்கையில் நிகழ்கிற கற்பனைக்கப்பால் விரிகிற மனிதமற்ற செயல்களும் புரிதல் என்பதே கிஞ்சித்தும் இல்லாத மனிதர்களும் சே!! விரக்தி என்பதை விட வெறுப்பைத்தான் அதிகமாய் தருகிறார்கள். என்ன செய்கிறது இந்த இளைய சமுதாயம்! யாருமே நாட்டின் வரலாறு தெரியாதவர்களா அல்லது...//

என்ன சொல்வது அல்லது செய்வது என்றே தெரியவில்லை.

Kumiththa said...

வாழ்த்துக்கள் தமிழன். விருதுக்கு நன்றி. சீக்கிரம் பதி விடுகிறேன். மன்னிக்கவும் தாமதத்துக்கு.